Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க
2021-இல் இந்திய மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகள்!
ஆண்டின் இறுதியில் உள்ளதால் கூகுள் 2021 இல் ட்ரெண்ட்டான பல விஷயங்களை வெளியிட்டுள்ளது. அதில் 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் கூகுளில் மக்களால் அதிகம் தேடப்பட்ட உணவுகளையும் வெளியிட்டது.

2021 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் உள்ளோம். இந்த ஆண்டில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றில் சில சுவாரஸ்யமானவை மட்டுமின்றி, சில அதிகம் ட்ரெண்டாகியும் உள்ளன. ஆண்டின் இறுதியில் உள்ளதால் கூகுள் 2021 இல் ட்ரெண்ட்டான பல விஷயங்களை வெளியிட்டுள்ளது. அதில் 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் கூகுளில் மக்களால் அதிகம் தேடப்பட்ட உணவுகளையும் வெளியிட்டது. இக்கட்டுரையில் 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் மக்கள் கூகுளில் தேடியுள்ள டாப் 10 உணவுகளைத் தொகுத்து உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.

எனோகி காளான்
2021 ஆம் ஆண்டு அதிகம் ட்ரெண்ட்டான உணவுப் பட்டியலில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது எனோகி காளான். இந்த சீன எனோகி காளான்கள் எனோகி காளான்கள் சீனா, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் வளரும் நூடுல் போன்ற காளான்கள். இந்த காளான்கள் இந்தியாவில் ஒரு கிலோ 500 ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த காளானை சூப்புகளில் சேர்த்தோ அல்லது ஆம்லெட்டாகவோ செய்து சாப்பிடலாம்.

மோதகம்
2021 ஆம் ஆண்டு அதிகம் மக்களால் தேடப்பட்ட உணவுகளில் விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மோதகத்தை இனிப்பாகவோ அல்லது காரமாகவோ செய்யலாம்.

மெத்தி மட்டர் மலாய்
மெத்தி மட்டர் மலாய் என்றதுமே பலருக்கும் வாயில் எச்சில் ஊறும். ஏனெனில் இது அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த மெத்தி மட்டர் மலாய் சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். ஆகவே தான் 2021 இல் இந்தியாவில் மக்கள் அதிகமாக மெத்தி மட்டர் மலாய் ரெசிபியின் செய்முறையை தெரிந்து கொள்ள அதிகம் கூகுளில் தேடியுள்ளனர் மற்றும் இது மூன்றாவது இடத்தில் உள்ளது.

பாலக்/பசலைக்கீரை
2021 ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் தேடிய மற்றொரு உணவு பாலக். பொதுவாக பாலக் கீரை ஏராளமான சத்துக்களைக் கொண்ட ஆரோக்கியமான மற்றும் சுவையான கீரை. இந்த கீரையை கடைவது மட்டுமின்றி, பாலக் சிக்கன், பாலக் பன்னீர் என்று பலவாறும் சமைத்து சாப்பிடலாம்.

சிக்கன் சூப்
நோய்வாய்ப்பட்டிருக்கும் போது விரைவில் குணமடைய சிக்கன் சூப் உதவும். அதுவும் கொரோனா வந்த பின்னர், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் ஆரோக்கியமான உணவுகளின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் தானோ என்னவோ மக்கள் 2021 ஆம் ஆண்டில் சிக்கன் சூப் பற்றி அதிகம் தேடியுள்ளனர்.

பார்ன் ஸ்டார் மார்ட்டினி
2021 ஆம் ஆண்டு இந்தியாவில் மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட மற்றொரு உணவு தான் பார்ன் ஸ்டார் மார்ட்டினி. பார்ன் ஸ்டார் மார்ட்டினி என்பது வென்னிலா சுவை கொண்ட வோட்கா, பாஸோ, பேஷன் பழச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றால் ஆன ஒரு பேஷன் ஃபுரூட் சுவை கொண்ட காக்டெய்ல் பானம் ஆகும். இந்த காக்டெய்ல் 2002 இல் டக்ளஸ் அன்க்ராவால் உருவாக்கப்பட்டது.

லாசக்னா
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட மற்றொரு உணவு லாசக்னா. இந்த லாசக்னா இறைச்சி சாஸ் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சாஸ் லேயரில் நூடுல்ஸ் மற்றும் சீஸ் பயன்படுத்தி செய்யும் போது, இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த மாதிரியான ரெசிபியை வீட்டில் அனைவரும் இருக்கும் போது விடுமுறை நாட்களில் செய்து சாப்பிடலாம்.

குக்கீஸ்
2021 ஆம் ஆண்டில் மக்கள் குக்கீஸ் எப்படி செய்வதென்றும் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர். இந்த குக்கீஸ் செய்முறை பற்றி அதிகம் தேடப்பட்டதற்கு காரணம் லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருக்கும் போது குழந்தைகளுக்கு செய்து கொடுப்பதற்காக இருக்கலாம்.

மட்டர் பன்னீர்
மட்டர் பன்னீர் ரெசிபியும் 2021 ஆம் ஆண்டில் மக்களால் அதிகம் தேடப்பட்ட உணவாக உள்ளது. பட்டாணி மற்றும் பன்னீர் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ரெசிபி, சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

கசாயம்
கொரோனா வந்த பின்னர் மக்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்தி ஆரம்பித்துள்ளதால், 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் மக்கள் பலரும் கசாயத்தை எப்படி செய்வதென்று கூகுளில் தேடியுள்ளனர். இந்த கசாயம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இருமல், சளி போன்றவற்றைத் தடுக்கவும் உதவக்கூடிய ஆரோக்கியமான பானமாகும்.



Click it and Unblock the Notifications
