Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக
நீங்கள் கிச்சனில் செய்யும் இந்த தவறுகள் உங்கள் வாழ்க்கையில் தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...!
இந்து புராணங்களின்படி, மிகவும் சுகாதாரமான மற்றும் புனிதமான சமையலறைக்குள் இந்த பின்வரும் தவறுகள் ஏதேனும் செய்யப்பட்டால், அது உங்களின் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
நமது வீட்டை பொறுத்தவரையில் வாஸ்து என்பது மிகவும் முக்கியமானதாகும். வாஸ்துவின் படி நமது வீட்டில் இருக்கும் ஒவ்வொரு இடமும் மிகவும் முக்கியமானதாகும். பூஜை அல்லது வழிபாட்டு அறைக்கு அடுத்தபடியாக ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் இருக்கும் சமையலறை உங்கள் இல்லத்தில் பல அதிசயங்களை உருவாக்கும்.

இந்து புராணங்களின்படி, மிகவும் சுகாதாரமான மற்றும் புனிதமான சமையலறைக்குள் இந்த பின்வரும் தவறுகள் ஏதேனும் செய்யப்பட்டால், அது உங்களின் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த பதிவில் சமையலறையில் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

சமையலறையை அமைத்தல்
சமையலறையில் வைக்கும் ஒவ்வொரு பொருளுக்கும், இடத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அடுப்பிற்கு பக்கத்தில் ஒருபோதும் கை கழுவும் இடத்தை நீங்கள் பார்க்க முடியாது. துப்புரவு பகுதியும், சமையலறையும் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது என்பதற்கும் காரணம் உள்ளது. உங்கள் சமையலறையில் சில உலோகங்களில் செய்யப்பட்ட பாத்திரங்கள் கூட உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், துரதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா?

அலுமினிய பாத்திரங்கள்
இந்து புராணங்களின் படி அலுமினியம் போன்ற குறிப்பிட்ட உலோகத்தின் பயன்பாடுகள் ஒரு நபரின் விதி மற்றும் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையில், அலுமினிய பாத்திரங்கள் எதிர்மறை சக்தியை ஈர்க்கின்றன, ஏனெனில் இந்த குறிப்பிட்ட உலோகம் ராகுவால் பாதிக்கப்படுகிறது. உங்கள் சமையலறையில் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அலுமினிய பாத்திரத்தில் ஒருபோதும் பாலை வைக்க வேண்டாம்
பாலின் குளிர்ச்சியானது சந்திரனை பிரதிபலிக்கிறது. மேலும், எந்தவொரு நல்ல செயலுக்கும் ராகு மற்றும் சந்திரன் ஒரு நல்ல கலவையாக கருதப்படாததால், அலுமினிய பாத்திரத்தில் பாலைப் பாதுகாக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அலுமினிய பாத்திரத்தில் அரிசி சமைப்பதை ஒருவர் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது சுக்கிரனின் நல்ல விளைவை குறைக்கிறது. அலுமினிய பாத்திரத்தில் சமைத்த அரிசியை தொடர்ந்து சாப்பிட்டால் செரிமானம் தொடர்பான வியாதிகளால் ஒருவர் பாதிக்கப்படுவதைக் காணலாம். இது தம்பதிகளுக்குள்ளும் சிக்கல்களை உண்டாக்கும்.

வீட்டின் நடுவில் சமையலறை கட்ட வேண்டாம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டிற்கு முன்னாலோ அல்லது வீட்டிற்கு நடுவிலேயோ சமையலறையை கட்டக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. சமையலறை எப்போதும் வீட்டிற்கு பின்புறத்தில்தான் இருக்க வேண்டும்.

சிவப்பு வண்ணப்பூச்சியைத் தவிர்க்கவும்
சிவப்பு என்பது நெருப்பின் வடிவத்தைக் குறிக்கிறது, மேலும் ஒவ்வொரு சமையலறையிலும் ஏற்கனவே ஒரு நிரந்தர நெருப்பு ஆதாரம் இருப்பதால், தீ ஆற்றலை அதிகரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சமையலறைக்கு கீழே கழிப்பறை இருக்கக்கூடாது
சமையலறைக்கு கீழேயோ அல்லது மேலேயயோ கழிப்பறை அல்லது படுக்கையறை உள்ள வீட்டில் ஒருபோதும் குடியிருக்கக்கூடாது. கழிப்பறை சமையலறைக்கு மேலே கட்டப்பட்டால், அது அனைத்து மாசுபட்ட சக்தியையும் உறிஞ்சி நேர்மறை ஆற்றலுடன் கலக்கிறது என்று நம்பப்படுகிறது. இதனால் உங்கள் இல்லத்தில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். சமையலறைக்கு அடியில் ஒரு கழிப்பறை கட்டப்பட்டிருந்தால், நேர்மறை ஆற்றல் நேரடியாக வெளியேறும்.

சமையலறைக்கு கீழே படுக்கையறை இருக்கக்கூடாது
சமையலறைக்கு மேலே, குறிப்பாக அடுப்பு பகுதிக்கு மேலே ஒரு படுக்கையறை அமைப்பதை ஒருவர் தவிர்க்க வேண்டும். இது தீ ஆற்றலை எதிரொலிக்கிறது, இது கடுமையான திருமண முரண்பாட்டை ஏற்படுத்தும் அளவுக்கு தீங்கு விளைவிக்கும்.

சமையலறை இருக்கக்கூடாத திசை
வடமேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் சமையலறை இருந்தால் இது மிகவும் மோசமான சூழ்நிலை ஆகும். உங்கள் வீட்டை மாற்றவோ அல்லது உங்கள் சமையலறையின் இருப்பிடத்தை மறுகட்டமைக்கவோ முடியாவிட்டால், எதிர்மறை விளைவைக் குறைக்க இந்த மாற்றங்களை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும். இந்த நிலைமை வீட்டின் மனிதனுக்கு கடுமையான இழப்புகளை அல்லது மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடும்.

செய்ய வேண்டியவை
முதலில், உங்கள் சமையலறையிலிருந்து, குறிப்பாக மெழுகுவர்த்திகள், தீப்பெட்டி, லைட்டர்கள் அல்லது எரிவாயு அடுப்புகளில் இருந்து எந்தவொரு நெருப்பு மூலத்தையும் அகற்றவும்; நீங்கள் அவற்றை தூண்டல் பர்னர் அல்லது மின்சார அடுப்பு மூலம் மாற்றலாம். ஒரு பெரிய நீர் பாத்திரம், மீன் தொட்டி வைப்பது இதனால் எதிர்மறை விளைவுகளை குறைக்கும்.



Click it and Unblock the Notifications