For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாசிவராத்திரி நாளில் சிவனை நினைத்து திருநீறு பூசினால் என்ன கிடைக்கும் தெரியுமா?

திருநீறு என்பது சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள் நெற்றியில் இட்டுக்கொள்வது என்பது இந்துக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அதோடு சிவனடியார்கள் பெரிதும் விரும்பி அணிவதும் இந்த திருநீறு தான்.

|

சிவபெருமான் உடல்முழுவதும் பூசியிருப்பது திருநீறு. இந்த திருநீறை நாம் விபூதி என்று கூறுகிறோம். சைவ சமயத்தவர்கள். அதாவது சிவபெருமானை வணங்குபவர்கள் நெற்றியில் விபூதி பூசாமல் எங்கும் செல்லமாட்டார்கள். நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விபூதி திகழ்கிறது.

திருநீறு பூசுவதால் கண்டத்திற்கு மேல் செய்த பாவம் நீங்கும். நெற்றியில் பூசுவதால் பிரம்மனால் எழுதப்பட்ட கெட்ட எழுத்துகளின் தோஷம் நீங்கும். என்று திருமுருக கிருபானந்தவாரியார் கூறியுள்ளார். கண்டத்தில் பூசுவதால் விலக்கப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் குற்றம் நீங்கும், நாபியில் பூசுவதால் பீஜத்தினால் செய்த தோஷம் நீங்கும், முழந்தாள்களில் பூசுவதால் கால்களால் செய்த பாவம் நீங்கும் என்று கூறி உள்ளார்.

Maha Shivratri 2020: Speciality Of The Tiruneeru/Vibhuti

முக்காலமும் உணர்ந்த தபஸ்வியான துர்வாச முனிவர், தீருநீற்றை சாஸ்திர நெறிப்படி அணிந்து சதா எம்மை பூஜித்து வருபவர். அவர் தற்செயலாக பித்ரு லோகக் கிணற்றை குனிந்து பார்த்த போது, அவருடைய நெற்றியில் இருந்து ஒரு சிறு துளியளவு திருநீறானது கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. அந்த சிறுதுளி திருநீற்றின் மகிமையால் நரகலோகமே சொர்க்க லோகமாக மாறிப்போனது, என்று உண்மையை விளக்கினார் இறையனார்.

MOST READ: மகா சிவராத்திரி 2020: உங்க குலதெய்வத்தை வீட்டில் தங்க வைக்க இதை கண்டிப்பாக செய்யுங்க...

திருநீறு என்பது சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள் நெற்றியில் இட்டுக்கொள்வது என்பது இந்துக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அதோடு சிவனடியார்கள் பெரிதும் விரும்பி அணிவதும் இந்த திருநீறு தான். அதனால் தான் சைவ சமய குறவர்கள் நால்வரில் முதல்வரான திருஞானசம்பந்தர் தன்னுடைய தேவாரப் பதிகத்தில் திருநீறைப் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மந்திரமாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருஆல வாயான் திருநீறே

என்று திருநீற்றின் மகிமையை பாடியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருநீறாகும் சாம்பல்

திருநீறாகும் சாம்பல்

திருநீறு என்பது சைவ சமய அடையாளமாக மட்டும் கருதப்படுவதில்லை. அது அற்புதமான மூலிகை மருந்தும் கூட. நம்முடைய உடலில் தங்கியுள்ள கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றும் செயலை செய்கிறது. அதனால் தான் அந்தக்காலத்தில் திருநீறை சித்தர்கள் மூலிகைகளைக் கொண்டு உருவாக்கியிருக்கின்றனர். திருநீறு என்பது மூன்றுவிதமான பொருட்களைக் கொண்டு நெருப்பில் எரித்து, நன்கு வடிகட்டி அதிலிருந்து பெறப்படும் சாம்பல் ஆகும்.

நீறு இல்லா நெற்றி பாழ்

நீறு இல்லா நெற்றி பாழ்

இன்றைய கம்ப்யூட்டர் காலத்தில் யாரும் மனப்பூர்வமாக திருநீற்றை பூசிக்கொள்வது கிடையாது. அப்படியே பூசிக்கொண்டாலும் கூட யாருக்கு தெரியாத வகையில், மிகவும் மெல்லியதாக பூசிக்கொள்கின்றனர். ஆனால் இப்போதும், நம்வீட்டு பெரியவர்கள், அது ஆண்களாக இருந்தாலும் சரி அல்லது பெண்களாக இருந்தாலும் சரி, திருநீறை நன்கு நெற்றி நிறைய பூசிக்கொள்கிறார்கள். அப்போது தான் அவர்களுக்கு பரமதிருப்தி ஏற்படும். அதனால் தான் நம் முன்னோர்கள் நீறு இல்லாத நெற்றி பாழ் என்று சொல்லியிருக்கின்றனர்.

தலைவலி, தலைபாரம் போக்கும்

தலைவலி, தலைபாரம் போக்கும்

அதிலும், பெரியவர்களாக இருந்தால், காலையில் கண்விழித்து காலைக் கடன்களை முடித்து முகத்தை அலம்பிய உடன் நெற்றி நிறைய திருநீறை பூசிக்கொண்டால் தான் அவர்களுக்கு அன்றைய பொழுதே விடியும். இல்லாவிட்டால் அவர்களுக்கு எதையோ பறிகொடுத்தது போல் ஆகிவிடும். திருநீறை நமது நெற்றியில் தினந்தோறும் பூசி வந்தாலே, தலையில் நீர் கோர்த்து தலைவலி, தலைபாரம் போன்ற உபாதைகள் ஏற்படாமல் தடுக்கும்.

பாவங்களை பஸ்பமாக்கும் திருநீறு

பாவங்களை பஸ்பமாக்கும் திருநீறு

திருநீற்றுக்கு என்பது விபூதி, பசிதம், பஸ்பம், கஷாரம், ரகஷா என ஐந்து வகையான காரணப் பெயர்களும் உண்டு. என்றைக்கும் வற்றாத நிறைந்த செல்வத்தை அளிப்பது இதை விபூதி என்றும், அனைத்துவிதமான பாவங்களையும் எரித்து பஸ்பமாக்குவதால் பஸ்பம் என்றும், நம்முடைய தோற்றப் பொலிவை அதிகரிப்பதால் பசிதம் என்றும், எதிர்வரும் ஆபத்துகளில் இருந்து நம்மை காப்பதால் கஷாரம் என்றும், ஏவல், பிசாசு போன்ற துர்தேவதைகளிடம் இருந்து காப்பதால் ரகஷா என்றும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

பித்ரு லோக கிணறு

பித்ரு லோக கிணறு

புராண காலத்தில் ஒரு நாள், சப்த ரிஷிகளில் ஒருவரான துர்வாச முனிவர், தான் காலை வேளையில் முடிக்க வேண்டிய அனைத்து அனுஷ்டானங்களையும் முடித்துக்கொண்டு, எம்பெருமான் ஈசனை மனதில் நினைத்துக்கொண்டு, நெற்றியில் திருநீறை இட்டுக்கொண்டு, பித்ரு லோகத்தை நோக்கி புறப்பட்டார். அவர் செல்லும் வழியில் ஒரு கிணறு தென்பட்டது. நாம் நாள்தோறும் இந்த வழியாகத் தானே செல்கிறோம். ஒரு நாளும் இவ்வளவு பெரிய கிணற்றை பார்த்ததில்லையே என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே, அந்தக் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துவிட்டு மீண்டும் தன்னுடைய நடையை கட்டினார்.

துர்வாசர் எட்டிப்பார்த்த கிணற்றுக்குள் தான் பூலோகத்தில் பாவச் செயல்களை செய்தவர்கள் அனைவரும் வதைபட்டுக் கொண்டிருந்தனர். நாம் செய்த பாவச் செயல்கள் எப்போது தான் தீருமோ என்று கவலைப்பட்டு சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஒரு கஷணம் துர்வாசர் அந்தக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு அந்தப் பக்கம் நகர்ந்த உடனேயே அந்தக் கிணற்றுக்குள் தலைகீழ் மாற்றம் உண்டானது.

