For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேண்டாம்னு தூக்கி வீசின குழந்தை இப்ப 12.5 லட்சம் குரோர்பதியில ஜெயிச்சிருக்காங்க...

வேண்டாமென்று தூக்கி வீசிய குழந்தை குரோர்பதியில் 12.5 லட்சம் பரிசு வாங்கியிருக்கிறது. அந்த சுவாரஸ்யமான கதையைப் பற்றி தான் இந்த கட்டுரையில் வளிக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

|

யாரோ பண்ணின தப்புக்கு நான் கஷ்டப்படுறேன். இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம்?" என்று புலம்பிக் கொண்டிருக்கிறவர்களுக்கு புது நம்பிக்கை அளிக்கும் ஒரு தகவல்...

KBC 11: declared dead at birth, noopur singh from up goes onto win 12.5 lakh

உத்தர பிரேதேசம் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ராம்குமார் சிங். அவரது மனைவி கல்பனா சிங். கல்பனாவுக்கு கான்பூரில் உள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மருத்துவர்கள், குழந்தை இறந்து பிறந்திருக்கிறது என்று போட்டுவிட்டனர். குழந்தையை கவனித்த உறவினர் ஒருவர், உயிரோடு இருப்பதை கவனித்து தூக்கியுள்ளார். பிறந்ததும் உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் அப்பெண் குழந்தை மாற்றுத் திறனாளியாய் வளர்ந்தது. அந்தப் பெண்ணின் பெயர் நூபுர் சிங்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பன்னிரண்டரை லட்சம் பரிசு

பன்னிரண்டரை லட்சம் பரிசு

பிரபல நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 12 கேள்விகளுக்கு சரியான விடை கூறி 12.5 லட்சம் ரூபாய் பரிசை நூபுர் சிங் வென்றுள்ளார்.

MOST READ: மேகன் மார்க்கலின் ஆர்கானிக் சால்வை தயாரிக்கும் கம்பெனியில் ஒருநாளைக்கு ரூ.33 தான் சம்பளமாம்...

புத்திசாலி பெண்

புத்திசாலி பெண்

இண்டர்மீடியட் வகுப்பில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்ற நூபுர் சிங், ஆசிரியை பயிற்சியான பி.எட். படிப்புக்கான நுழைவு தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார் என்றும் நூபுர் சிங் புத்திசாலியாய் வளர்ந்தார் என்றும் அவரது அம்மா கல்பனா சிங் கூறியுள்ளார்.

MOST READ: காலேஜ் பாத்ரூமில் சுயஇன்பம் கூடாது... பல்கலைக்கழகம் அதிரடி சுற்றறிக்கை....

மனத்தளர்ச்சி

மனத்தளர்ச்சி

வழக்கமாக 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, நிகழ்ச்சியில் பங்கேற்பவர் கேள்விக்குப் பதில் கூறும் முன்பே மகள் நூபுர் பதில் கூறிவிடுவாள் என்று தெரிவித்துள்ள கல்பனா, மகள் மாற்றுத் திறனாளியாவதற்கு காரணமான மருத்துவர்கள்மேல் தனக்கு எந்த வருத்தமும் இல்லையென்றும் கூறியுள்ளார்.

எந்நிலையிலும் வாழ்வில் மனந்தளர்ந்து விடக்கூடாது என்பதற்கு நூபுரின் வெற்றி நல்ல உதாரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

KBC 11: declared 'dead' at birth, noopur singh from up goes onto win 12.5 lakh

Noopur Singh from Kanpur, Uttar Pradesh in India was declared dead at birth and thrown in the garbage by the doctors of Kanpur hospital until a relative noticed that she was alive and picked her up. Due to the negligence of the doctors, the baby girl grew up as a physically challenged person.
Desktop Bottom Promotion