Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
2023 குரு பெயர்ச்சியால் ஏப்ரல் முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றியும், நிறைய பணமும் கிடைக்கும்..
2023 ஆம் ஆண்டில் குரு பகவான் ஏப்ரல் மாதத்தில் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு குரு செல்லவிருக்கிறார்.
ஜோதிடத்தின் படி, குரு ஒரு மங்களகரமான கிரகமாகும். இந்த குரு வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இதனால் குருவின் ராசி மாற்றம் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் ஜோதிடத்தில் குரு வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான காரணியாக கருதப்படுகிறார். ஆகவே தான் குருப்பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது குரு பகவான் தனது சொந்த ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார்.

2023 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த 2023 ஆம் ஆண்டில் குரு பகவான் ஏப்ரல் மாதத்தில் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு குரு செல்லவிருக்கிறார். இந்த குரு பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு 2023 குரு பெயர்ச்சியால் தொழிலில் நல்ல வெற்றியும், நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் கிடைக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

சிம்மம்
2023 குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். ஏனெனில் சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டின் வீடாகும். எனவே இக்காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். அதோடு நிதி விஷங்களில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நற்பலன்கள் கிடைக்கும். எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய விரும்பினால், 2023 குரு பெயர்ச்சிக்கு பின் செய்தால், நன்றாக இருக்கும். வணிகர்கள் இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணத்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

கடகம்
2023-ல் நடக்கும் குரு பெயர்ச்சிக்கு பின் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஏனெனில் கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இந்த காலத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வீட்டில் பொருள் இன்பம் அதிகரிக்கும். வீடு மற்றும் வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேறும். வணிகர்கள் புதிய ஆர்டர்களைப் பெற வாய்ப்புள்ளது. இதனால் வணிகத்தில் நல்ல லாபமும் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலை பாராட்டப்படும். மறுபுறம் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2023 குரு பெயர்ச்சி நல்ல பலன்களை வழங்கும். ஏனெனில் துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இது திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மைக்கான வீடாகும். எனவே இக்காலத்தில் திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்கும். அதோடு குடும்ப வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
