For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவை உலுக்கிய டாப் 10 கொலையாளிகள்... 11 வது கொலையாளி யாருனு தெரிஞ்சா உறைஞ்சுருவீங்க...!

|

இந்தியாவில் நாளுக்குள் நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெண்கள் மீதான வன்முறைகளும், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தினமும் தவறாமல் செய்தித்தாள்களில் இடம்பெறுகிறது. செய்த தவறிலிருந்து பணம் இருந்தால் வெளிவந்து விடலாம் அல்லது பல வருடங்கள் கழித்தே தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தண்டனைகள் கடுமையாகாத வரை இந்த குற்றங்களை ஒருபோதும் தடுக்க முடியாது.

list of indian serial killers

கொலைகாரர்களுக்கும், தொடர் கொலைகாரர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. ஆத்திரத்தில் கொலை செய்பவர்கள் அல்லது திட்டமிட்டு கொலை செய்பவர்கள் ஒரே கொலையுடன் நிறுத்திவிடுவார்கள். ஆனால் தொடர் கொலைகாரர்கள் அவ்வாறு இருக்கமாட்டார்கள், அவர்களுக்கு இன்பமே கொலை செய்வதில்தான் இருக்கும். இப்படிப்பட்ட தொடர்கொலை சம்பவங்கள் இந்தியாவில் பல நடந்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சில தொடர் கொலைகாரர்களின் உறையவைக்கும் பின்னணிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆட்டோ சங்கர்

ஆட்டோ சங்கர்

இந்த பெயரை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது. இவனின் இயற்பெயர் கௌரிசங்கர் என்பதாகும். ஆரம்பகாலத்தில் சாதாரண சாராய வியாபாரியாக இருந்த இவரை இந்தியாவின் பயங்கரமான தொடர்கொலைக்காரர்கள் பட்டியலில் இடம் பெற வைத்தது 80களில் இவர் செய்த காரியங்கள்தான். 1988 ஆம் ஆண்டு ஆறு மாத காலத்தில் சென்னை திருவான்மியூரை சேர்ந்த 9 இளம் பெண்களை கடத்தி கொலை செய்தார். ஆரம்பகாலத்தில் சினிமா பாணியில் கொலை செய்ய முயற்சித்தேன் என்று கூறிய ஆட்டோ சங்கர், தூக்கிலிடப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, கடத்தப்பட்ட இளம் பெண்களைபாலியல் பலாத்காரம் செய்த சில அரசியல்வாதிகளுக்காக அவர்களை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். கைது செய்யப்பட்ட பின்னரும் மத்திய சிறையில் இருந்து தப்பித்த ஆட்டோ சங்கர் ஒடிசாவின் ரூர்கேலாவில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அதற்குப்பிறகு 1995 ஆம் ஆண்டு சேலம் சிறையில் ஆட்டோ சங்கர் தூக்கிலடப்பட்டார்.

சயனைடு மோகன்

சயனைடு மோகன்

மோகன் குமார் அல்லது சயனைடு மோகன் என்னும் கொலைகாரன் திருமணம் ஆகாத பெண்களை மயக்கி அவர்களுடன் கொண்டு அதன்பின் கருத்தடை மாத்திரைகள் என்று கூறி சயனைடு மாத்திரைகளை கொடுத்து கொன்றார். 2005 முதல் 2009 க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் இவரால் 20 பெண்கள் உயிரிழந்தனர். இந்த கொலைவெறியாட்டத்திற்கு செல்வதற்கு முன்பு, அவர் ஒரு ஆரம்ப பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்தார். அவர் வங்கி மோசடிகள் மற்றும் பிற நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகவும் வதந்தி பரவியது. அவருக்கு 2013 டிசம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தேவேந்திர சர்மா

தேவேந்திர சர்மா

தேவேந்திர சர்மா ஒரு வெற்றிகரமான ஆயுர்வேத மருத்துவராக இருந்தார், ஆனால் அவருக்கு ஒரு இருண்ட பக்கமும் இருந்தது. விரைவான பக் அதிகரிக்கும் கார்களை உருவாக்க அவர் விரும்பினார் அவர் ஆனால் அதற்கு பின்னால் ஏற்பட்ட இரத்தக் கறைகளை பற்றி அவர் கவலைப்படவில்லை. உத்திரபிரதேசம், குர்கான் மற்றும் ராஜஸ்தானில் பல கார்களை திருடியதுடன் அதன் டிரைவர்களை கொலையும் செய்தார். அவரது சொத வாக்குமூலத்தின் படி அவர் சுமார் 30-40 ஆண்களை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 2008 ல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

MOST READ: உண்மையான கேஜிஎப் பற்றி மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!

நிதாரி கொலையாளிகள்

நிதாரி கொலையாளிகள்

நொய்டாவைச் சேர்ந்த பணக்கார தொழிலதிபர் மோனிந்தர் சிங் பாந்தரின் வீட்டு உதவியாக சுரிந்தர் கோலி இருந்தார். 2006 ஆம் ஆண்டு நொய்டாவின் புறநகர் பகுதியில் இருந்த நிதாரி கிராமத்தில் காணாமல் போன குழந்தைகளின் மண்டை ஓடுகள் கிடைத்த வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டது, ஏனெனில் இதில் கற்பழிப்பு, நரமாமிசம், பெடோபிலியா மற்றும் உறுப்பு கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தன. இதில் சில விஷயங்களில் உண்மை இருந்தது, சுரிந்தர் கோலி 5 படுகொலைகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனையில் உள்ளார், அதே விசாரணையில் 11 தீர்க்கப்படாத கொலைகள் இருப்பதால் பாந்தர் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

சார்லஸ் சோப்ராஜ்

சார்லஸ் சோப்ராஜ்

சார்லஸ் சோப்ராஜ் பிரபலமான கொலைகாரர்களில் ஒருவராவார். 1975 முதல் 1976 வரை, தென்கிழக்கு ஆசியாவின் பல்வேறு இடங்களில் சுமார் 12 பேரை கொலை செய்தார். மற்ற தொடர் கொலையாளிகளைப் போலல்லாமல், சோப்ராஜுக்கு ஒரு நோக்கம் இருந்தது, தனது வசதியான வாழ்க்கைக்காக மக்களை கொள்ளை அடித்து விட்டு அதன்பின் அவர்களை கொலை செய்தார். அவரது வழக்கமான முறை என்னவென்றால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை முதலில் பெறுவதன் மூலம் அவர் முதலில் உருவாக்கிய பிரச்சினைகளிலிருந்து அவர்களை மீட்டு, பின்னர் அவர்களை மோசடி செய்வதாகும். அவர் கொன்ற இரண்டு பெண்களின் உடல்கள் மலர் பிகினிகளில் காணப்பட்டன, இதனால் சோப்ராஜ்க்கு பிகினி கில்லர் என்ற பெயர் வந்தது. கைது செய்யப்பட்ட இவர் 1976 முதல் 1997 வரை ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டு பாரிசுக்கு சென்றார். அவரது கதையை புத்தகமாகவும், படமாகவும் எடுக்க பலரும் அவரை அணுகினர். அவர் 2004 ல் நேபாளத்திற்குத் திரும்பினார், அங்கு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது இரண்டாவது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

சயனைடு மல்லிகா

சயனைடு மல்லிகா

பெங்களூரில் வசிக்கும் மல்லிகா என்ற பெண் 1999 முதல் 2007 வரை 6 பெண்களைக் கொன்றார். இவரது கொலை செய்யும் முறை வித்தியாசமானதாக இருந்தது. இவர் வீட்டு பிரச்சினைகளை சமாளிக்க சிரமப்படும் நடுத்தர வர்க்க பெண்களுக்கு உதவி செய்வது போல நடித்து அதன்பின்னர் அவர்களை சயனைடு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவர்களின் உடமைகளை கொள்ளையடிப்பார். . அவர் 2007 இல் கைது செய்யப்பட்டார், 2012 இல் மரண தண்டனை வழங்கப்பட்டது, பின்னர் அது அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

MOST READ: உங்க பிறந்த தேதி படி அடுத்த வருஷத்தோட தொடக்கம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

ரேணுகா ஷிண்டே & சீமா கவிட்

ரேணுகா ஷிண்டே & சீமா கவிட்

ரேணுகா ஷிண்டே மற்றும் அவரது சகோதரி சீமா கவிட் ஆகியோர் அவர்களின் தாயார் அஞ்சனபாயால் திருடர்களாக வளர்க்கப்பட்டனர். குழந்தைகளை கொண்டு திருடுவது பாதுகாப்பானதாக இருக்கும் என்று அவர் திட்டம் தீட்டினர். எனவே இவர்கள் குழந்தைகளை கடத்தத் தொடங்கினர். அவர்களுக்கு தொல்லையாக இருந்தவர்கள் கொல்லப்பட்டனர், 1990 முதல் 1996 வரை ஆறு குழந்தைகளுக்கு மேல் அவர்களால் கொல்லப்பட்டனர். 90 களுக்கு முன்பு எத்தனை குழந்தைகளை மொத்தமாகக் கொன்றார்கள் என்பது அவர்களுக்கு நினைவில் இல்லை என்றும் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். அவர்கள் தற்போது மரண தண்டனையில் உள்ளனர், மேலும் அவர்கள் செய்த குற்றங்களுக்காக தூக்கிலிடப்படும் இந்தியாவிலன் முதல் பெண்கள் இவர்கள்தான்.

