Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது?
குரு பெயர்ச்சி 2019 - 20: மிதுனம் லக்னகாரர்களுக்கு பொன்னான காலம்
குரு பெயர்ச்சி அடுத்தமாதம் நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும
Recommended Video
நவகிரகங்களில் குருபகவான் சுப கிரகம். குரு பெயர்ச்சியை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தனசு லக்னத்தில் அமரப்போகும் குருபகவான் தனது பொன்னொளி பார்வையால் உங்க லக்னத்தை பார்வையிடுவது உங்களுக்கு அற்புதமான மாற்றங்களையும் ஏற்றங்களையும் தரப்போகிறார். அக்டோபர் 29ஆம் தேதி குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது. இதனால் பல அற்புதங்கள் நடக்கப் போகிறது. மிதுன லக்னகாரர்களுக்கு குதூகலமான குரு பெயர்ச்சியாக அமையப்போகிறது.
குருபகவான் மிதுனம் லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் அமர்கிறார். ஏழாம் வீட்டில் சனி, கேது அமர்ந்திருக்க ஆதிபத்ய தோஷத்தை தரக்கூடிய குருபகவான், ஆட்சி பெற்று தனது லக்னத்தில் அமர்கிறார். அதிக பிரச்சினை இருக்காது. குரு தனியாக அமர்வதுதான் பிரச்சினை, இங்கே சனி, கேது உடன் இணைந்து சஞ்சரிக்கிறார். பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் அமர்வதால் சனி கேதுவும் பாதகத்தை குறைக்கின்றனர்.

சுக்கிரன் நட்சத்திர சாரத்தில் செல்லும் போது வளமான வாழ்க்கையை பெறுவீர்கள். தொழிலில் சிறு பிரச்சினைகள் ஏற்படும். அரசு தனியார் துறையில் சிலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இடம் விட்டு இடம் சென்று தொழிலை விருத்தி செய்வீர்கள். வெளிநாடு சென்று வேலை செய்வீர்கள். பூர்வீக சொத்துப்பிரச்சினை சுமூகமாக தீரும். திருமணத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் கை கூடும். கண்டச்சனி தடைகளை ஏற்படுத்தி திடீர் என திருமணத்தை நடத்தி வைப்பார்.

பொன்னான காலம்
யோகமான குருபகவான்
இதுநாள்வரை எதிரிகள் தொந்தரவு, கடன் தொந்தரவு இருந்தது. இனி அற்புதமான குருப்பெயர்ச்சியாக அமைகிறது. லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் குரு சொந்த வீட்டில் அமர்கிறார். லக்னத்திற்கு ஏழு, பத்தாம் வீட்டு அதிபதி குருபகவான் நல்ல வேலையை வாங்கித்தருவார். குரு உங்க லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க லக்னத்தை பார்க்கிறார். பொன்னான காலம். வெளிநாடு யோகம் கிடைக்கிறது. காரணம். உங்க லக்னத்திற்கு லாப ஸ்தானம், முயற்சி ஸ்தானத்தை குரு பார்வையிடுகிறார்.

சகோதரர்களின் உதவி
பணவரவு அபரிமிதமாக இருக்கும். மூத்த சகோதரர்களின் அன்பும் ஆதரவு கிடைக்கும். இளைய சகோதரர்கள், மூத்த சகோதரர்கள் அற்புதமாக இருப்பார்கள். உறவு பலப்படும். வயது மூத்தவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். தகுதி திறமைகள் வெளியே தெரியும். மாணவர்கள் மேன்மையடைவீர்கள். சிக்கல்கள் பிரச்சினைகள் தீரும். கல்வியில் அக்கறை செலுத்துவீர்கள்.

கெட்டிமேளச்சத்தம்
நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். இளைய சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். குரு பலன் இருப்பதால் திருமண முயற்சிகள் கைகூடி வரும். திருமணத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களின் வீட்டில் கெட்டிமேளச்சத்தம் கேட்கப் போகிறது. கண்டச்சனியால் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்கள் இனி நிம்மதி பெருமூச்சு விடலாம். தடைகளை ஏற்படுத்தி வந்த சனிபகவானை கட்டுப்படுத்த குருபகவான் அந்த வீட்டில் அமரப்போகிறார்.

குரு பரிகாரம்
குரு பகவான் மந்திரத்தை உச்சரியுங்கள் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கப் போகிறது. உங்களுக்கு நிம்மதி பிறக்கப் போகிறது. ஏழாம் வீட்டில் ஏற்கனவே கேது, சனி இருக்க குருவும் அங்கே குரு அமர்வது பிரச்சினைகளை தீர்க்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து இனி அற்புதமாக இருக்கப் போகிறது. உங்களின் பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது.



Click it and Unblock the Notifications