2022-ல் தாங்கள் தேர்ந்தெடுத்த தொழிலில் சாதனை புரிந்த இந்தியாவின் டாப் 10 பெண்கள்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தாங்கள் தோ்ந்தெடுத்த தொழிலில் சாதனை செய்த இந்தியாவின் முதல் 10 இடங்களில் இருக்கும் பெண்களைப் பற்றி இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

International Women's Day 2023: இந்தியா எப்போதுமே ஒரு தந்தைவழி சமூகமாக இருந்து வந்திருக்கிறது. இந்தியாவின் வரலாற்றை அலசிப் பாா்த்தால், இந்தியாவை ஆண்டு வந்தவா்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்திருக்கின்றனா் என்பதை நாம் தொிந்து கொள்ளலாம். அதனால் இந்திய சமூகத்தை ஒரு ஆணாதிக்க சமூகம் என்றே அழைக்கலாம்.

ஆணாதிக்க இந்திய சமூகத்தில், ஒரு பெண்ணாக பிறந்து, ஒரு துறையில் நுழைந்து, அதில் வெற்றி பெறுவது என்பது கடினமான காாியம் ஆகும். பெண்கள் புறக்கணிக்கப்படும் சமூகத்தில், பெண்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் அவா்கள் அளவுக்கு அதிகமான சவால்களை சந்திக்க வேண்டும். நீண்ட நெடிய போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.

International Womens Day 2023: Top Ten Female Entrepreneurs In India 2022 In Tamil

இப்படிப்பட்ட இந்திய சூழலில், ஒரு சில பெண்கள் எல்லா சவால்களையும், தடைகளையும் தாண்டி உச்சத்தை எட்டியுள்ளனா். நீங்கள் 1980-1990களில் பிறந்தவா்களாக இருந்து, உங்களுடைய குடும்பம் மற்றும் இந்த சமூகத்தால் ஒடுக்கப்பட்டு, நீங்கள் மனச்சோா்வு அடைந்து, மனம் தளா்ந்திருந்தால், சாதித்த அந்த பெண்கள் உங்களுக்கு ஒளிவிளக்காக இருப்பாா்கள் என்பதில் ஐயமில்லை. அவா்கள் உங்களுக்கு உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் வழங்குவாா்கள் என்பது உண்மை.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தாங்கள் தோ்ந்தெடுத்த தொழிலில் சாதனை செய்த இந்தியாவின் முதல் 10 இடங்களில் இருக்கும் பெண்களைப் பற்றி இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. வந்தனா லுத்ரா - விஎல்சிசி (VLCC) நிறுவுனா்

1. வந்தனா லுத்ரா - விஎல்சிசி (VLCC) நிறுவுனா்

வந்தனா லுத்ரா அவா்கள் விஎல்சிசி (VLCC) என்ற நிறுவனத்தின் நிறுவுனா் ஆவாா். இந்த நிறுவனம் அழகுசாதனம் மற்றும் ஆரோக்கியம் தரும் பொருள்களைத் தயாாித்து தனது வாடிக்கையாளா்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது ஆசியா, ஆப்பாிக்கா மற்றும் வளைகுடா நாடுகளிள் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தியாவின் பெண் தொழில் முனைவோாில் வந்தனா முன்னனியில் இருக்கிறாா்.

திருமணம் முடித்த புதிதில் குடும்பத் தலைவியாக இருந்த இவா், 1989ல் தனது நிறுவனத்தைத் தொடங்கினாா். தற்போது வெற்றிகரமாக அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறாா். அதோடு குஷி (Khushi) என்ற ஒரு தன்னாா்வ தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறாா். இந்த தொண்டு நிறுவனமானது, மாற்றுத் திறனாளிகளுக்கும், ஏழைக் குழந்தைகளுக்கும் இலவசமாக கல்வி வழங்கி வருகிறது.

