Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
2022 குரு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழியப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கிரகம் வியாழன்/குரு. இந்த குரு 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி அதன் சொந்த ராசியான மீன ராசிக்கு செல்லவிருக்கிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரக பெயர்ச்சிகள் மனித வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு கிரகம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகும் போது அல்லது வேறொரு கிரகத்துடன் இணையும் போது, அது ஒருவரின் ஜாதகத்தை நேரடியாக பாதிக்கிறது. கிரக பெயர்ச்சிகள் ஒருவரின் வாழ்வில் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தலாம். அதுவும் சுப கிரகம் பெயர்ச்சியாகும் போது, அது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் தருவதோடு சில ராசிக்காரர்களின் முன்னேற்றத்தில் தடைகளையும் ஏற்படுத்துகிறது.

2022 குரு பெயர்ச்சி
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கிரகம் வியாழன்/குரு. இந்த குரு 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி அதன் சொந்த ராசியான மீன ராசிக்கு செல்லவிருக்கிறது. சொந்த ராசிக்கு குரு செல்வதால், இந்த குரு பெயர்ச்சியின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. குரு மீன ராசிக்கு செல்வதால் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலனைப் பெறலாம். குறிப்பாக சில ராசிக்காரர்கள் நல்ல பண வரவைப் பெறலாம். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
2022 குரு பெயர்ச்சியின் போது மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் கவலைகள் நீங்கும். சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு இது ஒரு சிறந்த காலமாக இருக்கும். புதிதாக தொழில் தொடங்க அல்லது புதிய வேலையில் சேரத் திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு நல்ல காலம். இப்பெயர்ச்சியால் நல்ல பண வரவு உண்டு. குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். பொதுவாக குரு பகவான் மீன ராசியில் சஞ்சரிப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இப்பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டமும் கௌரவமும் கிடைக்கும். குழந்தைகள் மற்றும் நிதி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட நல்ல வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் மேலதிகாரிகளுடனான உறவுகள் மேம்படும். காதலிப்பவர்களுக்கு திருமணம் செய்ய வாய்ப்புக்கள் கிடைக்கும். இதுவரை திருமணமான தம்பதிகள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது இப்பெயர்ச்சிக்கு பின் தீர்க்கப்படும்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் மிதுன ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சிக்கு பின் பல பிரச்சனைகளில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. உங்களிடம் கடன் வாங்கிய ஒருவரிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். உங்கள் திட்டங்களுக்கு நிதி உதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக வியாபாரத்தை விரிவுப்படுத்த சில வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதே வேளையில் இப்பெயர்ச்சிக்கு பின் அதிக பணத்தை சம்பாதிப்பார்கள்.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு ராசியின் அதிபதி நுழைவதால், இக்காலத்தில் நல்ல முன்னேற்றத்தை மீன ராசிக்காரர்கள் காண்பார்கள். இப்பெயர்ச்சியினால் வாழ்க்கைத் துணையுடனான உறவில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மேலும் சமூகத்தில் நன்மதிப்பைப் பெறுவார்கள். பணியிடத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது மற்றும் பதவி உயர்வைப் பெறுவார்கள். வருமானம் உயரும். தொழிலில் சாதகமான வளர்ச்சிக்கான வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.



Click it and Unblock the Notifications
