For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனிபகவான் அருள் வேண்டுமா? அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்க...

அகல் விளக்கை ஏற்றும்போதும் மண்ணை குறிக்கும் அகல் விளக்கில், நீரைக் குறிக்கும் நல்லெண்ணெய் விட்டு, ஸ்வாசம் எனும் வாயுவை குறிக்கும் திரி போட்டு, நெருப்பு தத்துவத்தை குறிக்கும் விதமாக ஏற்றும்போது, வெளிச்

|

பஞ்சபூத தத்துவத்தில் மண் அகல் விளக்கு ஐப்பெரும் பூதங்களின் தத்துவத்தை குறிப்பதாக அமைந்திருக்கிறது. எந்தக் கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் மண்ணினால் செய்யப்பட்ட அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்குக் காரணமும் உண்டு. அதாவது, அகல் விளக்கு ஏழை ஒருவனால் பஞ்சபூதத் தத்துவங்களின் அடிப்படையில் தயார் செய்யப்படுகிறது. அவன் களிமண்ணில் நீரை ஊற்றி, சூரிய ஒளியில் காயவைத்து, காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கைச் செய்கிறான். மேலும், அகல் விளக்கை ஏற்றும்போதும் மண்ணை குறிக்கும் அகல் விளக்கில், நீரைக் குறிக்கும் நல்லெண்ணெய் விட்டு, ஸ்வாசம் எனும் வாயுவை குறிக்கும் திரி போட்டு, நெருப்பு தத்துவத்தை குறிக்கும் விதமாக ஏற்றும்போது, வெளிச்சம் எனும் ஆகாயம் உருவாகிறது.

Karthigai Deepam 2019: Remedies To Remove Sani Dosha

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள். இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம். மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, தலைமுடி ஆகிய அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை. நீரின் கூறு நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து, சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர்.

ஜோதிடத்தில், மண்ணை குறிக்கும் கிரகம் சனீஸ்வரன் எனும் சனீஸ்வர பகவானாவார். மண்ணில் உதித்த உயிர்களெல்லாம் மண்ணோடு மண்ணாக மாறுவதைக் குறிக்கும் வகையில், ஆயுள்காரகன் என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சனி பகவான்

சனி பகவான்

நவகிரகங்களில் ஆயுள்காரகன் என்று வர்ணிக்கப்படும் சனி பகவான் சிறப்பாக அமைந்தால் ராஜபோக வாழ்வு உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் மகரம், கும்பத்தில் அமைந்து ஆட்சி பெற்றோ, துலாமில் சனி அமைந்து உச்சம் பெற்றிருந்து, சனி அமைந்த வீடு லக்கின கேந்திரமாகவோ, சந்திர கேந்திரமாகவோ இருந்தால் சச யோகம் உண்டாகிறது. சச யோகம் என்பது பஞ்சமகா புருஷ யோகத்தின் ஒரு பிரிவு ஆகும். ஆயுள்காரகனான சனியால் இந்த யோகம் உண்டாவதால், ஜாதகர் நீண்ட ஆயுள், நிலையான செல்வம், செல்வாக்கு அடைவார்.

ஆயுள்காரகன் சனிபகவான்

ஆயுள்காரகன் சனிபகவான்

ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம் ஆகும். நவகிரகங்களில் ஆயுள் காரகன் சனி பகவானாவார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் பாவ அதிபதியும் சனி பகவானும் பலம் பெற்று அமைந்து விட்டால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும். அதுவே எட்டாம் பாவம் பலமிழந்து சனி பகவானும் எட்டாம் அதிபதியும் வக்ரம், பகை, நீசம் பாவ கிரக பார்வை பெற்றிருந்தால் இளம் வயதிலேயே கண்டங்களை எதிர் கொள்ளக் கூடிய அமைப்பு ஏற்படுகிறது. அதுபோல பலமிழந்த மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாகிறது.