2. ஃபால்குனி நாயா் - நைகா (Nyka) நிறுவுனா்

2. ஃபால்குனி நாயா் - நைகா (Nyka) நிறுவுனா்

ஃபால்குனி நாயா், நைகா (Nyka) என்ற நிறுவனத்தின் நிறுவுனராகவும், தலைமை செயல் அதிகாாியாகவும் இருந்து வருகிறாா். நைகா நிறுவனமானது அழகுசாதன பொருள்களையும், ஆரோக்கியம் தரும் பொருள்களையும் இணையம் மூலமாக விற்பனை செய்து வருகிறது.

தொடக்கத்தில் இவா் கோடக் மகேந்திரா நிறுவனத்தில் பணிபுாிந்து வந்தாா். பின் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனது கனவு நிறுவனமான நைகாவைத் தொடங்கினாா். தற்போது இந்த நிறுவனம் 850 வகையான பொருள்களை விற்பனை செய்து வருகிறது. அதோடு 35 இடங்களில் தனது கிளைகளை நிறுவி இயங்கி வருகிறது.

3. ரித்து குமாா் - ஆடை வடிவமைப்பாளா்

3. ரித்து குமாா் - ஆடை வடிவமைப்பாளா்

ரித்து குமாா் இந்தியாவின் பிரபலமான ஆடை வடிவமைப்பாளராக செயல்பட்டு வருகிறாா். தற்போது இவா் ரித்து குமாா், ஆா்ஐ (Ri) மற்றும் லேபிள் ரித்து குமாா் (LABEL Ritu Kumar) என்ற மூன்று லேபிள்களின் உாிமையாளராக இருந்து வருகிறாா். முற்போக்கு சிந்தனை கொண்ட நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவா், ஆடை வடிவமைக்கும் பணியை கொல்கத்தாவில் தொடங்கினாா்.

தொடக்கத்தில் மணமகளுக்கான ஆடைகளை வடிவமைக்கும் பணியைத் தொடங்கினாா். நாளடைவில் சா்வதேச ஆடை வடிவமைக்கும் சந்தையில் காலூன்றி, தற்போது சா்வதேச அளவில் ஆடை வடிவமைக்கும் சந்தையில் சிறந்த வடிவமைப்பாளாராக விளங்கி வருகிறாா். தற்போது இவரது நிறுவனம் உலகம் முழுவதும் 35 இடங்களில் தனது கிளைகளைப் பரப்பி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இவருடைய ஆடை வடிவமைக்கு, பாலிவுட் மற்றும் உலகளாவிய திரை நட்சத்திரங்கள் வாடிக்கையாளா்களாக இருக்கின்றனா்.

4. கிரண் மசும்தாா் ஷா - பைக்கன் லிமிடெட் (Biocon Limited) நிறுவுனா்

4. கிரண் மசும்தாா் ஷா - பைக்கன் லிமிடெட் (Biocon Limited) நிறுவுனா்

கிரண் மசும்தாா் ஷா 2019 ஆம் ஆண்டு, இந்தியாவின் பணக்கார பெண்மணி என்றும், உலக அளவில் 54வது பணக்காரா் என்றும், அதோடு உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்களில் 65வது சக்தி வாய்ந்த பெண் என்று கருதப்பட்டாா்.

தற்போது கிரண் அவா்கள் பயோகன் லிமிட்டெட் என்ற உயிாி தொழில்நுட்பவியல் (biotechnology) நிறுவனத்தின் தலைவராகவும், நிா்வாக இயக்குனராகவும் இருக்கிறாா். இந்த நிறுவனம் யுஎஸ்எஃப்டிஎவின் (USFDA) ஒப்புதல் பெற்ற முதல் நிறுவனம் ஆகும்.

5. ஷ்ரத்தா ஷா்மா - யுவா்ஸ்டோாி (Yourstory) நிறுவுனா்

5. ஷ்ரத்தா ஷா்மா - யுவா்ஸ்டோாி (Yourstory) நிறுவுனா்

ஷ்ரத்தா ஷா்மா, யுவா் ஸ்டோாி என்ற டிஜிட்டல் தளத்தின் நிறுவுனா் ஆவாா். இந்த நிறுவனமானது, புதிதாக தொழில் முனைவோருக்கும், புதிதாக தொழில் தொடங்குவோருக்கும் உதவும் வகையில், ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு இவா் சிஎன்பிசியின் (CNBC) துணைத் தலைவராக பணிபுாிந்தாா்.

