Latest Updates
-
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம்
சபாஷ்!... சட்டப்பிரிவு 377 ஐ சந்தித்து ஒன்றாக சேர்ந்து வாழும் ஓரினச்சேர்க்கை தம்பதி...
பாலினம் தடையில்லை என்று நிரூபித்து 377 செக்ஷனை துணிச்சலாக சந்திக்கும் வழக்கறிஞர் தம்பதி பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
ஓரினச் சேர்க்கை குற்றம் என்று வரையறுத்த 377வது சட்டப்பிரிவை இந்திய உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி வழங்கிய தீர்ப்பின்மூலம் ரத்து செய்தது. அதன் மூலம் ஒரு பால் காதலை தடை செய்யும் பிரிட்டிஷ் காலனி காலத்து சட்டம் முடிவுக்கு வந்தது.

பாலின வேறுபாட்டை களைந்திடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பின் அடையாளமாக மேனகா குருசுவாமி மற்றும் அருந்ததி கட்ஜூ ஆகிய இரண்டு வழக்குரைஞர்களும் இணைந்துள்ளனர்.

'நாங்கள் அவர்கள்தாம்' ட்விட்டர் பதிவு
தீர்ப்பு வழங்கப்பட்டு 10 மாதங்கள் கடந்த நிலையில் அருந்ததி கட்ஜூ 2019 ஜூலை மாதம் 18ம் தேதி இட்ட ட்விட்டர் பதிவின் மூலம் தாமும் மேனகா குருசுவாமியும் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளார்.
"நீதிமன்றத்திற்கு செல்லும்போது பல நாள்கள் என்னை ஆறு முழ புடவையில் காண்பீர்கள். நீளமான அப்புடவை நிமிர்ந்து நிற்கவும், சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளவும், வாதம் செய்வதற்கும் எனக்கு சக்தியையும் தருவதாக உணர்கிறேன்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

டெல்லி உயர்நீதிமன்ற வழக்கு
நாஸ் ஃபவுண்டேஷன் என்ற அரசு சாரா சேவை நிறுவனம் மற்றும் எய்ட்ஸ் பெட்பாவ் விரோத் ஆண்டோலன் அமைப்பு ஆகியவை 2001ம் ஆண்டு டெல்லி உயர்நீதி மன்றத்தில் 377வது சட்டப்பிரிவை குறித்த பிரச்னையை எழுப்பின. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஓரின, இருபாலின மற்றும் மூன்றாம் பாலின சேர்க்கையாளர்களை பாதுகாப்பாக உணரச் செய்துள்ளது.
"கனம் கோர்ட்டார் அவர்களே, இது அன்பு. இது பாலின நடவடிக்கையாக மட்டுமல்லாமல், அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி மேனகா குருசுவாமி கேட்டுக்கொண்டார்.

டட்டீ சந்த்தின் ஜோடி யார்?
ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீராங்கனை டட்டீ சந்த், ஒடிசாவின் கிழக்குப் பகுதியிலுள்ள தம்முடைய கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் தாம் ஓரின உறவு கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். பெண்களுக்குள்ளிருக்கும் ஓரின சேர்க்கை இன்னும் இலைமறை காயாக இருக்கும் நிலையில் தம்மை ஓரினச் சேர்க்கையாளராக வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட முதல் தடகள வீராங்கனை அவராவார்.
"என் இதயத்திற்கேற்ற துணையாக ஒருவரை கண்டுபிடித்துள்ளேன். தங்களுக்கு பிரியமானவர்களுடன் இணைந்திருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்," என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் டட்டீ சந்த் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications
