Just In
- 15 min ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தா...அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கணைய புற்றுநோயோட அறிகுறியாம்!
- 4 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வரவிற்கு மேல் அதிகமாக செலவு செய்ய நேரிடும்..
- 14 hrs ago
பிட்சா தோசை
- 14 hrs ago
உங்க முடி நீளமா கருகருனு அடர்த்தியா வளர எலுமிச்சை சாறை இந்த 5 வழிகளில் யூஸ் பண்ணா போதுமாம்!
Don't Miss
- Automobiles
350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு... போட்டிக்கு யாருமே இல்ல...
- News
திராவிட சிங்கங்கள் கூட்டத்தில் ஆட்டு குட்டியை பற்றி பேசுவதா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொளேர் அட்டாக்
- Finance
இன்றைய தங்கம் விலை எப்படியிருக்கு.. சென்னையில் என்ன நிலவரம்?
- Sports
மோடி மைதானத்திற்கு கிடைத்தது மோட்சம்.. ஒரு வழியாக ஆசை நிறைவேற போகுது.. பிசிசிஐ தந்த அப்பேட்
- Movies
ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள் ஸ்பெஷல்.. அனிருத் பண்ண தரமான சம்பவம்.. NTR 30 அறிவிப்பு வந்துடுச்சு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
பொதுவாக கிரகண நிகழ்வுகள் மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. இந்து நாட்காட்டியின் படி சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகிய இரண்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கிரகணத்தின் போது எந்த ஒரு சுப காரியமும் செய்யக்கூடாது என்று நம்பப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2022 ஏப்ரல் 30 அன்று நிகழ்ந்தது. சூரிய கிரகணம் நிகழ்ந்த 15 நாட்களுக்கு பிறகு சந்திர கிரகணம் நடக்க உள்ளது. அதாவது 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ஆம் தேதி நிகழவுள்ளது.
மே மாதத்தில் நிகழும் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும். ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ஆம் தேதி விருச்சிக ராசியில் நிகழப்போகிறது. இப்போது 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். கடன் வாங்குவதில் இருந்து சற்று விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்களின் அதிக உற்சாகமும் பெரிய இழப்பிற்கு வழிவகுக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் குழப்பம் ஏற்படும். இந்நாளில் மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். இந்நாளன்று உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை நுழைய விடாதீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சந்திர கிரகண நாளில் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். பண விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பயணம் மற்றும் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்
கடக ராசிக்காரர்களே! சந்திர கிரகண நாளன்று உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படுவீர்கள். பணம் அதிகம் செலவாகும் வாய்ப்புள்ளது. வரவுக்கு மீறிய செலவு காரணமாக உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மன அழுத்தம் மற்றும் குழப்பத்தில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்ய வேண்டும். இந்நாளில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். சண்டைக்கான சூழ்நிலைகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகண நாளன்று ஒருவித பயம் மனதில் இருக்கும். உங்கள் போட்டியாளர்களிடம் கவனமாக இருங்கள். பணியிடத்தில் மற்றும் வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இந்நாளில் சற்று கவனமாக இருங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! அதிகளவிலான உற்சாகம் தீங்கை உண்டாக்கும். பண விஷயத்தில் கவனமாக இருங்கள். குடும்பத்தில் மூத்த உடன்பிறப்புகளுடனான உறவு பாதிக்கப்படலாம். எதிலும் பேசி வெல்ல முயற்சித்து தோல்வியடையாதீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழலாம். இந்நாளில் புத்திசாலித்தனமாக பணத்தை செலவிடுங்கள். சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். இந்த நாளில் பணம், ஆரோக்கியம், உறவுமுறைகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தகராறு செய்யாதீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! தவறான செயல்களில் இருந்து விலகி இருங்கள். இந்நாளில் தோல்விகளை காணலாம்.உங்களின் இமேஜ் பாழாகலாம். எனவே உங்கள் நடத்தையில் சிறப்பான கவனத்தை செலுத்துங்கள். இந்நாளில் உங்கள் தாயின் ஆசி கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் அதிபதி சனி. ஏற்கனவே ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது. எனவே சந்திர கிரகணத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளில் அவசரப்படாதீர்கள். ஒவ்வொரு பணியையும் பொறுமையுடன் செய்யுங்கள். உங்கள் பதற்றம் அதிகரிக்கும். இதனால் தலைவலியும் ஏற்படலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! உங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். சுத்தத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். வருமான ஆதாரங்களை உருவாக்குவது சற்று கடினமாக இருக்கலாம். பொறுமையாக இருங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! சந்திர கிரகண நாளன்று மன உளைச்சல் அதிகரிக்கலாம். எனவே கவனமாக இருங்கள். ஈகோ கொள்ளாமல் இருங்கள். மற்றவர்களுக்கு உதவினால் நன்மை கிடைக்கும். நல்ல மனநிலையைப் பராமரிக்க முயற்சி செய்யுங்கள்.