For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவம்பர் மாதத்தில் வரக்கூடிய சில முக்கிய பண்டிகைகள்..!

இந்தியாவை பொறுத்தவரை, பண்டிகைக்கான சீசன் என்றால் அது நவம்பர் மாதம் தான். நவம்பர் மாதத்தில் பண்டிகைகளுக்கு பஞ்சமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

|

இந்தியாவை பொறுத்தவரை, பண்டிகைக்கான சீசன் என்றால் அது நவம்பர் மாதம் தான். நவம்பர் மாதத்தில் பண்டிகைகளுக்கு பஞ்சமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். நவராத்திரி முடிந்தவுடன் அடுத்த பண்டிகையை கொண்டாட அனைவரும் தயாராகி விடுவர். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் குறித்து தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நவம்பர் 14 - தீபாவளி

நவம்பர் 14 - தீபாவளி

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. பெரும்பாலும் தீபாவளி ஐப்பசி மாத அமாவாசை அன்று தான் கொண்டாடப்படுகிறது. இந்தியா உட்பட பல நாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்கள், புராணக் கதைகளின் வழியாகக் கூறப்படுகின்றன. நரகாசுரனை வதைத்த தினமாகவும், ராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பியதை கொண்டாடிய தினமாகவும் பார்க்கப்படுகிறது. தீபாவளி தினத்தன்று, மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகளை பரிமாறி கொண்டாடுகின்றனர்.

நவம்பர் 15 - கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்

நவம்பர் 15 - கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்

தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளப்படும் மிக முக்கிய விரதங்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா நவம்பர் மாதத்தில் நிகழ்கிறது. கந்த சஷ்டி திருவிழாவானது, ஐப்பசி மாத அமாவாசைக்கு அடுத்த ஆறு நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. அசுரன் சூரபத்மனை எதிர்த்து முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாகவே இந்த கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் முக்கியமாக நிகழ்வது விரதமுறையைக் கடைப்பிடிப்பது. இந்த விரதம் தொடங்கும் நாள் நவம்பர் 15ம் தேதி ஆகும்.

நவம்பர் 20 - கந்த சஷ்டி சூரசம்ஹாரம்

நவம்பர் 20 - கந்த சஷ்டி சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி விரதத்தின் கடைசி நாளன்று சூரசம்ஹாரம் நடைபெறும். இதில் சூரனை, முருகப் பெருமான் வதம் செய்யும் காட்சி அரங்கேற்றப்படும். எல்லா முருகன் கோவில்களிலும் இது சிறப்பாக கொண்டாடப்படும். சஷ்டி விரதம் இருப்பவர்கள், சூரசம்ஹாரத்தை பார்த்த பின்பு, நீராடி விட்டு தான் விரதத்தை முடிப்பர். இவ்விரத முறையில் சிலர் ஆறு நாட்கள் உண்ணாமலும், ஒருவேளை மட்டும் உணவு உண்டும் அல்லது சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்வது உண்டு.

நவம்பர் 29 - திருகார்த்திகை

நவம்பர் 29 - திருகார்த்திகை

கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில், தீபத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஒவ்வொருவரும் தங்களது இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து மகிழ்வது வழக்கம். திருகார்த்திகை தினத்தன்று காலை திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலையில் மலை மீது இந்த தீபம் ஏற்றப்படும். சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதீகத்தின் படி மலையின் மீது தீபம் ஏற்றப்படுகிறது.

நவம்பர் 30 - குருநானக் ஜெயந்தி

நவம்பர் 30 - குருநானக் ஜெயந்தி

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் அவர்களின் பிறந்த நாளை தான் குருநானக் ஜெயந்தியாக கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List Of Festivals In The Month Of November 2020

Here is a complete list of festivals in the month of November 2020. Take a look.
Desktop Bottom Promotion