சொர்க்கமாக மாறிப்போன நரகம்

சொர்க்கமாக மாறிப்போன நரகம்

அந்தக் கிணற்றுக்குள் சுற்றித் திரிந்த கொடிய நாகங்களும், ஊர்வன ஜந்துக்களும் மலர் மாலைகளாக மாறிவிட்டன. நிற்காமல் பொழிந்து கொண்டிருந்த அமில மழை நின்று நிஜ மழை கொட்டத் தொடங்கியது. அனலை கக்கிக்கொண்டிருந்த தீ ஜுவாலை நின்று இதமான தென்றல் காற்று வீச ஆரம்பித்தது. அந்த நரகக் கிணறு முழுவதும் சுகந்த நறுமணம் வீசியது. இதனால் இத்தனை நாட்களாக துன்பத்தை அனுபவித்து வந்த பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தக் கூத்தாடினர்.

பாவ ஆத்மாக்கள் ஆனந்தக்கூத்தாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த எம கிங்கரர்கள், பயந்துபோய், ஓடிச்சென்று நடப்பவற்றை அப்படியே எமதர்மனிடம் விளக்கினார்கள். அதைக் கேட்ட எமன், அதிர்ந்து போய் அவனும் ஓடிவந்து அந்த கிணற்றைப் பார்த்து அதிசயித்தான். இது எப்படி சாத்தியமானது, சதா அவஸ்தைப்பட வேண்டியவர்கள் இப்படி ஆனந்தக் கூத்தாட காரணம் என்ன? என்ற பதட்டத்துடன் நடப்பதை தேவர்களின் தலைவனான இந்திரனிடம் தெரிவித்தான்.

ஈசனை சரணடைந்த இந்திரன்

ஈசனை சரணடைந்த இந்திரன்

இந்திரனும் ஓடிவந்து பார்த்தான். அவனுக்கும் ஏன் இப்படி நடக்கிறது, அதற்கு காரணம் என்னவென்று எதுவும் விளங்கவில்லை. வேறு வழியில்லாமல், இந்திரனும், எமதர்மனும் சேர்ந்து நடப்பதற்கான காரணத்தை அறிய எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனை சரணடைந்தனர். அவர் சிரித்துக்கொண்டே தன் நெற்றியைக் காட்டி, மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல் மூன்றையும் சேர்த்து ஓம் (அகார, உகார, மகார) என்று சொல்லிக்கொண்டு இந்தத் திருநீற்றை நெற்றி நிறைய பூசிக்கொள்ள வேண்டும்.

எல்லாம் திருநீற்றின் மகிமை

எல்லாம் திருநீற்றின் மகிமை

முக்காலமும் உணர்ந்து தபஸ்வியான துர்வாச முனிவர், இந்த தீருநீற்றை சாஸ்திர நெறிப்படி அணிந்து சதா எம்மை பூஜித்து வருபவர். அவர் தற்செயலாக பித்ரு லோகக் கிணற்றை குனிந்து பார்த்த போது, அவருடைய நெற்றியில் இருந்து ஒரு சிறு துளியளவு திருநீறானது கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. அந்த சிறுதுளி திருநீற்றின் மகிமையால் நரகலோகமே சொர்க்க லோகமாக மாறிப்போனது, என்று உண்மையை விளக்கினார் இறையனார்.

திருநீறும் மகா சிவராத்திரியும்

திருநீறும் மகா சிவராத்திரியும்

அது தான் திருநீறின் மகிமை. எனவே, நாமும், எல்லாம் வல்ல சர்வேஸ்வரனை மனதால் நினைத்து வரும் பிப்ரவரி 21ஆம் நாளான மகாசிவராத்திரி அன்று நெற்றி நிறைய திருநீறை அணிந்து விரதமிருந்து அவனருள் பெறுவோம்.

பாடற் கினிய வாக்களிக்கும்

பாலும் சோறும் பரிந்தளிக்கும்

கூடற்கினிய அடியவர்தம்

கூட்டமளிக்கும் குணம் அளிக்கும்

ஆடற்கினிய நெஞ்சை நீ

அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்

தேடற் கினிய சீர் அளிக்கும்

சிவாய நமஎன் றிடுநீறே...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Maha Shivratri 2020: Speciality Of The Tiruneeru/Vibhuti

The Durvasa Muni, worships us constantly by wearing the Tiruneeru. When he accidentally stooped down the Pitru Loka well, a small drop of water from his forehead fell into the well. Lord Siva plained the fact that the glory of the little pantheon turned into a heavenly heaven.
Story first published: Wednesday, February 19, 2020, 16:58 [IST]
Desktop Bottom Promotion