For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பொருட்களில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் உங்களுக்கு எப்பவுமே அதிர்ஷ்டம் வராதாம் தெரியுமா?

வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கு பின்னால் வலிமையான வாஸ்து சாஸ்திரம் உள்ளது. ஏனெனில் நமது வீட்டில் இருக்கும் சில பொருட்கள் நமக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும்.

|

வாழ்க்கையில் அனைவருக்குமே முன்னேற வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவராலும் அவ்வாறு செய்ய முடிகிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். தொடர்ச்சியான கடின உழைப்பு இருந்தபோதிலும் உங்களால் ஏன் முன்னேற முடியவில்லை என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? கடின உழைப்பும், முயற்சியும் இருந்தாலும் முன்னேறாமல் இருப்பதற்கு உங்களின் துரதிர்ஷ்டம் காரணமாக இருக்கலாம்.

Household Things That Are Considered Unlucky

வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கு பின்னால் வலிமையான வாஸ்து சாஸ்திரம் உள்ளது. ஏனெனில் நமது வீட்டில் இருக்கும் சில பொருட்கள் நமக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் இருக்கும் பொருட்களை குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த பதிவில் வீட்டில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு கதவு

கருப்பு கதவு

கதவுகளை கருப்பு நிறத்தில் வண்ணம் தீட்டுவதன் மூலம் உங்கள் வீட்டை தனித்துவமாக்க விரும்பலாம். இருப்பினும், கருப்பு கதவுகள் எதிர்மறையை குறிப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. படுக்கையறையின் கருப்பு கதவுகள் மோதல்களை அழைக்கக்கூடும், நீங்கள் பண அலமாரியை வைத்திருக்கும் அறையின் செல்வங்கள் இழப்பை ஏற்படுத்தும். இருப்பினும், கதவுகள் வடக்கு நோக்கி இருந்தால், அவை துரதிர்ஷ்டவசமானவை என்று கருதப்படுவதில்லை.

கண்ணாடி

கண்ணாடி

கண்ணாடிகள் துரதிர்ஷ்டத்திற்கு ஒரு காரணம் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள், ஆனால் அது உண்மைதான். உடைந்த கண்ணாடிகள் மற்றும் கண்ணாடி பொருட்கள் வீட்டில் மோசமான தன்மையைக் கொண்டுவருவதாகவும், குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற வாதங்களை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. கண்ணாடிகள் எப்போதும் மறைக்கப்பட வேண்டும் என்ற மற்றொரு நம்பிக்கை உள்ளது. உடைந்த கண்ணாடிகள் துரதிர்ஷ்டத்தின் உறைவிடமாக கருதப்படுகிறது.

பழைய காலண்டர்

பழைய காலண்டர்

பழைய காலண்டரை பெரும்பாலும் மக்கள் தீவிரமாக கவனிப்பதில்லை. தவறான தேதி மற்றும் நாள் காட்டப்படுவது மக்களை எந்தவகையிலும் பாதிப்பதில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். அன்றைய தேதியைத் தவிர வேறு நாட்களை காட்டும் எந்த காலண்டரையும் புறக்கணிக்க கூடாது. ஏனெனில் இது துரதிர்ஷ்டத்தை அழைக்கிறது. இது நம்முடைய நேரத்தை நல்ல நேரமாக மாற்ற அனுமதிக்காது.

உடைந்த பாத்திரங்கள்

உடைந்த பாத்திரங்கள்

உடைந்த பாத்திரங்கள் சமையலறையில் இருப்பதை யாருமே விரும்ப மாட்டார்கள். ஆனால் நிதிநிலை காரணமாக அதனை வீட்டிலேயே வைத்திருப்பது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். விரிசல் அல்லது உடைந்த பாத்திரங்களில் குடிப்பது அல்லது சாப்பிடுவது தீங்கை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. உடைந்த பாத்திரங்கள் மோசமான நிதிலையை பிரதிபலிக்கின்றன. புதிய பாத்திரம் வாங்கும்போதும் அது சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

MOST READ: இரவு உணவை இப்படி சாப்பிடுவது உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா?

முள் தாவரங்கள்

முள் தாவரங்கள்

முட்கள் கொண்ட தாவரங்கள் குடும்பத்தில் மோதல்களை ஏற்படுத்துகின்றன. எனவே கண்டிப்பாக உங்கள் வீட்டில் இதுபோன்ற தாவரங்கள் இருக்கக்கூடாது. இருப்பினும், பூக்கள் கொண்ட முள் செடிகளை வைக்கலாம்.அதேசமயம் அழுகிய மற்றும் சிதைந்த செடிகள் எதிர்மறை ஆற்றல்களை வீட்டில் பிரதானமாக்குகின்றன. எனவே அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

நுழைய மற்றும் வெளியேற வெவ்வேறு கதவு

நுழைய மற்றும் வெளியேற வெவ்வேறு கதவு

உங்கள் வீட்டில் உள்ளே வருவதற்கு ஒரு கதவும் வெளியே வருவதற்கு ஒரு கதவும் இருப்பது உங்கள் வீட்டில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். உடைந்த கதவுகள் இருப்பதும் கடுமையான துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் நுழையாமல் தடுக்கிறது.

MOST READ: பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!

ஓடாத கடிகாரம்

ஓடாத கடிகாரம்

உங்கள் வீட்டில் வேலை செய்யாத கடிகாரங்கள் இருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவும். ஏனெனில் அது துரதிர்ஷ்ட்டத்தை குறிக்கிறது. உடைந்த மற்றும் செயல்படாத விஷயங்களை சுற்றி வைத்திருப்பது மோசமான வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Household Things That Are Considered Unlucky

Here are some of the most unlucky things to have in your home, according to Vastu Shastra.
Story first published: Thursday, January 28, 2021, 15:21 [IST]
Desktop Bottom Promotion