Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நவகிரகங்களை அடக்க நினைத்த ராவணன் - விளையாடிய சனியின் காலுக்கு நேர்ந்த கதி
ராவணனின் மகன் மேகநாதன் பிறக்கும் நேரம் வந்த போது நவகிரகங்களையும் 11ஆம் வீட்டில் இருக்கும்படி கூறினார். அதன் மூலம் மேகநாதன் சாகவரத்தை அடைய முடியும் என்று இராவணன் எண்ணினான். சனிபகவான் இங்கதான் விளையாட
சனிபகவான் ஒரு நீதிமான். நீதிபதியானவர். ஒருவன் செய்த குற்றங்களுக்குத் தக்கப்படி தண்டனை அளிக்கிறாரோ அதே மாதிரி சனிபகவானும் அவரவர் முற்பிறவியில் செய்த கர்மாக்களுக்குத் தக்கவாறு தண்டனை வழங்குகிறார். எனவே தான் சனி என்றாலே நாம் எல்லோரும் அச்சத்துடனே இருந்து வருகிறோம். சனி பகவானை நினைத்தாலே நம் நெஞ்சும் பதறுகிறது. பயமும் பீதியும் ஏற்படுகிறது. சனைஸ்வரன் என்று கூறப்படும் சனிபகவானுக்கு ஒரு கால் கிடையாது அதற்கு ஒரு புராண கதை உண்டு. அவரது கால் முடமானதற்கு ராவணன்தான் காரணம் என்று கூறுகின்றனர். எப்படி என்று பார்க்கலாம்.
நவகிரகங்களில் சனி பகவான் மனிதர்களுக்கு நீண்ட நாள் வாழும் ஆயுள் தரும் ஆயுள்காரகனாக இருக்கிறார். எனவே சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனீஸ்வரனின் அருள் பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை வழங்குகிறார். மேலும் சுலபத்தில் நோய்கள் பிடிக்காத பலம் வாய்ந்த உடலையும், எந்த சூழ்நிலையிலும் குலையாத மனஉறுதியையும் கொடுக்கிறார். தொழில், வியாபாரங்களில் நிலையான வருமானத்தையும், தொழில் விருத்தியும் உண்டாகும். அரசு மற்றும் தனியார் துறைகளில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்க பெறுவார்கள். எதிரிகளால் வெல்ல முடியாத நிலையும் உண்டாகும்.

ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் மந்தன். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகாலம் தங்குகிறார் சனி பகவான். சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் மேகநாதன் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். எனவேதான் நவகிரகங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான் ராவணன்.

மகன் ஜாதகத்தில் நவ கிரகங்கள்
ராவணன் மகன் ஜாதகம்
நவ கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைக்கிறார் ராவணன். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் மகனின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.

சனியின் விளையாட்டு
விளையாடிய சனிபகவான்
மரணமே நேராத அளவிற்கு ஒரு அசுரன் பிறப்பதா என்று நினைத்த தேவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. நாரதர் மூலம் சனியின் காதில் ஓதினர். உடனே சனிபகவான் தனது விளையாட்டை விளையாடினார். 11ஆம் வீட்டில் இருந்து ஒரு காலை 12ஆம் வீட்டில் வைத்தார். மேகநாதன் பிறக்கும் சமயத்தில் சனியின் இடது கால் 12ம் வீட்டில் இருந்தது.

12ஆம் வீட்டில் சனி
சனி மீது கோபம்
ஒருவர் ஜாதகத்தில் பனிரெண்டாம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், மேகநாதன் ஜாதகத்தில் சனி பகவான் பனிரெண்டாம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் பதினொன்றாம் இடத்தில் இருந்தன.

காலை வெட்டச்சொன்ன ராவணன்
முடமான சனிபகவான்
இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். அப்படி ஒரு கால் வெட்டப்பட்டதாலேயே சனிபகவான் முடமாக இருக்கிறார் என்கின்றன புராணங்கள்.

நீதி வழங்கும் சனி
சனி கொடுக்கும் நீதி
நவக்கிரங்களிலேயே சனி பகவான் வித்தியாசமானவர். மனிதனின் பிறப்பு நிலையில் அவரவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணிய கணக்கின் அடிப்படையிலேயே அவர் இந்த ஜென்மத்தில் பலன்களை அளிக்கவல்லவராவர். சனிபகவான் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப ஒவ்வொரு மனிதனையும் அழவைத்து அவனை கஷ்டப்படுத்தி நீதி வழங்குகிறார்.

சனியின் பாதிப்பு குறைய விரதம்
சனிக்கிழமைகளில் விரதம்
சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனிக்கிழமையில் வருகிற பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்கள் ஏதேனும் ஒன்றில் சனி பகவான் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 சனிக்கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் வீட்டின் பூஜையறையை கழுவி சுத்தம் செய்து, பீடம் வைத்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.

ஊனமுற்றவர்களுக்கு தானம்
சனியின் ஆசி கிடைக்கும்
சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல், அருந்தாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். காலையில் சிறிது உணவை காகங்கள் உண்ண வைக்க வைக்க வேண்டும். காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் சனிபகவான் அம்சம் நிறைந்த வெங்கடாசலபதிக்கு பூஜைகள் செய்ய வேண்டும். மாலையில் பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் வசதி குறைந்த, ஊனமுற்ற நபர்களுக்கு உங்களால் இயன்ற தானங்களை அளிப்பது மிகுந்த நன்மையை தரும். நீல நிற ஆடைகள், எள், நல்லெண்ணெய் போன்றவற்றை அளிப்பது உங்களின் சனி கிரக தோஷங்கள் நீங்கி சனி பகவானின் ஆசிகளை உங்களுக்கு பெற்றுத்தரும்.



Click it and Unblock the Notifications











