For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கந்த சஷ்டி விழாவின் நாயகனான முருகனின் சாகசங்களும் அவரது பிறப்பின் மகத்துவங்களும் தெரியுமா?

|

இந்து புராணங்கள் தனக்கே உரிய அனைத்து புராணக்கதைகளையும், பல்வேறு கடவுள்கள் மற்றும் தெய்வங்களைப் பற்றியும், புராணங்களின் மாறுபாடுகளையும், வாழ்க்கை நெறிகளையும் கொண்ட ஒரு கண்கவர் உலகமாகும். இந்து கடவுள்களின் பெயர்கள் அவர்களை வணங்கும் இடத்தைப் பொறுத்தும், மக்களைப் பொறுத்தும் மாறுபடும்.

இதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு ஈசன் மைந்தனான முருகப்பெருமான்தான். தமிழ்க்கடவுள் முருகன் வடஇந்தியர்களால் கார்த்திகேயா என்று அழைக்கப்படுகிறார். சூரசமஹ்ரமான இன்று அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகின் கடவுள்

அழகின் கடவுள்

" அழகென்ற சொல்லுக்கு முருகன் " என்று கூறுவார்கள். அதற்கேற்றாற் போல அழகிய கடவுள்களில் ஒருவராக முருகன் திகழ்கிறார். அவரது சகோதரனான விநாயகர் போல குறும்பானவராக இல்லாமல் முருகன் எப்போதும் அமைதியான ஒருவராகவே சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரின் கடமை அசுரர்களை அழிப்பதாகவே இருந்தது. அவருக்கு முழு நிலவின் பிரகாசத்தை ஒத்த ஒரு முகம் இருந்ததாக புராணக்கதைகள் கூறுகிறது.

சண்முகன்

சண்முகன்

சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் ஆற்றலின் சக்தி உருவமாகத் தோன்றிய நெருப்பு பந்து ஆறு முகங்களைக் கொண்ட குழந்தையின் வடிவத்தை எடுத்தது - ஈசனம், சத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்தியோஜாதம் மற்றும் அதுமுகம், எனவே அதற்கு சண்முகா அல்லது ஷதானன் என்று பெயர். சண்முகனை கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் அவருக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உள்ளது.

சிலையின் அடையாளம்

சிலையின் அடையாளம்

முருகப்பெருமானின் சிலையை நீங்கள் பார்த்தால், ஒருபுறம், அவர் ஒரு ஈட்டியை சுமக்கிறார். இது வேல் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு திரிசூலம் அல்ல. இது குண்டலினி சக்தியின் அடையாளமாகும். மறுபுறம், அவர் ஒரு சிறிய கொடியை சுமக்கிறார், அதில் சேவல் உள்ளது. போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தாரகாசூரன் சேவல் ஆனார். போரில் தாரகாவை தோற்கடித்த பிறகு, முருகர் அவரது உயிரைக் காப்பாற்றி, அவர் என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். தாரகாசூரன் எப்போதும் இறைவனின் காலடியில் இருக்கும்படி கேட்டார், எனவே முருகன் அவரை தனது கொடியில் சின்னமாக மாற்றினார்.

MOST READ: 95% வெற்றியடைந்த அமெரிக்க கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள்... சோதனை செஞ்சவங்களே கேளுங்க...!

வாகனம்

வாகனம்

முருகனின் உருவப்படத்தில் அவரது வாகனத்திற்கு நிறைய முக்கியத்துவத்தை அளிக்கிறது, பராவணி எனப்படும் மயில்.புராணக்கதைப்படி, பராவணி முதலில் முருகனின் கோபத்திற்கு ஆளான சூரபத்மா என்று அழைக்கப்படும் ஒரு அரக்கன். அவருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, முருகன் சூரபத்மாவைத் தோற்கடித்து, அவனது வளைவுடன் இரண்டு பகுதிகளாகப் பிரித்தார். அதுதான் பின்னர் அவரின் வாகனமாக மாறியது.

சுவாமிநாதர்

சுவாமிநாதர்

மிகவும் சுவாரஸ்யமான புராணக்கதை சிவனின் மகனாக இருந்த முருகன் தனது தந்தையின் குருவாக மாறியது மற்றும் சுவாமிநாதர் என்று அறியப்பட்ட கதையை விவரிக்கிறது. ஒருமுறை முருகன் பிரம்மாவிடம் கேட்டார் - ஓம் என்றால் என்ன? பிரம்மா பதிலளித்தார் மற்றும் ஓம் என்பதன் அர்த்தத்தை அவருக்கு விளக்கினார், ஆனால் அவர் திருப்தி அடையவில்லை. அதனால் அவரை சிறையில் அடைத்தார். பின்னர், அவர் தனது தந்தை சிவனிடம் இந்த சம்பவம் குறித்து கூறினார். சிவன் தனது மகனிடம், "பிரம்மா பிரபஞ்சத்தை உருவாக்கியவர், அவர்தான் ஓம் என்பதன் அர்த்தத்தை உங்களுக்கு விளக்க முடியும். ஆனால் முருகன் அதற்கும் சம்மதிக்கவில்லை. அதன்பின்னர் அவரே குருவாக மாறி சிவனுக்கு அதன் அர்த்தத்தை விளக்கினார். அதனால் முருகனுக்கு சிவகுரு என்ற பெயரும் உள்ளது.

திருத்தணி மலை

திருத்தணி மலை

திருத்தணி முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகும். இது யானையின் வடிவத்தில் இருக்கும் ஒரு மலையின் மேல் அமைந்துள்ளது. புராணக்கதை என்னவென்றால், இந்திரன் தனது மகள் தேவசேனாவை(எ) தேவயானியை முருகனை மணம் முடித்து கொடுத்தபோது. அவர் தனது வெள்ளை யானையான ஐராவத்தை வரதட்சணையின் ஒரு பகுதியாக புதிதாக திருமணமான தம்பதியினருக்கு பரிசளிததாக கூறப்படுகிறது. அதுதான் திருத்தணி மலையாக மாறியதாக கூறப்படுகிறது.

MOST READ: அடிமை ராசிகளான இவர்கள் பழைய நினைவுகளில் இருந்து ஒருபோதும் வெளிவரமுடியாமல் தவிப்பார்களாம் தெரியுமா?

தேவ சேனாதிபதி

தேவ சேனாதிபதி

முருகப்பெருமானை தேவ சேனபதி', ‘யுதரங்கா' என்றும் அழைக்கிறார்கள். அசுரர்களை அழிப்பதற்காகவே பிறந்ததால் தேவர்களின் படையுடைய சேனாதிபதியாக முருகன் விளங்கினார். அதனாலதான் அவர் போர்க்கடவுள் என்று அழைக்கப்படுகிறார். பரிபூரணமான ஆளுமையும், போர்க்கலையில் நிபுணத்துவமும் இருந்ததால் அவர் இந்த உயர்நிலையைப் பெற்றார். மக்களின் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை அழிப்பதால் அவர் வணங்க வேண்டிய முக்கிய கடவுளாக இருக்கிறார். இலங்கை, தாய்லாந்து, மலேசியா போன்ற பல நாடுகளில் முருகன் வெவ்வேறு பெயர்களில் வணங்கப்படுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kanda Sashti 2020: interesting facts about Lord Murugan in Tamil

Check out the interesting facts about Lord Murugan.
Desktop Bottom Promotion