Latest Updates
-
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம்
2020 லீப் வருடம் எந்த ராசிக்காரங்களுக்கு மறக்க முடியாததாக இருக்கப் போகுது தெரியுமா?
லீப் ஆண்டு 366 நாட்களையும், பிப்ரவரி மாதத்தில் 29 நாட்களையும் கொண்டிருக்கும். இப்படி நான்கு வருடத்திற்கு ஒருமுறை ஒரு நாள் அதிகமாக இருப்பது, ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
லீப் ஆண்டு என்பது ஒவ்வொரு நான்கு ஆண்களிலும் நிகழும் ஒரு நிகழ்வு ஆகும். அதாவது, சாதாரண ஆண்டைப் போல் 365 நாட்களுடன் இல்லாமல், லீப் ஆண்டு 366 நாட்களையும், பிப்ரவரி மாதத்தில் 29 நாட்களையும் கொண்டிருக்கும். இப்படி நான்கு வருடத்திற்கு ஒருமுறை ஒரு நாள் அதிகமாக இருப்பது, ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

இன்று 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் நாள். அதாவது இன்று தான் லீப் நாள். ஆகவே 2020 லீப் வருடம் ஒவ்வொரு ராசியிலும் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் காண்போம். மேலும் லீப் வருடம் எந்த ராசிக்காரர்களுக்கு மறக்க முடியாத ஒரு பெரிய மாற்றம் நிறைந்ததாக இருக்க போகிறது என்பதையும் பார்ப்போம்.

மேஷம்
இது உங்களுக்கு ஒரு புத்திசாலித்தனமான ஆண்டாக இருக்கும். உங்கள் நிதி நிலைமை மேம்படும் மற்றும் வாழ்க்கைத் துணையுடனான உறவில் ஒரு நேர்மறை மாற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் நேர்மறை முடிவுகளைப் பெற கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ரிஷபம்
இந்த லீப் வருடம் உங்கள் வாழ்க்கையில் ஒரு நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வரும். உங்களின் நம்பிக்கை கணிசமாக அதிகரிக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். இருப்பினும், உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மாணவர்களுக்கு இந்த வருடம் நிறைய வெற்றிகள் கிடைக்கும்.

மிதுனம்
இந்த லீப் வருடம் உங்களுக்கு புத்திசாலித்தனமாக இருக்கும். உங்களின் நிதி நிலைமை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமணமாகாமல் இருப்பவர்கள், இந்த வருடம் உங்களின் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிப்பார்கள்.

கடகம்
நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், இந்த வருடம் உங்களுக்கு அற்புதமான ஆண்டாக இருக்கும். உங்களின் நற்பெயர் அதிகரிக்கும் மற்றும் உங்களின் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். நண்பர்களுடனான உறவு மேம்படும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த லீப் ஆண்டு நேர்மறையானதாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மேலும் இந்த வருடம் எந்த செயலையும் செய்வதற்கு உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து போதுமான ஆதரவைப் பெறுவீர்கள். இருப்பினும், நீங்கள் அவ்வப்போது உங்கள் உடல்நலத்தை சற்று கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த லீப் வருடத்தில் நிதி நிலைமை மேம்படும். அடுத்த சில நாட்கள் நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். நண்பர்களுடனான உறவு கசப்பாக இருக்கும். உங்கள் உடல்நலத்தைக் கவனித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால், தொழிலில் அவர்களின் நற்பெயர் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையிடமிருந்து ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். உங்களின் பொறுப்புக்கள் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, இந்த லீப் வருடம் மிகவும் பிஸியானதாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மேம்படும். மற்றவர்களிடமிருந்து பெறும் ஆதரவால் நீங்கள் எப்போதும் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரு அற்புதமான ஆண்டாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மற்றும் தொழிலில் நற்பெயர் அதிகரிக்கும். திருமணமாகாமல் சிங்கிளாக இருப்பவர்கள், தங்களின் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிப்பீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள், இன்று குடும்பத்தினருடன் வெளியே செல்ல திட்டம் போடுவீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு லீப் வருடம் அருமையாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறப்பாக இருக்கும். இதுவரை நிலுவையில் இருந்த பணியை நீங்கள் இன்று முடிப்பீர்கள். இது உங்களின் நம்பிக்கையை கணிசமாக அதிகரிக்கும்.

மீனம்
இந்த லீப் ஆண்டில் மீன ராசிக்காரர்கள் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உங்களுடன் பணி புரிபவர்களிடம் இருந்து உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். மேலும் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications