Latest Updates
-
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம்
ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வத்தையும், முன்னேற்றத்தையும் தரப் போகுது..
2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு செல்வத்தையும் முன்னேற்றத்தையும் தரும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
இன்று 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் புத்த பூர்ணிமா அன்று நிகழ்கிறது. இந்து நாட்காட்டியின் படி, சந்திர கிரகணம் எப்போதும் பௌர்ணமி நாளில் நிகழ்கிறது. அந்த வகையில் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 15 ஆம் தேதி மதியம் 12.47 மணிக்கு தொடங்குகிறது. இந்த சந்திர கிரகணம் விருச்சிக ராசியில், விசாகம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாவிட்டாலும், ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகணங்கள் மனித வாழ்க்கையில் ஒரு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கிரகணங்கள் மங்களகரமானதாக கருதப்படாவிட்டாலும், இந்த சந்திர கிரகணத்தின் போது உருவாகும் சிறப்பு யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் அளிக்கிறது. 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு செல்வத்தையும் முன்னேற்றத்தையும் தரும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் சிறப்பான பலனைத் தரவுள்ளது. பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. முதலீடு செய்வதற்கு இந்த காலம் ஏற்றதாக இருக்கும். குடும்ப வாழ்க்கை சாதகமாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். செல்வமும், புகழும் பெருகும்.

சிம்மம்
இந்த சந்திர கிரகணம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். குறிப்பாக பணியிடத்தில் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் பணியிடத்தில் ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. இந்த கிரகணத்தால் ஒன்றிற்கு மேற்பட்ட வழிகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சாதகமாகவும், வலுவாகவும் இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடியுங்கள். பணியிடத்தில் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள்.

துலாம்
2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணமானது துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் நற்பலன்களைத் தரும். பணிபுரிபவர்களுக்கு தொழிலில் நல்ல பெரிய வெற்றி கிடைக்கும். கடின உழைப்பின் முழு பலனும் கிடைக்கும். முக்கியமாக நல்ல பண வரவுகள் இருக்கும்.

தனுசு
ஆண்டின் முதல் சந்திர கிரகணம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இந்த கிரகணத்தால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம், வியாபாரத்தில் லாபம், புதிய முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக பணியிடத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிதி நிலைமை வலுவாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நல்ல பண பலன்களைத் தரவுள்ளது. இக்காலத்தில் பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த காலகட்டத்தில் கடின உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
