Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
அனுஷ்காவைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...
நடிகை அனுஷ்கா ஷெட்டி பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.
தன்னுடைய தன்னடக்கம், விடாமுயற்சி, திறமை ஆகியவற்றின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் தான் அனுஷ்கா. ஒரு குறிப்பிட்ட உயரத்தை எட்டியவுடன் மற்ற நடிகைகளைப் போல பந்தா ஏதும் இல்லாமல் மிக எளிமையாகவும் ஆடம்பரமாக இல்லாமலும் மிக எளிமையாக வாழக்கூடியவர் தான் நடிகை அனுஷ்கா. அனுஷ்கா மிக அழகு. ப்பளியாகவும் ஸ்மார்ட்டாகவும் இருக்கக்கூடியவர்.

பாகுபலி, அருந்ததி, தாண்டவம் என பல படங்களில் அவ்வளவு கொள்ளை அழகாக இருக்கும் அனுஷ்கா நடித்த படங்கள் பற்றி வேண்டுமானால் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவரைப் பற்றிய சில பர்சனல் விஷயங்களைத் தான் இந்த தொகுப்பில் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்வீட்டி
ஸ்வீட்டி ஷெட்டி என்பது தான் அனுஷ்காவை அவருடைய வீட்டில் எல்லோரும் செல்லமாக அழைக்கக்கூடிய பெயர். பெயருக்கு ஏற்றபடியே பார்ப்பதற்கும் பழகுவதற்கும் அவரும் ஸ்வீட்டியான பொண்ணு தான்.

விருதுகள்
அனுஷ்கா தன்னுடைய நடிப்பாற்றலால் பல விருதுகளை வாங்கியிருக்கிறார். 3 cineMAA விருதுகளையும் தமிழ்நாடு ஸ்டேட் அவார்டும், நந்தி அவார்டு மற்றும் 2 ஃபிலிம்ஃபேர் அவார்களையும் வாங்கியிருக்கிறார். இந்த ஃபிலிம்ஃபேர் அவார்டை எட்டு கடுமையான போட்டியாளர்களுக்கு மத்தியில் வென்று இருக்கிறார்.

குடும்பம்
அனுஷ்காவின் தந்தை ஏ.என்.விட்டல் ஷெட்டி. அம்மாவின் பெயர் ப்ரஃபுல்லா ஷெட்டி.

பாய் பிரண்ட் வதந்தி
எல்லா ஹீரோயின்களைப் போலவும் இவரைப் பற்றியும் அவ்வப்போது கிசுகிசுக்களும் வதந்திகளும் வருவதுண்டு. அதிலும் இவ்வளவு அழகான ஹீரோயினைப் பற்றி காதல் கிசுகிசுக்கள் வராமல் இருக்குமா என்ன? தெலுங்கு நடிகர் க்ரிஷ் மற்றும் பிரபாஸ் ஆகிய இரண்டு பேரும் தான் அனுஷ்காவுடன் இணைத்துப் பேசப்பட்ட இரண்டு வதந்தி காதலர்கள் ஆவர்.

முதல் படம்
அனுஷ்கா நடித்த முதல் படம் 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த சூப்பர் என்னும் திரைப்படம் தான் அனுஷ்காவின் முதல் படம்.

படிப்பு
அனுஷ்கா என்ன படிச்சிருக்காங்கன்னு தெரியுமா? நம்ம அனுஷ்கா பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருக்கிறார்.

பிடித்த நடிகர்கள்
அனுஷ்காவிற்கு தெலுங்கில் மகேஷ் பாபு மற்றும் நாகர்ஜூனவை மிகவும் பிடிக்கும்.

பிடித்த நடிகைகள்
அனுஷ்காவிற்கு சிம்ரன் என்றால் மிகப் பிடிக்கும்

வீடு
தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட வீட்டை வாங்கியிருக்கிறார் அனுஷ்கா.

பட விவரங்கள்
தெலுங்கில் மட்டும் கிட்டதட்ட 35 படங்களுக்கு மேலாகவும் தமிழிலும் கிட்டதட்ட 20 படங்கள் வரையிலும் நடித்திருக்கிறார். தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ரெண்டு திரைப்படம் தான் தமிழில் அனுஷ்காவின் முதல் படம். அதன் பின்னர் வேட்டைக்காரன், சிங்கம், வானம், தாண்டவம், இரண்டாம் உலகம், தெய்வத் திருமகள், அருந்ததி, பாகுபலி போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றித் திரைப்படங்களாக அமைந்தன.



Click it and Unblock the Notifications
