For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைசுற்ற வைக்கும் பெர்முடா முக்கோணத்தின் ரகசியங்கள்...இதுவரை எவ்வளவு பேர் செத்திருக்காங்க தெரியுமா?

|

உலகில் மர்மங்கள் நிறைந்த இடங்கள் பல உள்ளது. ஆனால் வெகுசில இடங்களே மிகவும் பிரபலமானதாகவும், சாதாரண மக்கள் கூட அறிந்த இடமாகவும் இருக்கும். அப்படி உலகம் முழுவதும் வெகுஜன மக்களுக்கும் தெரிந்த ஒரு மரமான இடம் என்றால் அது பெர்முடா முக்கோணம்தான். பெர்முடா முக்கோணத்தின் புகழுக்கு அதனை சுற்றியுள்ள மர்மங்களை விட அதனைப்பற்றி பரப்பப்பட்ட கட்டுக்கதைகள்தான் முக்கிய காரணமாக உள்ளது.

பெர்முடா முக்கோணம் என்பது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதி. பெர்முடா, புளோரிடா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ இடையே உள்ள பகுதியில் அமைந்துள்ளது இந்த மர்மமான கடல் பகுதி. கடலில் தொலைந்த கப்பல்கள், விமானங்கள் மற்றும் மர்மமான உயிரிழப்புகளுக்கு இந்த இடம் மிகவும் புகழ்பெற்றது. பெர்முடா முக்கோணத்தின் மர்மத்திற்கு ஏலியன்கள், கடல் இராஜ்ஜியமான அட்லாண்டிஸ் என பல காரணங்கள் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெர்முடா முக்கோணம் எங்கு உள்ளது?

பெர்முடா முக்கோணம் எங்கு உள்ளது?

பெர்முடா முக்கோணம் அட்லாண்டிக்கின் ஒரு பகுதி, இது பெர்முடா, புளோரிடா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ இடையே அமைந்துள்ளது. அந்த பகுதி, அதன் எல்லைகள் உலகளவில் ஒப்புக் கொள்ளப்படாதது, ஒரு தெளிவற்ற முக்கோண வடிவத்தைக் கொண்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மர்மத்திற்கு அறிவியல் கூறும் காரணம்?

மர்மத்திற்கு அறிவியல் கூறும் காரணம்?

வேற்று கிரகவாசிகள், அட்லாண்டிஸ், சர்வேதேச சதி என பெர்முடா முக்கோணத்தை சுற்றி கூறப்படும் கதைகள் விசித்திரமானவையாக இருந்தாலும் அவற்றை தவறு என்று கூறுவதற்கு இதுவரை ஆதாரம் கண்டறியப்படவில்லை. ஆனால் அறிவியலின் படி இதற்கான சில காரணங்கள் கண்டறியப்பட்டள்ளது. இதற்கும் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அறிவியல் கூறும் காரணங்களில் கடல்சார் வாய்வு (கடல் வண்டல்களில் இருந்து வெளிவரும் மீத்தேன் வாயு), முரட்டு அலைகள் மற்றும் புவி காந்த கோடுகளில் இடையூறுகள் ஆகியவை அடங்கும்.

பெர்முடா முக்கோணத்தில் தொலைந்த சில பிரபலமான கப்பல்கள்

பெர்முடா முக்கோணத்தில் தொலைந்த சில பிரபலமான கப்பல்கள்

இதுவரை 50 கப்பல்கள் மற்றும் 20 விமானங்கள் உள்ள பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவற்றில் சில பிரபலமானவை,

1800 - யுஎஸ்எஸ் பிக்கரிங்(USS Pickering) 90 பேருடன் தொலைந்தது

1814 - யுஎஸ்எஸ் வாஸ்ப்(USS Wasp) 140 பேருடன் தொலைந்தது

1824 - யுஎஸ்எஸ் வைல்ட் கேட்(USS Wild Cat) 14 பேருடன் தொலைந்தது

1840 - ரோசாலி(Rosalie) கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

1918 - யுஎஸ்எஸ் சைக்ளப்ஸ்(USS Cyclops) பணியாளர்களுடனும் தொலைந்தது

1921 - கரோல் ஏ. டீரிங், ஸ்கூனர்( Caroll A. Deering, schooner)

1925 - எஸ்எஸ் கோட்டோபாக்ஸி( SS Cotopaxi) ஒரு துயர சமிக்ஞையை அனுப்பியாது, ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் சிதைவு பின்னர் 1985 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

1941 - யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸின்(USS Cyclops) சகோதரி கப்பலான யுஎஸ்எஸ் புரோட்டியஸ்( USS Proteus) 58 பேருடன் தொலைந்தது

1958 - ரெக்கோனோக்(Reconoc)

1963 - எஸ்எஸ் மரைன் சல்பர் குயின்(SS Marine Sulphur Queen) 39 பேருடன் தொலைந்தது

2015 - ஒரு மீன்பிடி பயணத்தில் இரண்டு சிறுவர்கள் காணாமல் போனார்கள். அவர்களின் படகு ஒரு வருடம் கழித்து கண்டுபிடிக்கப்பட்டது ஆனால் சிறுவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

2015 - எஸ்எஸ் எல் ஃபாரோ(SS El Faro) பஹாமாஸ் கடற்கரையில் 33 பேருடன் தொலைந்தது.

பெர்முடா முக்கோணம் பற்றிய சில முக்கியமான ரகசியங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.

MOST READ: இந்த 4 பழங்கள் உங்க தைராய்டு சுரப்பியை சரியா செயல்பட வைத்து உங்களை பல நோய்களில் இருந்து காப்பாற்றும்...!

பெர்முடா முக்கோணத்தின் அளவு

பெர்முடா முக்கோணத்தின் அளவு

பெர்முடா முக்கோணம் சிறியதல்ல. உண்மையில், இது மிகப் பெரியது மற்றும் 440,000 மைல் கடல் பரப்பளவை உள்ளடக்கியது. இது ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் ஒருங்கிணைந்த பகுதியை விட பெரியது. பெர்முடா முக்கோணத்தின் விளைவை முக்கோணத்திற்கு வெளியேயும் அனுபவிக்க முடியும்.

எவ்வளவு பேர் இறந்திருக்கலாம்?

எவ்வளவு பேர் இறந்திருக்கலாம்?

முக்கோணத்தில் விமானம் அல்லது கப்பல் காணாமல் போகும் போதெல்லாம், அதன் குப்பைகளைக் கண்டுபிடிக்க முடியாது.முக்கோணத்திற்கு அருகில் வளைகுடா நீரோடை ஓடுவதால் இதன் குப்பைகள் விரைவாக வெளியேறும். கடந்த 100 ஆண்டுகளில் குறைந்தது 1000 உயிர்கள் பலியாகியுள்ளன. சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 4 விமானங்கள் மற்றும் 20 படகுகள் காணாமல் போகின்றன.

ரகசிய சோதனை மையம்

ரகசிய சோதனை மையம்

பெர்முடா முக்கோணத்தின் உள்ளே, பஹாமாஸ் ஆண்ட்ரோஸ் தீவில் அமைந்துள்ள அட்லாண்டிக் கடலுக்கடியில் சோதனை மற்றும் மதிப்பீட்டு மையத்திற்காக அமெரிக்க அரசு AUTEC ஐ கொண்டுள்ளது. இங்கே அமெரிக்க கடற்படை அவர்களின் நீர்மூழ்கிக் கப்பல்கள், சோனார் மற்றும் பிற ஆயுதங்களை சோதிக்கிறது. எனினும் இது வெறும் சோதனை மையம் மட்டுமல்ல என்று கூறப்படுகிறது.

MOST READ: மனித இறைச்சி உண்டது முதல் கணக்கற்ற கொலைகள் வரை கொடூரத்தில் ஹிட்லரை மிஞ்சிய இடி அமினின் ரகசியங்கள்...!

டைம் ட்ராவல்

டைம் ட்ராவல்

மக்கள் பெர்முடா முக்கோணத்தில் மின்னணு மூடுபனியை அனுபவித்திருக்கிறார்கள், இது ஒரு டைம் டிராவல் சுரங்கமாகவும் இருக்கலாம். விமானி ப்ரூஸ் ஜெர்னன், நேரத்தை விரட்டும் கிளவுட் சுரங்கப்பாதை வழியாக பறந்து 28 நிமிடங்களுக்கு பிறகு இழந்ததாகக் கூறுகிறார். அவர் இயக்கிய விமானம் ரேடாரில் இருந்து மறைந்து மியாமி கடற்கரையில் மீண்டும் தோன்றியது.

அமெரிக்காவின் இழப்பு

அமெரிக்காவின் இழப்பு

அமெரிக்க இராணுவத்தின் மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற இழப்புகளில் ஒன்று 1945 இல் ஏற்பட்டது. ஐந்து அமெரிக்க கடற்படை அவெஞ்சர் டார்பிடோ வெடிகுண்டு நிபுணர்கள் ஃப்ளோரிடாவின் ஃபோர்ட் லாடர்டேலில் இருந்து பிமினி தீவுக்குச் சென்றனர். அப்போது பணியில் 14 பேர் இருந்தனர். சுமார் 90 நிமிடங்களுக்குப் பிறகு, திசைகாட்டி வேலை செய்யவில்லை என்று ரேடியோ ஆபரேட்டர்கள் ஒரு சமிக்ஞையைப் பெற்றனர். அதன் பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர்கள் கொண்டுசென்ற வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை மீட்பதற்காக சென்ற மூன்று விமானங்களும் மறைந்துவிட்டன.

கிறிஸ்டோபர் கொலம்பஸ்

கிறிஸ்டோபர் கொலம்பஸ்

பெர்முடா முக்கோணத்தைப் பற்றி முதலில் அறிக்கை செய்தவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ். முக்கோணத்தின் உள்ளே, கப்பலின் திசைகாட்டி வேலை செய்வதை நிறுத்தியதுடன், வானில் ஒரு தீப்பந்தத்தையும் அவர் பார்த்ததாக அவர் தனது பத்திரிகைகளில் எழுதினார்.

MOST READ: உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும் வலிமையாக இருக்கும் அந்த 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?உங்க ராசி என்ன?

வேலை செய்யாத திசைகாட்டிகள்

வேலை செய்யாத திசைகாட்டிகள்

திசைகாட்டி காந்த வடக்கு நோக்கிச் செல்லாத பூமியில் உள்ள அரிய இடங்களில் ஒன்று பெர்முடா முக்கோணம். அதற்கு பதிலாக, அது உண்மையான வடக்கை நோக்கிச் செல்கிறது, இது குழப்பத்தை உருவாக்குகிறது, அதனால்தான் பல கப்பல்கள் மற்றும் விமானங்கள் முக்கோணத்தில் அதன் போக்கை இழந்தன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Facts About the Bermuda Triangle in Tamil

Here is the list of unknown and interesting facts about the Bermuda Triangle.