For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரச்சனைகள் நீங்க நாக பஞ்சமி அன்று ஒவ்வொரு ராசிக்காரரும் எப்படி வழிபடணும் தெரியுமா?

2021 ஆம் ஆண்டு நாக பஞ்சமி நாளானது ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வருகிறது. சரி, இப்போது நாக பஞ்சமி அன்று எப்படி பாம்புகளை வழிபடுவது மற்றும் ஒவ்வொரு ராசிக்காரரும் எப்படி வழிபட வேண்டும் என்பதை காண்போம்.

|

நாக பஞ்சமி என்பது கடவுளாக கருதப்படும் பாம்புகளின் அருளைப் பெற மிகவும் உகந்த நாள். ஜோதிடத்தின் படி, பஞ்சமி திதி என்பது பாம்புகளை வழிபடுவதற்கான காலம். ஒரு வருடத்தில் நாக பஞ்சமியானது ஆடி மாதத்தில் வரும் சுக்ல பக்ஷத்தில் வரும். இந்த நாளில் கால சர்ப தோஷம், விஷ தோஷம், ராகு அல்லது கேது தோஷம், பித்ரு தோஷம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பும் அனைவருக்கும் இந்நாள் மிகவும் விஷேசமான நாள்.

How To Worship On Nag Panchami As Per Your Zodiac Signs In Tamil

2021 ஆம் ஆண்டு நாக பஞ்சமி நாளானது ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வருகிறது. சரி, இப்போது நாக பஞ்சமி அன்று எப்படி பாம்புகளை வழிபடுவது மற்றும் ஒவ்வொரு ராசிக்காரரும் எப்படி வழிபட வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாக பஞ்சமி அன்று எப்படி வழிபட வேண்டும்?

நாக பஞ்சமி அன்று எப்படி வழிபட வேண்டும்?

* நாக பஞ்சமி நாளில் பாம்புகளை வழிபட்டால், பாம்புகளின் அருளால் சந்தோஷம், செல்வம், நல்ல ஆரோக்கியம் மற்றும் சந்ததியை எளிதில் பெற முடியும் என்பது நம்பிக்கை. அதனால் தான் இந்தியாவில் மக்கள் நாக பஞ்சமி நாளில் நாகங்களை வணங்குகிறார்கள்.

* ஒருவேளை ஒருவரது ஜாதகத்தில் நாக தோஷம் அல்லது நாகங்களின் சாபம் இருந்தால், அதில் இருந்து விடுபட நாக பஞ்சமி நாளில் நாகங்களை வணங்கி வழிபட வேண்டும்.

* ஜாதகத்தில் கால சர்ப தோஷம் உள்ளவர்களும், நாக பஞ்சமி நாளில் நாகங்களுக்கு சிறப்பு பூஜைகளை செய்வதன் மூலம் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.

* அனைத்து வகையான விஷ தோஷங்களையும் நாக பஞ்சமி நாளில் வழிபடுவதன் மூலம் நீக்கலாம்.

* முக்கியமாக திருமண பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இந்நாளில் சிறப்பு பூஜைகளை செய்வதன் மூலம் அப்பிரச்சனையை தீர்க்கலாம்.

எனவே வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு நாக பஞ்சமி மிகவும் சிறப்பான நாள். இப்போது ஒவ்வொரு ராசிக்கு ஏற்ப நாக பஞ்சமியை எப்படி வழிபட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம் மற்றும் விருச்சிகம்

மேஷம் மற்றும் விருச்சிகம்

மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் சிவப்பு நிற பூக்களைக் கொண்டு தெற்கு திசை நோக்கி நாகங்களை வழிபட்டால், அதிக நன்மை கிடைக்கும். மேலும் இந்த ராசிக்காரர்கள் நாக பஞ்சமி நாளில் கணேஷ் ஸ்தோத்திரம் மற்றும் சர்ப சுக்தாவைப் பாடினால், இன்னும் நல்லது.

ரிஷபம் மற்றும் துலாம்

ரிஷபம் மற்றும் துலாம்

ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் வெள்ளை மலர்களால் நாகங்களை வடக்கு திசை நோக்கி வழிபடுவது மிகவும் நல்லது. அத்துடன் இந்த ராசிக்காரர்கள் மன்சாதேசி நாகஸ்தோத்திரம் மற்றும் கணேஷ் சாலிசாவை சொல்வது, இன்னும் சிறப்பான பலனைத் தரும்.

மிதுனம் மற்றும் கன்னி

மிதுனம் மற்றும் கன்னி

மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த ராசிக்காரர்கள் பேல் பத்ரா மற்றும் கரும்பு ஜூஸ் பயன்படுத்தி நாகங்களை வடகிழக்கு திசையை நோக்கி வழிபடுவது நன்மைகளை வழங்கும். மேலும் இந்த ராசிக்காரர்கள் கணேஷ் கவசத்தை பாராயணம் செய்வது மிகவும் நல்லது.

கடகம்

கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசிக்காரர்கள் தயிர் மற்றும் வெள்ளை மலர்களைப் பயன்படுத்தி மேற்கு திசையை நோக்கி பாம்புகளை வழிபடுவது நல்லது. அதோடு இந்த ராசிக்காரர்கள் நாக பஞ்சமி நாளில் கணேஷ் அதர்வாசீர்ஷ் பாராயணம் செய்வது நல்லது.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசிக்காரர்கள் சிவப்பு மலர்கள் மற்றும் குங்குமப்பூ பயன்படுத்தி நாகங்களை கிழக்கு திசை நோக்கி வழிபடுவது மிகவும் நல்லது. இந்த ராசிக்காரர்கள் நாக ஸ்தோத்திரங்களை சொல்லி வந்தால், நாகங்களின் அருளைப் பெறலாம்.

தனுசு மற்றும் மீனம்

தனுசு மற்றும் மீனம்

தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதி குரு/வியாழன். இந்த ராசிக்காரர்கள் கிழக்கு-வடக்கு திசையை நோக்கி வழிபடுவது நல்லது. அதுவும் நாகங்களுக்கு மஞ்சள் தூள், மஞ்சள் பூக்களைப் பயன்படுத்தி வழிபடுவது இன்னும் நல்லது. இந்த ராசிக்காரர்கள் கணேஷ் அஷ்டக் மற்றும் நாக சஹஸ்த்ரநாமவாலியை சொல்வது வாழ்க்கையை பிரச்சனையின்றி மென்மையாக கொண்டு செல்லும்.

மகரம் மற்றும் கும்பம்

மகரம் மற்றும் கும்பம்

மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதி சனி. இந்த ராசிக்காரர்கள் மேற்கு திசை நோக்கி நாகங்களை வழிபடுவது நல்லது. அதுவும் நீல நிற பூக்கள் மற்றும் கருப்பு எள்ளு பயன்படுத்தி வழிபடுவது இன்னும் நல்லது. செழிப்பான வாழ்க்கை வாழ இந்த ராசிக்காரர்கள் கணேஷ் சஹஸ்த்ரநாமவாலி மற்றும் நவநாக ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Worship On Nag Panchami As Per Your Zodiac Signs In Tamil

Here is how to worship on nag panchami as per our zodiac signs. Take a look.
Desktop Bottom Promotion