Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஆண்களை பெண்கள் அடிமையாக நடத்தும் வினோத நாடு எது தெரியுமா? இந்த நாடு ஆண்களின் நரகமாம்...!
காலம் காலமாக பெண்களை ஆண்கள் துன்புறுத்தியதை கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் ஆண்கள் மீதான பெண்களின் அடக்குமுறை பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.
வரலாறு முழுக்கவே உலகம் முழுவதும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளாகி வந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக இன்றுவரை பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த துயரம் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது, பெரும்பாலான ஆணாதிக்க சமூகம் இந்த அவலத்தை ஆதரிக்கவும் செய்கிறது.

காலம் காலமாக பெண்களை ஆண்கள் துன்புறுத்தியதை கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் ஆண்கள் மீதான பெண்களின் அடக்குமுறை பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். உலகையே ஆச்சரியப்படுத்தும் விதமாக, ஆண்களை பெண்கள் அடிமைப்படுத்தும் நாடு ஒன்று உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த நாட்டில் பெண்கள் சொல்லும் அனைத்தையும் ஆண்கள் செய்ய வேண்டும். இங்கு பெண்கள் அல்ல ஆண்களே கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் இந்த நாடு ஆண்களுக்கு நரகமாக கருதப்படுகிறது.

ஆண்களின் நரகம்
இந்த நாட்டின் பெயர் 'The other World Kingdom', இது 1996 இல் ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இருந்து உருவாக்கப்பட்டது. இருப்பினும், பிற நாடுகளால் அதற்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்த நாடு வெறும் 7.4 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே உள்ளது. ஆடம்பரமான அனைத்து பொருட்களும் இங்கே கிடைக்கும். நீச்சல் குளங்கள் மற்றும் இரவு விடுதிகளும் உள்ளன. ஆனால் பெண்களின் அனுமதியின்றி ஆண்கள் அங்கு செல்ல முடியாது. நாட்டின் முக்கிய கட்டிடம் ராணியின் அரண்மனைதான்.

ராணியின் ஆட்சி
இந்த நாட்டின் ராணியின் பெயர் பாட்ரிசியா-1, அவரது ஆட்சி இங்கு போட்டியின்றி இயங்குகிறது. இந்த நாட்டில் பெண்கள் மட்டுமே ஆட்சி செய்கிறார்கள். இங்கு ஆண்களுக்கு திறந்த வெளியில் சுற்றித் திரிந்து விருப்பப்படி வாழ சுதந்திரம் இல்லை. இந்நாட்டு அரசியின் முகத்தை இன்றுவரை யாரும் பார்த்ததில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

ஆண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?
ஆண்கள் மீதான பெண்களின் அடக்குமுறையின் நிலை என்னவென்றால், இங்குள்ள ராணி ஆண்களின் உடலை சோபா போல அமைத்து அவர்கள் மீது உட்காருகிறார். இந்த நாட்டில் ஆண்கள் நாற்காலியில் உட்காரக் கூடாது. அவரது எஜமானி அனுமதியளித்தால் மட்டுமே, அவர் நாற்காலியில் உட்காரலாம், ஆனால் அவரது உட்காரும் நிலை எஜமானியிடமிருந்து கீழ்நிலையில் இருக்க வேண்டும்.

எப்படி மது அருந்த வேண்டும்?
ஆண்கள் மது அருந்துவதற்கு முன் எஜமானியின் காலடியில் மதுவை வழங்க வேண்டும், அவர்கள் அனுமதியளித்தால் மட்டும்தான் அடிமை தான் குடிக்க முடியும். இந்த நாட்டில் பெண்களின் அனுமதியின்றி ஆண்கள் எந்த வேலையும் செய்ய முடியாது. ஆண்களுக்கு இங்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டத்தை பின்பற்றாத ஒரு ஆண் கடுமையாக தண்டிக்கப்படுகிறான்.

குடியுரிமை எப்படி பெறுவது?
இங்கு பெண்கள் குடியுரிமை பெறுவதற்கான முதல் நிபந்தனை, ஒரு பெண்ணுக்கு குறைந்தபட்சம் ஒரு ஆண் ஊழியராவது இருக்க வேண்டும். மற்ற நிபந்தனை என்னவென்றால், பெண்கள் எல்லா விதிகளையும் பின்பற்ற வேண்டும். மூன்றாவது நிபந்தனையின்படி, பெண் ராணியின் அரண்மனையில் குறைந்தது ஐந்து நாட்களாவது இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications