For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்களை மகாசிவராத்திரியில் தரிசித்தால் கிடைக்கும் புண்ணியங்கள்!

மகா சிவராத்திரி தினமான இன்று சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களை தரிசனம் செய்யலாம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம்.

|

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம். இந்த பஞ்சபூதங்களின் இயக்கத்தைக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது. பரம்பொருளாகிய இறைவன் இந்த பஞ்சபூதங்களில் கலந்திருந்து நம்மை வழிநடத்துகிறார். ஆன்மிக ரீதியாக பஞ்சபூதங்களுக்கும் திருத்தலங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். மகா சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானின் பஞ்சபூத தலங்களையும், சிவன் தாண்டவம் ஆடிய பஞ்சசபைகளிலும் தரிசனம் செய்யலாம்.

Maha Shivratri 2020: Lord Shiva Pancha Bhootam Stalams in TamilNadu

எல்லா யாகங்களையும் தர்மங்களையும்விட இந்த மகாசிவராத்திரி விரதம் விசேஷமானது என்றும் மகாசிவராத்திரி விரதமிருக்கும் சிவனடியார்களைக் கண்டு எமன் அஞ்சுவார் என்றும் சிவபுராணம் கூறுகிறது. இந்த நாளில் விடிய விடிய உறங்காமல் சிவ புராணம் படித்தும் சிவனை வணங்கியும் வர நன்மைகள் நடைபெறும்.

MOST READ: மகா சிவராத்திரி 2020: சிவனிடம் இருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியவை!

சிவனின் பஞ்சபூத தலங்களில் ஆகாயத்திற்குரிய சிதம்பரம் திருத்தலமே முதன்மையானதும், பழமையானதும் ஆகும். பஞ்சபூத தலங்களுக்குச் செல்லும்போது, சிதம்பரத்தில் தொடங்கி ஸ்ரீகாளகஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சீபுரம் சென்று யாத்திரையை நிறைவு செய்வது மரபு.

MOST READ: மகா சிவராத்திரி 2020: சிவனை நினைத்து விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்...

நிலம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், நீர் ஸ்தலம் திருவானைக்காவல் கோவில், வாயு ஸ்தலம் ஸ்ரீ காலஹஸ்தி, ஆகாயம் ஸ்தலம் சிதம்பரம் கோவில், நெருப்பு ஸ்தலம் திருவண்ணாமலை கோவில். அதேபோல சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து இடங்களிலும் உள்ள சிவாலயங்களில் நடராஜர், தன் நடனத்தால் சிறப்பித்த சபைகள் இருக்கின்றன. இந்த ஆலயங்களில் நடைபெறும் சிவராத்திரி விழாக்களிலும் பங்கேற்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Maha Shivratri 2020: Lord Shiva Pancha Bhootam Stalams in TamilNadu

Benefits of visiting lord shiva pancha bhootam stalams in tamilnadu during maha shivratri. Read on...
Story first published: Tuesday, February 18, 2020, 11:45 [IST]
Desktop Bottom Promotion