For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவை உலுக்கும் புயல்கள்: புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

|

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள நிசர்கா புயல், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அலிபாக் பகுதியில் கரையை கடக்கத் தொடங்கியதால் காற்று மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் வீசிவருகிறது. இந்த புயலால் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆம்பன் புயலை போன்ற பாதிப்பை நிசர்கா புயல் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.வெப்பமண்டல சூறாவளிகள் அல்லது புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் இந்தியாவில் 2000 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது.

புயல்களை விரைவாக அடையாளம் காணவும் அவற்றின் பெயர்களில் எச்சரிக்கைகளை வெளியிடுவதற்கும் தனித்துவமான பெயர்களுடன் புயல்களுக்கு பெயரிடப்படுகின்றன. சூறாவளிகளுக்கு பெயரிடுவது சமூகத்தின் கவனம் மற்றும் தயார்நிலையை அதிகரிப்பதோடு கூடுதலாக ஊடகங்கள் அவற்றைப் பற்றி செய்தி வெளியிடுவதற்கும் எளிதாக்குகிறது. நாம் இக்கட்டுரையில் புயல்களுக்கு யார் பெயரிடுகிறார்கள்? அவை எவ்வாறு பெயரிடப்படுகின்றன? என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடந்தகால புயல்கள்

கடந்தகால புயல்கள்

கடந்த சில ஆண்டுகளில், ஏற்பட்ட வெப்பமண்டல புயல்களை டிட்லி, பெத்தாய், ஃபானி, வாயு மற்றும் ஆம்பான் என்று பெயரிட்டு தகவல்களை வெளியிட்டுள்ளனர். தற்போது, நிசர்கா என்ற புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரையை தாக்க உள்ளது. சூறாவளிகளுக்கு யார் பெயரிடுவது மற்றும் அவை எவ்வாறு பெயரிடப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதை தினமும் சாப்பிடுவது உங்க இதயத்தை ஆபத்துகளில் இருந்து காப்பாத்துமாம்...!

நாடுகள் குழு

நாடுகள் குழு

2000 ஆம் ஆண்டில், பங்களாதேஷ், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட வெப்பமண்டல நாடுகளின் குழு, இப்பகுதியில் நிகழும் புயல்களுக்கு பெயரிடுவதைத் தொடங்க முடிவு செய்தது. இந்த நாடுகளின் பரிந்துரைகளுக்கு அழைப்பு விடுத்து, ஆசியாவிற்கான உலக வானிலை அமைப்பு / பொருளாதார மற்றும் சமூக ஆணையம் மற்றும் வெப்பமண்டல புயல்கள் பற்றிய பசிபிக் குழு (பி.டி.சி) ஒரு பட்டியலைத் தயாரித்தது. அது புயல்களின் பெயர்கள். 2018 ஆம் ஆண்டில், ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஏமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட ஐந்து நாடுகளும் இதில் இணைந்தனர்.

புயல்களுக்கு ஏன் பெயர்?

புயல்களுக்கு ஏன் பெயர்?

இந்திய வானிலை ஆய்வுத் துறை அல்லது வானிலைத் துறை (ஐஎம்டி) கருத்துப்படி, எச்சரிக்கை செய்திகளில் புயல்களை விரைவாக அடையாளம் காண உதவும் பொருட்டு வெப்பமண்டல சூறாவளிகளுக்கு பெயரிடும் நடைமுறை பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஏனெனில் பெயர்கள் எண்களை விட நினைவில் கொள்வது மிகவும் எளிதானது என்று கருதப்படுகிறது. புயல்களுக்கு பெயர்களைச் சேர்ப்பது வெப்பமண்டல சூறாவளிகளைப் பற்றி ஊடகங்களுக்கு அறிக்கை செய்வதை எளிதாக்குகிறது. எச்சரிக்கைகள் மீதான ஆர்வத்தை உயர்த்துகிறது மற்றும் சமூக தயார்நிலையை அதிகரிக்கிறது.

புயல்களுக்கு பெயரிடுவது பின்வரும் வழிகளில் உதவும்

புயல்களுக்கு பெயரிடுவது பின்வரும் வழிகளில் உதவும்

ஒவ்வொரு வெப்பமண்டல புயல்களை அடையாளம் காணவும் தாக்கத்தை மதிப்பிடவும் இது உதவும்.

உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் புயல்கள் பற்றி கவனம் செலுத்துகின்றன.

ஒரே பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட வெப்பமண்டல புயல்கள் இருக்கும்போது அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாது.

புயல்களின் பெயர்கள் மில்லியன் கணக்கான மக்களால் நன்கு நினைவில் வைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு மறக்க முடியாத நிகழ்வு, அதன் பெயர் நீண்ட காலமாக நினைவில் இருக்கும்.

எச்சரிக்கைகள் மிக வேகமாக பார்வையாளர்களை அடைகின்றன.

புயல்கள் எந்தவொரு குறிப்பிட்ட நபரின் பெயரிலும் அல்லது அகர வரிசைப்படி எந்த முன்னுரிமையுடனும் பெயரிடப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள மக்களுக்கு நன்கு தெரிந்தவை.

இந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...!

169 பெயர்களின் பட்டியல்

169 பெயர்களின் பட்டியல்

இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) 169 பெயர்களின் பட்டியலை வெளியிட்டது. இது இப்பகுதி எதிர்கொள்ளும் எதிர்கால புயல்களுக்கான பெயர்களைத் தேர்வுசெய்ய உதவும். வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் உள்ளிட்ட வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளுக்கு இந்த பெயர்கள் பயன்படுத்தப்படும். சூறாவளிகள் மற்றும் புயல்களின் முன்னேற்றங்கள் குறித்து அந்தந்த பிராந்திய மொழிகளின் படி, ஐஎம்டி ஆலோசனைகளையும் வழங்குகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

இந்த பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட சொற்கள் மக்கள் உச்சரிக்கக்கூடிய வகையில் எளிமையாக உள்ளது. ஒரு சூறாவளி பெயரின் அதிகபட்ச நீளம் எட்டு எழுத்துக்கள். ஒரு புயலுக்கு பயன்படுத்தப்படும் பெயர்கள் அடுத்தடுத்த புயல்களுக்கு மீண்டும் பயன்படுத்தப்படாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how cyclone nisarga got its name process and origins explained

Here we are talking about how cyclone nisarga got its name process and origins explained.
Story first published: Wednesday, June 3, 2020, 17:15 [IST]