Latest Updates
-
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன?
பிப்ரவரி 26-ல் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
ரிஷப ராசியில் ஏற்கனவே செவ்வாய் பயணித்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் ரிஷப ராசியில் பிப்ரவரி 26 ஆம் தேதி பயணிக்கவுள்ளார். இதனால் 2023 பிப்ரவரி 26 ஆம் தேதி மகாலட்சுமி யோகமானது ரிஷப ராசியில் உருவாகவுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில சமயங்களில் கிரக பெயர்ச்சியால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ரிஷப ராசியில் ஏற்கனவே செவ்வாய் பயணித்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் ரிஷப ராசியில் பிப்ரவரி 26 ஆம் தேதி பயணிக்கவுள்ளார். இதனால் 2023 பிப்ரவரி 26 ஆம் தேதி மகாலட்சுமி யோகமானது ரிஷப ராசியில் உருவாகவுள்ளது.

இந்த மகாலட்சுமி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த மங்களகரமான யோகத்தால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் திடீர் பண வரவு மற்றும் முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மகாலட்சுமி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு சிக்கிய பணம் கைக்கு கிடைக்கப் போகிறது. வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த யோக காலத்தில் செல்வம் பெருகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி யோகமானது நல்ல சாதகமான பலன்களை வழங்கும். இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இந்த யோக காலத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் மரியாதை அதிகரிக்கும். ஊடகம் மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறுவார்கள். திருமணமான தம்பதிகளுக்கு தங்கள் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மகாலட்சுமி யோகமானது நற்பலன்களை வாரி வழங்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் வசதிகள் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். இக்காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications