Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
உங்க ராசிப்படி உங்களோட காதல் முறிவு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
காதல் முறிவை பொறுத்தவரை ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி ஸ்டைல் வைத்திருப்பார்கள். இதற்கு அவர்களின் ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம்.
காதலிப்பது எவ்வளவு கடினமோ அந்த அளவிற்கு அந்த காதலை முறித்துக் கொள்வதும் கடினமானதாகும். காதலை விட்டு வெளியேறுவது என்பது சிலருக்கு மிகப்பெரிய சவாலாகவும், துயரம் நிறைந்ததாகவும் இருக்கும். அதேசமயம் சிலருக்கோ காதலை முறித்துக் கொள்வது மிகவும் எளிதான ஒன்றாக இருக்கும்.

காதல் முறிவை பொறுத்தவரை ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி ஸ்டைல் வைத்திருப்பார்கள். இதற்கு அவர்களின் ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் ஒவ்வொரு ராசிக்காரரும் எப்படி காதல் முறிவை செய்து கொள்வார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இரக்கமில்லாமல் காதல் முறிவை செய்வார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு உறவு இதுக்கு மேல் ஒத்துவராது என்பது உடனடியாக தெரியும். அதனை விட்டு வெளியேற இவர்கள் அதிக காலம் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். காதலை விட்டு வெளியேறுவது தங்கள் துணையை துன்புறுத்தும் என்று அறிந்தாலும் இவர்கள் அதனை செய்ய தயங்கமாட்டார்கள். தாங்கள் எடுத்து சரியான முடிவுதான் என்று உடனடியாக விலகிவிடுவார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காதலை முறித்துக் கொள்ள நீண்ட காலம் எடுத்துக்கொள்வார்கள். அவ்வளவு ஆற்றலை முதலீடு செய்து உருவாக்கிய ஒரு உறவை விட்டு வெளியேறுவது இவர்களுக்கு மிகவும் கடினம், அந்த முடிவுக்கு இவர்கள் விரைவில் வந்துவிடமாட்டார்கள். ஆனாலும் இவர்கள் எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள். முடிந்தவரை தங்கள் துணையை காயப்படுத்தாமல் காதலில் இருந்து வெளியேறுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மிகவும் மர்மமான முறையில் காதலை முறித்துக் கொள்வார்கள். இவர்களின் தந்திரத்தை ' பேய்களின் வழி ' என்று கூறுவார்கள். இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் துணையே அறியாத வண்ணம் காதலில் இருந்து விலக்கிக் கொள்வார்கள். இது அவர்களுக்கான நேரத்தை பெற்றுத்தரும். இவர்கள் எப்போது வேண்டுமென்றாலும் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது அதனால்தான் இருந்தும் இல்லாதது போல் இருப்பார்கள். ஒருவேளை உறுதியாக முடிவெடுத்து விட்டால் அப்படியே மறந்துவிடுவார்கள்.

கடகம்
இவர்கள் தங்கள் காதல் முறிவை மறைமுகமாக முறித்துக் கொள்வார்கள். இவர்களால் எப்பொழுதும் நேருக்கு நேராக காதலை முறித்துக் கொள்ள முடியாது, இவர்களின் ஆளுமை அப்படிப்பட்டது. தங்களின் அனைத்து உணர்வுகளையும் சேர்த்து ஒரு கடிதமாகவோ அல்லது செய்தியாகவோ எழுதி அனுப்பிவிடுவார்கள். இதனால் இவர்களை கோழை என்று கூறலாம், ஆனால் உண்மையில் இவர்கள் மோதலை விரும்புவதில்லை.

சிம்மம்
இவர்களின் காதல் முறிவு ஸ்டைல் திரைப்படக் காட்சிகளை பிரதிபலிக்கும். இவர்கள் பெரிய அளவில் ஒரு காட்சியை உருவாக்கி அதன்மூலம் காதல் முறிவு செய்து அதனை தங்கள் துணை வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருக்கும்படி செய்வார்கள். காதல் முறிவுக்கு பிறகு இவர்கள் ஒருபோதும் வருத்தப்பட மாட்டார்கள். அதேசமயம் இவர்கள் காதல் முறிவுக்கு பிறகு தங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை தங்கள் துணைக்கு காட்ட விரும்புவார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எப்போது காதலை விட்டு வெளியேறுவார்கள் என்று கணிக்கவே முடியாது. அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய இவர்கள் காதலி முறித்துக் கொள்ள எப்பொழுதும் தங்கள் நண்பர்களின் துணையை நாடுவார்கள். ஏனெனில் இவர்களால் நேரடியாக தங்கள் துணையை காயப்படுத்த முடியாது.

