குருவும், சனியும் இணைந்திருப்பதால் நவம்பர் வரை ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்க போகுது தெரியுமா?

மகரத்தில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வரும் நிலையில், செப்டம்பர் 18 ஆம் தேதி குரு பகவான் பின்னோக்கி மகர ராசிக்கு வந்து, சனி பகவானுடன் இணைந்து உள்ளார்.

வேத ஜோதிடத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகம் குரு/வியாழன். மேலும் குரு பகவான் யாருடைய வாழ்க்கையிலும் தீங்கு விளைவிக்காத கிரகமும் கூட. இத்தகைய குரு அறிவு, ஞானம், மதம், சட்டம் மற்றும் உயர் கல்வி ஆகியவற்றைக் குறிக்கிறது. செல்வத்தின் காரகன் குரு. மறுபுறம், சனி கவலை, வரம்புகள், கட்டுப்பாடுகள், தாமதம் மற்றும் கஷ்டங்களைக் குறிக்கிறது. பலர் சனியை நெருப்பாக கருதுகின்றனர். ஆனால் நடைமுறையில், இது கல்வி, தொழில், வியாபாரம் மற்றும் திருமணம் போன்ற நம் வாழ்வின் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Jupiter Saturn Conjunction In Capricorn 2021 Effects On Zodiac Signs In Tamil

மகரம் ஸ்திரத்தன்மை, அமைப்பு, கடின உழைப்பு மற்றும் இலக்கு அமைப்பிற்கான அடையாளம். கடல் ஆட்டின் அடையாளத்தைக் கொண்ட மகர ராசியை ஆளுபவர் சனி பகவான். இத்தகைய மகரத்தில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வரும் நிலையில், செப்டம்பர் 18 ஆம் தேதி குரு பகவான் பின்னோக்கி மகர ராசிக்கு வந்து, சனி பகவானுடன் இணைந்து உள்ளார். சனியும், குருவும் ஒரே ராசியில் பயணிப்பதால், இது சக்தி வாய்ந்த ஆற்றலை உருவாக்கும்.

இப்போது சனியும், குருவும் மகர ராசியில் இணைந்திருப்பதால், ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மகர ராசியில் சனி-குரு இணைவது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக இருக்கும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் வேலை மாற்றமும் சாத்தியமாகும். அதுவும் முயற்சி செய்தால், உங்களுக்கு பிடித்த இடத்தில் வேலை கிடைக்கும். உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும் மற்றும் பெயரும், புகழும் உயரும். நீங்கள் உங்கள் வேலையில் மிகவும் தைரியமாக இருப்பீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். காதலிப்பவர்கள் இக்காலத்தில் தங்கள் காதலை சிறப்பாக அனுபவிக்க வாய்ப்புள்ளது. விஞ்ஞானிகளுக்கு இது மிகவும் நல்ல நேரம். இக்காலத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷபம்

மகரத்தில் சனி-குரு இணைவது ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தர வாய்ப்புள்ளது. இக்காலத்தில் வேலை தொடர்பான பயணத்திற்கு வாய்ப்புள்ளது. மத மற்றும் ஆன்மீகவாதியாக இருப்பீர்கள். இக்காலத்தில் வெற்றி நிச்சயம் என்பதால் வழக்கறிஞர்களுக்கு சிறந்த நேரம். சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு நல்ல நேரம் மற்றும் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். மேற்படிப்பை மேற்கொள்ள நினைப்பவருக்கு இது சாதகமான காலமாக இருக்கும். இந்த காலத்தில் யாத்திரைக்கு வாய்ப்புள்ளது. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கும் வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு அற்புதமான காலமாக இருக்கும். திருமணமாகாதவர்கள், தங்களின் புதிய காதலை சந்திப்பார்கள்.

மிதுனம்

மிதுனம்

மகரத்தில் சனி-குரு இணைந்து இருப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைக் கொடுக்கும். இது உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்யும் காலம். உங்கள் வாழ்வில் திடீர் மாற்றத்தை சந்திக்க நேரிடலாம் மற்றும் நீங்கள் அதற்கு தயாராக இல்லாமல் இருக்கலாம். ஆராய்ச்சியில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். நகை வியாபாரிகளுக்கு நல்ல காலம். எதிர்பாராத நிகழ்வுகள் அதிகம் மற்றும் திடீர் ஆதாயம் சாத்தியமாகும். மாமியார் உறவு சிறப்பாக இருக்கும். காதலிப்பவர்கள் மிகவும் ரகசியமாக சந்திக்கக்கூடும். தனிமையில் இருப்பவர்களுக்கு திடீர் புதிய காதல் சாத்தியமாகலாம். மாணவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள் மற்றும் இது நல்ல முடிவுகளைக் கொண்டு வரும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இது மகிழ்ச்சியான காலம். திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு அது நடக்கும். காதலிப்பவர்கள் தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லக்கூடும். வியாபாரிகளுக்கு இது நல்ல நேரம். வியாபாரத்தில் உள்ள பிரச்சனைகள் குறையத் தொடங்கும் மற்றும் கூட்டாண்மை வலுபெறும். புதிய வியாபாரத்திற்கு இது சாத்தியமான காலம். சட்ட சிக்கல்கள் தீர்க்கப்படும். விவாகரத்து பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, ஒரு முடிவு கிடைக்கும். கலைஞர்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு இது நல்ல காலம்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். தினசரி வாழ்க்கை நடைமுறைகள் சிறந்ததாக இருக்கும். உங்களின் ஆரோக்கியம் மேம்படும். உடற்பயிற்சி பழக்கத்தை தினசரி மேற்கொள்ள நல்ல காலம். இக்காலத்தில் புதிய வேலையை பெறுவீர்கள். எதிரிகள் உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். இக்காலத்தில் நீங்கள் அதிகம் ஊக்குவிக்கப்படுவீர்கள். போட்டியில் நிச்சயம் வெற்றி கிட்டும். மருத்துவமனைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால், உணவைக் கட்டுப்படுத்தவும், சரியான உணவை உண்ணவும். உங்களின் கடன் குறைய ஆரம்பிக்கும். மாணவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க முயல வேண்டும். காதல் வாழ்க்கையில் சில சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், காதலிப்பவர்கள் காதல் வாழ்க்கையை கவனமாக கையாள வேண்டும். காதலிக்காதவர்கள் காதலில் விழுவதைத் தவிர்க்க வேண்டும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நல்ல காலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மகிழ்விக்க சற்று நேரம் எடுக்கலாம். படைப்பாற்றல் கலைஞர்களுக்கு சிறந்ததாக இருக்கும். இது செயல்திறன் மற்றும் படைப்பாற்றல் வெளிப்பாட்டிற்கு சிறந்த நேரம். கலைகளில் ஒரு புதிய பரிணாமம் சாத்தியமாகும். நிதி கவலைகள் குறையத் தொடங்கும். காதல் வாழ்க்கை சிறந்ததாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தன்னம்பிக்கையை உணர்வார்கள். காதல் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை இருக்கும். கல்வித் துறையில் முதலீடுகளுக்கு நல்ல நேரம்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இது நல்ல பலனைத் தரும் காலம். வீட்டைப் புதுப்பிக்க இது நல்ல நேரம். புதிய சொத்தை வாங்குவது உங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். நில ஒப்பந்தங்கள் மிகவும் சுமூகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் தாய் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இக்காலத்தில் புதிய கார் வாங்க வாய்ப்புள்ளது. மேலும் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கொண்டுவருவதற்கான சிறந்த காலம். மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் தெளிவாகப் பேச வாய்ப்புள்ளது. குழந்தைகள் தாத்தா பாட்டியுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். இக்காலத்தில் பெயரும் புகழும் ஓங்கும். காதலிப்பவர்கள், தங்கள் காதலை பெற்றோரிடம் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. இதய பிரச்சனைகள் குறையத் தொடங்கும். உங்களின் மாமியார் மகிழ்ச்சியாக இருப்பார்கள் மற்றும் உங்கள் உறவுகள் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இக்காலம் நல்ல பலனைத் தரும். இக்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பயணம் மகிழ்ச்சியைத் தரக்கூடும். உங்கள் உடன்பிறப்புகளுடனான உங்கள் உறவு மேம்படும். இக்காலத்தில் உங்களின் ஆசை அதிகரிக்கும். படைப்பாற்றல் சிறப்பாக இருக்கும் என்பதால் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு நல்ல நேரம். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படலாம். காதலர்கள் இந்த நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் ஒருவருக்கொருவர் நம்ப வேண்டும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். வலுவான வங்கி இருப்புக்கு சிறந்த நேரம். அதிக பணம் சம்பாதிக்க புதிய ஆதாரங்களைப் பெறுவீர்கள். உங்களின் அனைத்து நிதி கவலைகளும் குறையும். குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் குடும்ப பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும். இக்காலத்தில் செல்வந்தர்களாக உணர்வீர்கள். இக்காலத்தில் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் இருக்கும். மாணவர்கள் குடும்ப வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். இரண்டாவது திருமணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு சரியான நேரம்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் நல்ல பலன்களைத் தருவதாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தை உணர்வீர்கள். உங்களின் நம்பிக்கையில் மிகவும் தீவிரமாக இருப்பீர்கள். உங்களின் ஈகோ அதிகரிக்கும். அதே வேளையில் உங்களின் நம்பிக்கையும் அதிகமாக இருக்கும். இக்காலம் திருமணத்தை திட்டமிடுவதற்கு சிறந்த காலம். இதுவரை காதலில் விழாதவர்கள், இப்போது காதலில் விழலாம். அதே வேளையில் காதல் முறிவுகளுக்கும் சாத்தியம் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக ஈடுபாடு கொள்ள வாய்ப்புள்ளது. மொத்தத்தில் மாணவர்கள் தங்கள் கல்வியில் தீவிரமாக இருப்பார்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இக்காலம் கலவையான பலன்களைத் தரும். வெளிநாட்டு பயணத்திற்கான சிறந்த நேரம். இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் கட்டுப்படுத்தப்படும் மற்றும் நீங்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உடல்நலப் பிரச்சினைகள் குறையத் தொடங்கும். இருப்பினும், நீங்கள் உங்கள் உணவைக் கட்டுப்படுத்த வேண்டும். யோகா மற்றும் தியானம் உங்களுக்கு அபரிமிதமான பலத்தை அளிக்கலாம், மேலும் அதில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கலாம். மாணவர்கள் தங்கள் படிப்பில் ஆர்வமின்மையை உணரலாம், ஆனால் தியானம் அவர்களுக்கு நிறைய உதவும். காதலிப்பவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதை உணர்வார்கள். சொல்லப்போனால் பிரிவு ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமான பலன்களைத் தரும். முதலீடுகளுக்கு சாதகமான நேரம். நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள் மற்றும் புதிய விஷயங்களில் முதலீடு செய்வது எதிர்கால ஆதாயங்களுக்கு வலுவான அடித்தளத்தை அளிக்கும். வியாபாரத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் குறைய ஆரம்பிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஈடுபாடு வெற்றியைத் தரும். அதிர்ஷ்டவசமாக, நீங்கள் ஒரு தொழில்முனைவோராகவும் மாறலாம். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். மாணவர்கள் ஜாலியாகவும், விளையாட்டுகளில் அதிக நேரத்தை முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது. அதனால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படலாம். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் தனிமையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion