Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
குரு மீன ராசியில் இருப்பதால், இந்த 6 ராசிக்காரங்க பணக்காரராக வாய்ப்பிருக்கு.. உங்க ராசி இதுல இருக்கா?
குரு தனது சொந்த ராசிக்குள் நுழைந்திருப்பதால், 6 ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்பட்டு பணக்காரராகும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இம்மாதிரியான நிகழ்வு மிகவும் அரிதானது. ஏனெனில் இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரே நடக்கும். இந்த ஏப்ரல் மாதத்தில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, சூரியன், ராகு, கேது ஆகிய 9 கிரகங்களுமே ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றங்கள் மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. ஆனால் ஒவ்வொருவருக்கும் பலன்கள் வேறுபடும். கிரக மாற்றங்களால் பெறும் பலன்கள் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம்.

அதுவும் குருவின் ராசி மாற்றம் பலரது வாழ்க்கையையே முற்றிலும் மாற்றக்கூடியது. குரு ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் வாழ்க்கையில் அனைத்து மகிழ்ச்சியையும் பெறுவார். இப்படிப்பட்ட குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு சுமார் ஒரு வருடம் ஆகும். அந்த வகையில் குரு 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி கும்பத்தில் இருந்த தனது சொந்த ராசியான மீன ராசிக்கு இடம் மாறினார். இந்த ராசியில் 2023 ஏப்ரல் 22 வரை இருப்பார். குரு தனது சொந்த ராசிக்குள் நுழைந்திருப்பதால், 6 ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்பட்டு பணக்காரராகும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மீன ராசிக்கு செல்லும் குருவால், மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் ஆரம்பமாகிறது. உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. நிதி நிலை நன்றாக இருக்கும். நல்ல காலமாக இருந்தாலும், நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்கால கட்டத்தில் சொத்து அல்லது நிலத்தின் மூலம் உங்களுக்கு நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைகளால் நல்ல ஆதாயத்தைப் பெறக்கூடும்.

ரிஷபம்
நிதியைப் பொறுத்தவரை, ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் மிகவும் நன்றாக இருக்கும். நல்ல பண வரவுடன் இருப்பார்கள். இக்காலத்தில் உங்களைத் தேடி அதிக பணம் வரக்கூடும். இது உங்கள் சொத்துக்களின் அளவை அதிகரிக்கும். இருப்பினும், சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்
குரு மீன ராசியில் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்களின் செல்வம் அதிகரிக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. எவ்வளவு வரவு இருந்தாலும், அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். நீங்கள் செல்வந்தர் ஆக விரும்பினால், தேவையற்ற செலவுகளில் கவனம் செலுத்தி, அதைக் கட்டுப்படுத்துங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியானது வருமானத்தையும், லாபத்தையும் அதிகரிக்கும். கூட்டு வணிகம் செய்பவர்கள் ஏதேனும் பிரச்சனையை சந்தித்து வந்தால், இக்காலத்தில் அப்பிரச்சனை தீர்வுக்கு வரும். உங்கள் அறிவு மற்றும் புத்திசாலித்தனம் உங்கள் கௌரவத்தை அதிகரிக்கும். மேலும் பணிபுரிபவர்கள் நல்ல பதவி உயர்வையும் பெறலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2022 குரு பெயர்ச்சி நிதி ரீதியாக நன்றாக இருக்கும். நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் சொத்துக்கள் அல்லது செல்வத்தை அதிகரிக்க உங்கள் அறிவைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்
நிதி ரீதியாக கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் சூப்பராக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் பண வரவு அதிகம் இருக்கும். இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். நீங்கள் ஒரு நல்ல முதலீட்டாளர்களைத் தேடுகிறீர்களானால், வியாழனின் அருளால் இந்த காலகட்டத்தில் அதை எளிதாகக் காண்பீர்கள். இது உங்களை விரைவில் செல்வந்தராக்க உதவும்.



Click it and Unblock the Notifications