துலாம்
இவர்கள் மோதலை முற்றிலுமாக வெறுக்கிறார்கள், எனவே இவர்கள் காதலில் இருந்து வெளியேற சிறிது காலம் எடுத்துக் கொள்வார்கள். தங்கள் துணையே தங்களை விட்டு சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இவர்கள் அமைதியாக இருப்பார்கள். இருப்பினும், நீங்கள் அதைச் செய்ய முடிவு செய்தால், இவர்கள் அவர்களுடன் முறித்துக் கொள்கிறீர்கள் என்பதை அவர்கள் துணை கூட உணரமுடியாத அளவுக்கு நீங்கள் நன்றாக செய்வார்கள். அதேசமயம் இவர்கள் அடுத்த உறவில் சீக்கிரமாகவே இணைந்து விடுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையான ஆளுமையை கொண்டவர்கள். எனவே அவர்கள் காதல் முறிவிலும் நேர்மையாக நடந்து கொள்வார்கள். தங்கள் துணையிடம் நேரடியாகவே கூறிவிடுவார்கள். அவர்களை விட்டு ஏன் தாங்கள் வெளியேறுகிறோம் என்பதை தெளிவாக விளக்குவார்கள். தங்களின் காதலை சுமூகமாக முறித்து கொள்வதில் இவர்கள் தெளிவானவர்கள்.

தனுசு
தயக்கமில்லாமல் தங்களின் காதலை முறித்துக் கொள்வார்கள். இந்த காதல் ஒத்துவராது என்று உணர்கிற தருணம் இவர்கள் காதலை விட்டு வெளியேற முடிவு செய்துவிடுவார்கள். தங்கள் துணையையும் காதலை முறித்துக்கொள்ள மூளை சலவை செய்வார்கள். இருவரும் முழுசம்மத்துடன் பிரிவதாக இவர்கள் சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வார்கள்.

மகரம்
காதலை விட்டு வெளியேறுவது என்பது இவர்களுக்கு மிகவும் எளிதான ஒன்றாகும். இவர்களுக்கு நேரத்தை வீணாக்குவது பிடிக்காது, எனவே அந்த உறவு பிடிக்கவில்லை என்றால் உடனடியாக அதனை விட்டு வெளியேற தொடங்கி விடுவார்கள். காதலை முறிக்க இவர்கள் மற்றவர்களின் துணையை ஒருபோதும் நாடமாட்டார்கள். நேரடியாக தங்களின் முடிவை கூறிவிடுவார்கள்.

கும்பம்
இதயத்தை கழட்டி வைத்துவிட்டு காதல் முறிவை செய்பவர்கள் இவர்கள். இவர்கள் முடிவெடுத்து விட்டால் அதனை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். கூலாகவும், விரைவாகவும் காதலை விட்டு வெளியேறும் செயல்களில் நீங்கள் இறங்குவார்கள். தங்கள் துணையின் மாண்பை கெடுக்காமல் காதலை விட்டு வெளியேறுவார்கள்.

மீனம்
இவர்களின் ஆளுமைப்படி இவர்களால் மற்றவர்களின் துன்பத்தை பார்க்க இயலாது. இதனால் இவர்கள் காதலை விட்டு வெளியேறுவதை தள்ளிபோட்டுக் கொண்டே செல்வார்கள். இறுதியாக நீங்கள் முடிவெடுக்கும் போது தங்கள் துணையுடன் நண்பர்களாக இருக்க முயலுவார்கள். ஏனென்றால் இவர்கள் தங்கள் காதலை வாழ்க்கையை விட்டு மொத்தமாக வெளியேற்ற விரும்புவதில்லை.



Click it and Unblock the Notifications