தக் பெஹ்ராம்

தக் பெஹ்ராம்

இவரின் கதை தீரன் திரைப்படத்தை போன்றதாகும். எண்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் இவர்தான் இந்தியாவின் மிகப்பெரிய கொலையாளி ஆவார். 1790 முதல் 1840 வரை 931 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாக அவர் குற்றம்சாட்டப்பட்டார், ஆனால் அவர் 125 கொலைகளை மட்டுமே செய்ததாக ஒப்புக்கொண்டார். மத்திய இந்தியா முழுவதும் தனது குழுவுடன் இவர் பயணம் செய்தார். பயணக்குழுக்களை கொள்ளையடிப்பதற்கு முன் அவர்களின் கழுத்தை தங்களின் கர்சீப் கொண்டு நெரித்து கொலை செய்தார்கள். 1840 ஆம் ஆண்டு இவர் தூக்கிலடப்பட்டார்.

ஸ்டோன்மேன் கில்லர்

ஸ்டோன்மேன் கில்லர்

இது இந்திய வரலாற்றில் மிகவும் பிரபலமற்ற தீர்க்கப்படாத கொலைகளில் ஒன்றாகும். 1989 ஆம் ஆண்டில், பம்பாயில் வசிக்கும் ஒன்பது பேர் ஒரே முறையில் கொல்லப்பட்டனர், கொலை செய்யப்பட்டவர்களின் தலை ஒரு கனமான பொருளால் நசுக்கப்பட்டு கொல்லப்பட்டது. கல்கத்தா செய்தித்தாள் இந்த தொடர் கொலைகாரனுக்கு ஸ்டோன்மேன் என்று பெயர் வைத்தது. இன்றுவரை அந்த கொலைகளை யார் செய்தது என்று கண்டறியப்படவில்லை.

பீர் மேன்

பீர் மேன்

இது இந்த பட்டியலில் மிகவும் வித்தியாசமானதாகும். அக்டோபர் 2006 மற்றும் ஜனவரி 2007 க்கு இடையில், மும்பையில் 6 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவருக்கும் பக்கத்தில் ஒரு பீர் பாட்டில் இருந்தது. எனவே இதனை தொடர் கொலைகள் என்று காவல்துறை முடிவு செய்தது. ஜனவரி 2008 இல், ரவீந்திர கான்ட்ரோல் ஏழாவது கொலைக்கு தண்டனை பெற்றார், பின்னர் இரண்டு பீர் மேன் கொலைகளும் அவர் மீது சுமத்தப்பட்டது. ஆனால் ஆதாரங்கள் இல்லாததால் 2009 ல் அவர் அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். அவர் இப்போது மும்பையில் ஒரு உணவகத்தை வைத்திருக்கிறார், அதேசமயம் பீர் மேன் மர்மம் இன்னும் தீர்க்கப்படமல்தான் உள்ளது.

MOST READ: பெண்களுக்கு அனுப்பவே கூடாத மெசேஜ்கள் என்னே தெரியுமா? தெரியாம கூட இப்படி அனுப்பிறாதீங்க...!

அமர்தீப் சதா

அமர்தீப் சதா

இந்த கொலையை நம்புவது மிகவும் கடினம்தான். ஏனெனில் இந்த தொடர் கொலைகாரனுக்கு கொலை செய்த போது வயது வெறும் 8 மட்டும்தான். பீகார் பெகுசராய் என்ற இடத்தில் மூன்று இளம் குழந்தைகளை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 8. இவர் கொலை செய்தது அவரது உறவினரின் ஆறு மாத குழந்தை, அவரது சொந்த எட்டு மாத சகோதரி மற்றும் பக்கத்து வீட்டுக்காரரின் மகளான ஆறு மாத குழந்தை குஷ்பூ. முதல் இரண்டு கொலைகள் குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தெரிந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் அவர்கள் போலீசாரை அணுகாமல் தங்கள் குடும்பத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டார்கள். ஆனால் அமர்தீப் பக்கத்து வீட்டு குழந்தையை கொன்றபோது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அமர்தீபை கைது செய்து கொலை செய்ததற்கான காரணத்தை கேட்டபோது அவன் சிரிக்க மட்டுமே செய்தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List of Indian Serial Killers

Read to know the list of indian serial killers who shook the nation with the brutality of their crimes
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more