Latest Updates
-
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது.. -
குருபகவான் அஸ்தமன நிலையில் இருப்பதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
இந்த 3 சின்னங்களில் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் நீங்க மிகப்பெரிய துரதிர்ஷ்டசாலியாம் - ஜாக்கிரதை -
ருசியான வெஜ் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
பொலிவிழந்து இருக்கும் முகத்தை பளிச்சுன்னு மாத்தணுமா? அப்ப காபித் தூளை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை 25-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் வெற்றிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மீனத்தில் உருவாகியுள்ள மகா சாம்ராஜ்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்...
2022 நவம்பர் 19 ஆம் தேதி மீன ராசியில் உருவான மகா சாம்ராஜ்ய யோகத்தால், 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபமும், முன்னேற்றம் பெறுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில கிரகங்களின் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமும், சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கலாம். அந்த வகையில் 2022 நவம்பர் 19 ஆம் தேதி மீன ராசியில் உருவான மகா சாம்ராஜ்ய யோகத்தால், 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபமும், முன்னேற்றம் பெறுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் நற்பலனை அளிக்கும். குறிப்பாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த யோக காலத்தில் வாகனம் மற்றும் சொத்து வாங்குவதில் உறுதியாக இருப்பீர்கள். உங்களின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். நல்ல பண ஆதாயம் கிடைக்கும். குடும்பம் அல்லது நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள்.

கன்னி
மகா சாம்ராஜ்ய யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவும், நல்ல பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். அதுவும் இதுவரை சந்தித்த ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகளின் வியாபாரம் விரிவடையும். வணிகத்தில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு மகா சாம்ராஜ்ய யோகம் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தை தரும். அரசியலில் இருப்பவர்களுக்கு, இக்காலத்தில் நல்ல பதவி கிடைக்கும். சமூகத்தில் பெயரும் புகழும் அதிகரிக்கும். முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். பணபுரிபவர்களுக்கு இந்த யோக காலம் அற்புதமானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications