Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Mangal Gochar April 2022: செவ்வாய் கும்பத்திற்கு போவதால் அடுத்த ஒரு மாசம் இந்த ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்!
மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இத்தகைய செவ்வாய் மகர ராசியில் இருந்து வெளியேறி, கும்ப ராசிக்கு ஏப்ரல் 07 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 14:24 மணிக்கு இடம் பெயர்கிறார்.
மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இத்தகைய செவ்வாய் மகர ராசியில் இருந்து வெளியேறி, கும்ப ராசிக்கு ஏப்ரல் 07 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 14:24 மணிக்கு இடம் பெயர்கிறார். இந்த ராசியில் செவ்வாய் மே 17 ஆம் தேதி வரை இருந்து, பின் மீன ராசிக்கு இடம் பெயர்வார்.

செவ்வாயின் நட்பு கிரகங்கள் சூரியன், குரு மற்றும் சந்திரன் ஆகியவை ஆகும். சுறுசுறுப்பான கிரகமான செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் முதல், நான்காவது, ஏழாவது, எட்டாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டில் இருந்தால், அது மங்கள தோஷத்தை உருவாக்கும். இத்தகைய செவ்வாய் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். குழந்தைகள் மூலம் நற்செய்திகள் கிடைக்கும். வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேண வேண்டும். இக்காலத்தில் இடமாற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மன அமைதியும், சந்தோஷம் நிறைந்திருக்கும். மிகவும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் உங்கள் வருமானத்தின் ஆதாரமாக மாறும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நண்பர்களின் உதவியால் வேலை கிடைக்கும். ஆனால் அதற்காக குடும்பத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் உங்கள் வேலையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வேலை அதிகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்க வேண்டுமென்ற ஆசை அதிகரிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் ஆன்மீக ஸ்தலத்திற்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மத நடவடிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இனிப்பு உணவுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருங்கள். குடும்ப வாழ்க்கை சற்று கடினமாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் நண்பர்களின் உதவியைப் பெறுவீர்கள். செலவுகள் சற்று அதிகமாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. வேலை அதிகமாக இருக்கும். உங்களின் ஒரு சொத்து வருமான ஆதாரமாக மாறும். உங்களின் தாயார் ஆதரவு இக்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் உங்களின் மரியாதை அதற்கேற்ப கிடைக்கும். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் பயணத்தின் போது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் சிரமங்கள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். நண்பர்களின் உதவியால், உங்களால் வருமானம் ஈட்ட முடியும்.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் உங்கள் மனம் அமைதியற்று இருக்கும். தேவையில்லாத சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள். கல்வி மற்றும் அறிவுசார் வேலைகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சம்பள உயர்வு பெறுவதற்கும் வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களிடம் இருந்து வணிகத்திற்கான வாய்ப்பைப் பெறலாம். இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் குடும்பத்தின் வயதான ஒருவரிடம் இருந்து இக்காலத்தில் பணத்தைப் பெறுவீர்கள்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுஙக்ள். குடும்பத்தில் ஏதேனும் விசேஷங்கள் நடக்கலாம். வியாபாரத்தில் கவனமாக இருங்கள். கடின உழைப்பு அதிகமாக இருக்கும். ஆனால் அதற்கேற்ற பலன் கிடைக்காது. இக்காலத்தில் குடும்ப பெரியவர்களிடம் பணத்தைப் பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காத்தில் திடீரென்று பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை சற்று கடினமாக இருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் பராமரிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் நண்பர்களின் ஆதரவை இக்காலத்தில் பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications