For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடன் தீர்க்கணுமா? அப்ப இந்த நேரத்தில் பணத்தை திருப்பி கொடுங்க...

|

நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட 24 மணிநேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,கடனில் ஒரு சிறு தொகையைத் தனியே எடுத்து வைத்தால், அதிசயமாகக் கடன் தீர்கிறது. மேஷ லக்னமும் அசுவினி நட்சத்திரமும் கூடிய நேரமான சனிக்கிழமையன்று கடன் தீர்க்கக் கூடிய மைத்ரேய முகூர்த்த நேரம் வருகிறது. இருக்கிற கடனையெல்லாம் அடைச்சிட்டு நிம்மதியா இருக்கணும் என்று பலரும் நினைக்கின்றனர். மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ரேய முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.

Maitreya Muhurat Debt Repayment Date and Time

ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும். அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும் அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.

MOST READ: உங்களுக்கு பிபி, கொலஸ்ட்ரால் வராம இருக்கணுமா? அப்ப மறக்காம தினமும் இத கொஞ்சம் சாப்பிடுங்க...

லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் பலன்களை பெறலாம். செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100% பலன்களை பெறலாம். இந்த நாட்களில் நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தரவேண்டும், அவ்வளவுதான் அந்த பெரும் தொகையானது சிறுக சிறுக அடைபட்டுவிடும். நமக்கு சிரமம் இல்லாமலேயே .என்னதான் கால நேரங்கள் நமக்கு உறுதுணையாக இருந்தாலும், சரியான திட்டமிடலும், கடின உழைப்பும் இருந்தால் சகல செல்வங்களையும், சிறப்புகளையும் பெற்று வாழலாம்.

MOST READ: அசுத்தமான கல்லீரலை சுத்தம் செய்யணுமா? இத காலையில தினமும் ஒரு டம்ளர் குடிங்க...

கடன் உள்ள காலங்களில் இறைவழிபாட்டிற்காக பொருட்செலவு செய்தல், பணம் செலவு செய்தால் கூடாது. இன்னும் சொல்லப்போனால் கடன் வாங்கி கற்பூரம்கூட ஏற்றக்கூடாது. இறைவனை மனதால் துதித்தலே அதிக பலனை தரும். லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்தல் நன்று எக்காரணம் கொண்டும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளவர்கள் அதிக செலவாகும் ஹோமங்களை செய்யவேண்டாம். சாதாரண வழிபாடே போதுமானது. மைத்ர முகூர்த்தம் நாட்களில் கடன் திருப்பி தந்து முழுகடனும் நீங்கி நல்அமைதியான வாழ்வு வாழ இறைவன் அருளட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடனை அடைக்கும் முகூர்த்தம்

கடனை அடைக்கும் முகூர்த்தம்

எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் நேரம் தான் மைத்ர முகூர்த்தம். நீங்கள் பெருந்தொகையாகத் தரவேண்டிய கடன் தொகையில், கொஞ்சமேனும் குறிப்பிட்ட இந்த நாளில், இந்த நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பிக் கொடுங்கள். எவ்வளவு பெரும் தொகையானாலும், சிறுக சிறுக அடைபட்டுவிடும் என்பது உறுதி.

ஜோதிடத்தில் கடன்

ஜோதிடத்தில் கடன்

ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. ஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாக கூறப்பட்டிருக்கிறது. காலபுருஷனுக்கு ஆறாமிடமாக கன்னி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்கும் கிரகமும் கடனின் தன்மையை பற்றி கூறும் அமைப்பாகும்.

கடன் தொல்லைக்கு காரணம்

கடன் தொல்லைக்கு காரணம்

ஜாதகப்படி லக்னாதிபதி 6ம் இடத்தில் பகைபெற்றோ தீயகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து தசாபுத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் வம்பு வழக்கு கடன் தொல்லைகள் ஏற்படும். லக்னாதிபதி 6ஆம் வீட்டிலும் 6ஆம் வீட்டின் அதிபதி லக்னத்திலும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்தாலும், அவர்களுக்கு கடன் பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும்.

கடனை வாங்கவே வாங்காதீங்க

கடனை வாங்கவே வாங்காதீங்க

குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும் போது கடன் வாங்க கூடாது. எனவே ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார். குரு ராகு, கேது கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடனை அடைக்கவோ முயற்சி செய்யக் கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும் போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது.

மைத்ரேய முகூர்த்தம் எப்போது?

மைத்ரேய முகூர்த்தம் எப்போது?

செவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும். அதுபோல சனிக்கிழமையும் மேஷ லக்னமும் சேருகின்ற நேரம் மைத்ரேய முகூர்த்தமாகும். செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது. மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம். சனிக்கிழமை மேஷ லக்னம் அசுவினி நட்சத்திரம் இணைவதால் மைத்ர முகூர்த்த காலமாகிறது. சனிக்கிழமையான இன்று மதியம் 1.10 முதல் 3.10 வரை கடன் அடைக்கும் காலமாகும்.

கடன் பிரச்சினை தீரும்

கடன் பிரச்சினை தீரும்

கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிப்பவர்கள் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து, அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு. கடன் கொடுத்தவர், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க மறுக்கிறார் எனில், சிறு சிறு தொகையாக நமது வங்கிக் கணக்கில் சேர்த்து சேமித்து, பிறகு மொத்தமாக அடைக்கலாம். அப்படி, மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நேரமானது மைத்ர முகூர்த்தமாக இருக்கும்பட்சத்தில் வெகு சீக்கிரத்தில் பணம் சேர்ந்து, மொத்த கடனும் அடைபடும்.

2020 ஆம் ஆண்டு கடன் தீர்க்கும் நாட்கள்

2020 ஆம் ஆண்டு கடன் தீர்க்கும் நாட்கள்

4.1.2020 சனி மதியம் 1.10 முதல் 3.10 வரை

1.2.2020 சனி காலை 11.52 முதல் மதியம் 1.52 வரை

16.2.2020 ஞாயிறு இரவு 12.08 முதல் நள்ளிரவு 2.08 வரை

28.2.2020 வெள்ளி காலை 9 முதல் 11 வரை;

8.3.2020 சனி காலை & இரவு 8.53 முதல் 10.53 வரை; மதியம் & நள்ளிரவு 2.53 முதல் 4.53 வரை;

14.3.2020 வெள்ளி இரவு 10.04 முதல் 12.04 வரை;

21.3.2020 சனி காலை இரவு 8.39 முதல் 10.39 வரை மதியம் நள்ளிரவு 2.39 முதல் 4.39 வரை;

26.3.2020 வியாழன் காலை 6.52 முதல் 8.52 வரை; 27.3.2020 வெள்ளி காலை 6.56 முதல் 8.56 வரை;

11.4.2020 சனி இரவு 8.12 முதல் 10.12 வரை கடனில் ஒரு சிறு பகுதியை அடைக்கலாம்.

இந்த மைத்ரமுகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனில் சிறு தொகையை கட்ட தொடங்கினாலே போதும். விரைவில் கடனை தீர்க்கும் வளம் பெற்று விடுவீர்கள். கடன் சுமையை தீர்த்து வைக்கும். மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். செவ்வாய்க்கிழமைகளில் கடன் வாங்கவோ வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுக்கவோ கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Maitreya Muhurat Debt Repayment Date and Time

Maithra muhurtham is the timing used to reduce the debt by paying the portion of debt during the muhurtha time.
Story first published: Saturday, January 4, 2020, 11:04 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more