இதுபோன்ற ஆயுள் அமைப்பை ஜாதகத்தில் கொண்டவர்கள் மண் அகல் தீபம் ஏற்றி வழிபட ஆயுள்காரகன் சனைச்சர பகவானின் அருளும் அவரின் சகோதரர் யமனின் அருளும் பெற்றும் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மண் அகல் விளக்கு தீபம்

மண் அகல் விளக்கு தீபம்

மண்ணினை குறிக்கும் கிரகம் சனீஸ்வரன் ஆவார். மண்ணினை குறிக்கும் நில ராசியான மகரத்தையும் மண் குடத்தினை ராசியாக கொண்ட கிரகமும் சனீஸ்வரன் ஆவார். மகர, கும்ப ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் எளிமையானவர்கள் மற்றும் பழமையை மறக்காதவர்கள். கால புருஷனுக்கு பத்தாமிடமான மகரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் அடுத்தவர் உழைப்பை மதிப்பவர்கள். எனவே மண்பாண்டம் செய்வோர் மற்றும் செக்கில் எண்ணெய் பிழியும் வணிகப் பெருமக்களையும் போற்றும் வண்ணம் மகர ராசி லக்னக்காரர்கள், மண் அகலில் நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றுவார்கள்.

கும்ப ராசிக்காரர்கள்

கும்ப ராசிக்காரர்கள்

முக்கியமாக, கும்ப ராசி கும்ப லக்னக்காரர்கள், குடத்தில் இட்ட விளக்கு போல எனும் பழமொழிக்கேற்ப, குடும்பத்தில் பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தன் விருப்பங்களை புதைத்துவிடுவார்கள். அவர்களின் ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதிகளாக மண்ணை குறிக்கும் நில ராசி அதிபதிகளாக புதனும் சுக்கிரனும் வருவதால், அவர்கள் மண் அகல் விளக்கை அதிகமாக ஏற்றுவார்கள்.

பாரம்பரியத்தை போற்றும் விளக்கு

பாரம்பரியத்தை போற்றும் விளக்கு

எப்போதும் புதிய புதிய விஷயங்களை தேடிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவர்கள் சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவர்கள். ரிஷபத்தில் சனி நின்றாலும், துலா ராசியில் சனி உச்சம் பெற்று நின்றாலும் அவர்கள் புதிது புதிதான மண் அகலை விரும்பி ஏற்றுவார்கள். பாரம்பரியத்தைப் போற்றுதல் என்றாலே குருவும், சூரியனும்தான். நெருப்பு ராசி மற்றும் திரிகோண ராசிகளான மேஷ, சிம்ம, தனுசு ராசி/லக்னக்காரர்கள், பாரம்பரியத்தைப் போற்றும் வண்ணமும் தர்மத்தைக் காக்கும் வண்ணமும் மண் அகல் விளக்கை ஏற்றுவார்கள்.

சனிபகவானுக்கு பரிகாரம்

சனிபகவானுக்கு பரிகாரம்

ஆயுள்காரகனான சனீஸ்வரனின் அம்சமான மண் அகலில் விளக்கேற்றினால் சுத்தமான சுவாசம் அமைந்து நமக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். குயவர்கள் எனப்படும் மண்பாண்டம் செய்வோர் மற்றும் செக்கில் நல்லெண்ணெய் ஆட்டும் வணிகர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் சனியின் காரகம் பெற்றவர் ஆவர். எனவே மண் விளக்குக்கும் நல்லெண்ணெய்க்கும் செய்யும் செலவு, சனீஸ்வர பகவானுக்கு செய்யும் பரிகாரம் என்பதால் சனிதோஷம் விலகுவதோடு ஆயுள் காரகனின் அருள் கிட்டும் என்பது நிதர்சனம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Karthigai Deepam 2019: Remedies To Remove Sani Dosha

Lord Shani and during the period of Elarai sani and Saturn's Mahadasa and Antardasa, sesame oil lamp must be lit for relief and peace from the malefic effects of the planet.
Story first published: Wednesday, December 11, 2019, 11:31 [IST]
Desktop Bottom Promotion