Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 5 ராசிக்காரங்க ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தால் அதிகமா பாதிக்கப்படுவாங்களாம்... உஷாரா இருங்க...
சூரிய கிரகணம் சில ராசிகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினாலும், ஒருசில ராசிகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் பின்வரும் 5 ராசிகளுக்கு சூரிய கிரகணம் மோசமான தாக்கத்தை உண்டாக்குகிறது.
2021 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4 ஆம் தேதி நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணம் சனி அமாவாசை அன்று வருகிறது. பொதுவாக சூரிய கிரகணம் 12 ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய தாக்கம் நல்லதாகவும் இருக்கும் மற்றும் கெட்டதாகவும் இருக்கும்.

கடைசி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாவிட்டாலும், இதன் தாக்கம் நிச்சயம் ஓரளவு இருக்கும். அதுவும் இது சனி அமாவாசை நாளில் நிகழ்வதால், இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது. சூரிய கிரகணம் சில ராசிகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினாலும், ஒருசில ராசிகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் பின்வரும் 5 ராசிகளுக்கு சூரிய கிரகணம் மோசமான தாக்கத்தை உண்டாக்குகிறது. உங்க ராசி அதில் இருக்கா மற்றும் எந்த மாதிரியான தாக்கம் இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் மேஷ ராசியில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது. சூரிய கிரகணத்தால் இந்த ராசிக்காரர்கள் சில நோய்கள் அல்லது சில விபத்துக்களை சந்திக்கலாம். ஆகவே சூரிய கிரகணத்தின் போது இந்த ராசிக்காரர்களின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த கடைசி சூரிய கிரகணம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களுடன் மோதல்கள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளின் மீது சற்று அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடம் கூறுகிறது. இந்த ராசிக்காரர்கள் கிரகணத்தின் போது கோபம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவரை துஷ்பிரயோகம் செய்வது தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் மீது சற்று அதிகமாக கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களும் சூரிய கிரகணத்தின் மோசமான தாக்கத்தை அனுபவிப்பார்கள். இந்த கிரகணத்தால் மிகவும் டென்சனாக இருக்கக்கூடும். மேலும் அமைதியின்மை அல்லது குழப்பத்துடன் இருப்பீர்கள். பணியிடத்தில் பொறுமையாகவும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் தனுழு ராசிக்காரர்களுக்கு தேவையற்ற அவசரத்தை கொண்டு வரும். இதன் விளைவாக, செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பணிகளை முடிப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். முக்கியமாக இந்நாளில் பயணம் செய்ய வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