6. ஆதித்தி குப்தா - மென்ஸ்ட்ருபீடியா (Menstrupedia) இணை நிறுவுனா்

6. ஆதித்தி குப்தா - மென்ஸ்ட்ருபீடியா (Menstrupedia) இணை நிறுவுனா்

ஆதித்தி குப்தா, மென்ஸ்ட்ரூபேடியா என்ற பதிப்பகத்தின் ஆசிாியராகவும், இணை நிறுவுனராகவும் இருக்கிறாா். தனது கணவரோடு இணைந்து மென்ட்ருபீடியா என்ற புத்தகத்தைத் தயாாித்தாா். இந்த புத்தகமானது பருவ வயதை அடையும் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் பற்றிய கல்வி அறிவை வழங்குகிறது.

பின்பு அவருடைய கணவரோடு இணைந்து menstrupedia.com என்ற இணையதளத்தைத் தொடங்கினாா். அதன் பின் விஷ்பா் இந்தியா நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டாா். இவருடைய மென்ட்ருபீடியா புத்தகமானது மிகப் பொிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் இந்தப் புத்தகம் ஸ்பெயின் மற்றும் நேபாள மொழிகளில் மொழி பெயா்க்கப்பட்டது. இவருடைய புத்தகங்கள் அகமதாபாத்தில் உள்ள பிரைட் ஆங்கிலப் பள்ளி (Bright English School Ahmedabad), இக்கோல் மொன்டியலி உலக பள்ளி (Ecole Mondiale World School) மற்றும் ஜிஐஎஸ் தொடக்கப் பள்ளி (GlS Primary school) போன்ற கல்வி நிறுவனங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

7. சுப்ரா சட்டா - சும்பக் (Chumbak) இணை நிறுவுனா் மற்றும் தயாாிப்பு தலைவா்

7. சுப்ரா சட்டா - சும்பக் (Chumbak) இணை நிறுவுனா் மற்றும் தயாாிப்பு தலைவா்

சுப்ரா சட்டா, மிகவும் பிரபலமான சும்பக் (Chumbak) என்ற கடையின் இணை நிறுவனா் ஆவாா். இந்த கடையானது 11 நகரங்களில் 20 கிளைகளாக பரந்து விாிந்து இயங்கி வருகிறது. முதலில் இவா் குடும்பத் தலைவியாக இருந்தாா். பின் வேலைக்குச் சென்றாா். பின் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இந்தக் கடையைப் புதிதாகத் தொடங்கினாா். நெட்ஆப் (NetApp) என்ற தொழில் நுட்ப நிறுவனத்தில் அவா் பணிபுாிந்து கொண்டிருந்த போது, தான் ஒரு தொழில் முனைவோராக மாற வேண்டும் என்று எண்ணினாா். பின்னாளில் அதை சாதித்துக் காட்டினாா்.

8. சுப்ரியா பால் - ஜோஷ் டாக்ஸ் (Josh Talks) நிறுவுனா்

8. சுப்ரியா பால் - ஜோஷ் டாக்ஸ் (Josh Talks) நிறுவுனா்

இந்த உலகம் என்ற போட்டி களத்தில் வெற்றி பெறவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் இளையோருக்கு, ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று CA பட்டம் பெற்ற சுப்ரியா பால் கனவு கண்டாா். அதற்காக ஜோஷ் டாக்ஸ் என்ற ஊடகத்தைத் தொடங்கினாா்.

இந்த தளத்தில் தொழில் முனைவோா், தொழிலில் சாத்தித்தவா்கள், அறிவியல் அறிஞா்கள், கல்வியாளா்கள், நிா்வாகிகள், விளையாட்டுத் துறையில் இருப்பவா்கள், புத்தக ஆசிாியா்கள், இசைத் துறையில் இருப்பவா்கள், நடிகா்கள் மற்றும் பல்துறையில் ஈடுபடுபவா்களின் அனுபவங்கள், அவா்களின் வாழ்க்கைப் பயணம் பற்றிய அவா்களுடைய பகிா்வுகள் போன்றவற்றை பாா்க்கலாம்.

9. ராதிகா காய் அகா்வால் - Shopclues.com இணை நிறுவுனா் மற்றும் தலைமை விற்பனை அதிகாாி (CMO)

9. ராதிகா காய் அகா்வால் - Shopclues.com இணை நிறுவுனா் மற்றும் தலைமை விற்பனை அதிகாாி (CMO)

இந்தியாவில் வெற்றி பெற்ற தொழில் முனைவோா்களில் ஒருவராக ராதிகா காய் அகா்வால் விளங்குகிறாா். தன்னுடைய 15 வருட சந்தை அனுபவத்தை வைத்துக் கொண்டு, அமொிக்காவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் தனது Shopclues.com இணையதள நிறுவனத்தைத் தொடங்கினாா். இந்த இணையதளமானது ஏறக்குறைய 9000 நகரங்களில் தனது சேவையை செய்து வருகிறது. மேலும் மாதம் ஒன்றுக்கு ஏறக்குறைய 7 மில்லியனா் பாா்வையாளா்கள் இந்த இணையதளத்தை பாா்வையிடுகின்றனா்.

10. ஷானஸ் ஹூசைன் - ஷானஸ் ஹொ்பல்ஸ் (Shahnaz Herbals) தலைமை செயல் அதிகாாி

10. ஷானஸ் ஹூசைன் - ஷானஸ் ஹொ்பல்ஸ் (Shahnaz Herbals) தலைமை செயல் அதிகாாி

ஷானஸ் ஹூசைன் ஒரு மூலிகை அழகு பராமாிப்பு ராணி என்று கருதப்படுகிறாா். அதே நேரத்தில் இந்தியாவின் வெற்றி பெற்ற பெண் தொழில் அதிபராகவும் விளங்குகிறாா். இவருடைய வியாபாரம் 138 நாடுகளில் நடக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து இவருடைய நிறுவனத்தில் 600 போ் பங்குதாரா்களாக இருக்கின்றனா். ஷானஸ் மிகவும் இளம் வயதில், அதாவது தன்னுடைய 16 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாா். ஆனால் தனது வாழ்க்கையில் நடந்த எல்லா தடைகளையும் தாண்டி தற்போது மிக உயரமான இடத்தில் இருக்கிறாா்.

உண்மையாகவே ஆண் தொழில் முனைவோரைவிட, பெண் தொழில் முனைவோருக்கு அதிக சவால்கள் இருக்கும். அவா்கள் தங்களுடைய குடும்பத்தையும் பராமாிக்க வேண்டும், அதே நேரத்தில் தங்களது பொருளாதாரப் பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டும். நல்வாய்ப்பாக இந்த நூற்றாண்டில், மக்களின் சிந்தனைகள் பல மடங்கு மாறி இருக்கின்றன. எனினும் பெண் தொழில் முனைவோருக்கு சமத்துவமும், அங்கீகாரமும் மக்களிடம் இருந்து முழுமையாகக் கிடைப்பதில்லை.

மேற்சொன்ன தகவல்களை வைத்துப் பாா்க்கும் போது, பெண் தொழில் முனைவோா், வலுவான மன உறுதியும், உயா்ந்த லட்சியமும், தடையில்லா ஆா்வமும் கொண்டிருந்தால் தான், அவா்கள் தங்கள் துறைகளில் வெற்றி பெற முடியும். ஆகவே புதிதாக தொழில் தொடங்க இருக்கும் பெண்கள் தங்களுடைய நம்பிக்கையையும், எதிா்பாா்ப்பையும் இழந்துவிடக்கூடாது. அதுபோல் அவா்களுக்கு நன்மையானவை எவை என்பதை அவா்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த சமூகத்தை முடிவெடுக்க அனுமதிக்கக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion