For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா?

By Mahibala
|

காஞ்சின்னாலே உலக அளவில் புகழ்பெற்று விளங்குவது பட்டு தான். அதற்கு அடுத்தபடியாக, கடந்த 48 நாட்களாக தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எங்கு பார்த்தாலும் உச்சரிக்கிற பேராக இருப்பது அத்தி வரதர் தான். காஞ்சி மாநகருக்கு மிகப்பெரிய வரலாற்றுப் பின்புலம் இருப்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம். அந்த புண்ணிய ஸ்தலமாகக் கூறப்படுகின்ற காஞ்சிபுரம் ஆன்மீக பூமி என்பது நமக்குத் தெரிந்ததே.

Athi Varadar Dharshan and Hundial Collection

அதில் இந்த ஆண்டு இன்னும் கூடுதல் பெருமையும் புகழும் புண்ணியமும் சேர்த்தது அத்திவரதர் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் அத்திமரம்

ஏன் அத்திமரம்

காஞசிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாளின் சிறப்பே மற்ற கோவில்களைப் போல சுதை அல்லது கல் சிற்பமாக இல்லாமல் மரத்தால் செய்யப்பட்டிருப்பது தான் அவருடைய மிகப்பெரிய சிறப்பு.

பொதுவாக மரத்தால் கடவுள் சிலைகள் செயய்பப்டாததற்குக் காரணமே அது மிக விரைவாக சிதலமடைந்து விடும். அபிஷேகம் ஆகியவை செய்யப்படும் போது தண்ணீரில் ஊறி சிலைகள் வீணாகிப் போய்விடும் என்பதற்காகத் தான். ஆனால் இந்த காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாளின் சிறப்பே அத்தி மரத்தினால் செய்யப்பட்டது தான்.

அத்திமரச் சிறப்பு

அத்திமரச் சிறப்பு

அத்தி மரத்திற்கு புவியின் ஈர்ப்பு சக்தியைப் போல, நீரை அதிகப்படியாக உடனடியாக ஈர்த்துக் கொள்ளும் சக்தி உண்டு. அதனால் தான் சிற்பத்தை அத்தி மரத்தில் செதுக்கி இருக்கிறார்கள். அத்தி மரத்தில் என்ன மாதிரியான அபிஜேகம் செய்தாலும் அது பெரிதாக ஊறிப்போகாது.

அடுத்த தரிசனம்?

அடுத்த தரிசனம்?

1979 ஆம் வருடத்துக்குப் பிறகு, 40 ஆண்டுக்கு ஒருமுறை தான் அத்தி வரதர் அங்கிருக்கும் குளத்தில் இருந்து வெளியே வந்து மக்களுக்கு தரிசனம் தருவார். இந்த வகையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை வெளியே வந்து கடந்த 48 நாட்களாக பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். இதில் கோடிக்கணக்கான மக்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து தரிசனம் மேற்கொண்டனர். அடுத்த தரிசனம் 2059 ஆம் ஆண்டு தான். அதுவரை குளத்தில் சயனக் கோலத்தில் வரதர் வைக்கப்பட்டிருப்பார்.

தரிசனம் தடை

தரிசனம் தடை

நேற்றோடு பொது மக்களுக்கான தரிசனங்கள் தடை செய்யப்பட்டு இருக்கிறது. கூன்று கால பூஜைகள் மற்ற சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த கோவிலின் மற்றொரு மூலவரான தேவராஜ பெருமாள் அத்திவரதரை சந்திப்பார். அதன்பின் அனந்த சரஸ் குளத்தில் அத்தி வரதர் சயனக் கோலத்தோடு வைக்கப்படுவார்.

உண்டியல் கலெக்ஷன்

உண்டியல் கலெக்ஷன்

இந்த 48 நாட்களில் உண்டியல் வசூல் களை கட்டி வந்தது. அதில் இதுவரைக்கும் எண்ணி முடித்தது 7 கோடி. இன்னும் முழுமையாக எண்ணி முடிக்கப்படவில்லை. முழுமையாக எண்ணி முடிக்கப்பட்ட பின் தெரிவிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

குப்பை

குப்பை

கூட்டம் சேர்ந்தால், கோவில் விசேஷங்கள் என்றால் எங்கு பார்த்தாலும் வாட்டர் பாட்டில்கள், தேங்காய் ஓடுகள், பழத்தோல் என குப்பைகளுக்குப் பஞ்சமே இருக்காது. அந்த வகையில் இந்த 48 நாளும் சராசரியாக ஒரு நாளைக்கு 25 டன் குப்பை மட்டும் சேர்ந்ததாம். காஞ்சிபுரத்திலேயே மறுசுழற்சி செய்வதற்கான வசதிகள் இருப்பதால், அந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறதாம். அதை மறுசுழற்சி செய்து ஏதேனும் உபயோகமான விஷயங்களைச் செய்ய முடியும்.

செருப்பு - ஏலம்

செருப்பு - ஏலம்

கூட்டத்தில் அறுந்து போன செருப்புகள், காணாமல் போன ஜோடி செருப்புகள், தவறியவை என எங்கு பார்த்தாலும் இருக்கும். அவையே ஏராளமாக சேகரிக்கப்பட்டு இருக்கிறதாம். அதில் நிறைய ஜோடி ஜோடி செருப்புகளாகவே இருப்பதால் அவற்றைப் பிரித்து அநாதை ஆசிரமங்களுக்கும் மற்ற செருப்புகள் மாநகராட்சி தலைமையில் ஏலமும் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பாராட்டுச் சான்றிதழ்

பாராட்டுச் சான்றிதழ்

இந்த 48 நாட்களும் இனிவரும் சில நாட்களும் இங்கு வேலை செய்பவர்கள், பணியாளர்கள், துப்புறவு தொழிலாளர்கள், காவல்துறை மற்றும் பிற ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பாக ஊக்கத்தொகையும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கேமராக்கள்

கேமராக்கள்

பிஸ்பாஸ் வீட்டை விட அதிகமான கேமராக்கள் கோவிலுக்குள் மட்டும் 45 கேமராக்கள் மேலாக வைக்கப்பட்டிருக்கிறது. சுற்றுப்புறத்தில் நிறைய இருக்கிறது. இன்னும் கூடுதல் கேமராக்கள் தேவைப்பட்டால் ஆய்வுக்குப் பின் பொருத்தப்படலாம்.

எவ்வளவு பேர்?

எவ்வளவு பேர்?

கிட்டதட்ட ஒரு கோடி பேருக்கும் மேல் தரிசனம் செய்திருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

புனித குளமும் வற்றாத கிணறும்

புனித குளமும் வற்றாத கிணறும்

48 நாட்கள் தரிசனத்துக்குப் பிறகு, மீண்டும் குளத்தில் வைக்கப்படுவதற்கு முன்னர், குளத்தில் இருக்கும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும். பின்னர் குளம் தூய்மை செய்யப்பட்டு, வற்றாத புனிதக் கிணறாகக் கருதப்படும் அந்த இரண்டு கிணறுகளில் இருந்து குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு, பின்னர் அத்திவரதர் சயனக் கோலத்தில் குளத்திற்குள் வைக்கப்படுவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Last Day of Athi Varadar Dharshan and Hundial Collection

With preparations on to lower the idol of Athi Varadar into the Ananthasaras tank at the Sri Devarajaswamy temple in Kancheepuram, devotees thronged the shrine for a final darshan of the idol on Friday, the last day of the once-in-40-years festival that began on July 1.
Story first published: Saturday, August 17, 2019, 18:27 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more