Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
மீனத்தில் குரு உருவாக்கும் ஹம்ச பஞ்ச மகா புருஷ யோகத்தால் இந்த 4 ராசிக்கு செல்வந்தராகும் வாய்ப்பிருக்கு...
மீனத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையும் போது ஹம்ச பஞ்ச மகா புருஷ யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் ஒரு சுப யோகம் மற்றும் ஒருவரை செல்வந்தராக்கும் யோகம்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கங்களைக் கொண்டு தான் ஒருவரது வாழ்வில் நடக்கவிருக்கும் விஷயங்கள் கணித்து கூறப்படுகிறது. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. அதில் கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, கிரக சேர்க்கையால் உருவாகும் யோகங்களைப் பொறுத்தும் ஒருவருக்கு கிடைக்கும் பலன்கள் உள்ளன.

அந்த வகையில், மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வரும் குரு பகவான் 2022 நவம்பர் 24 ஆம் தேதி மீனத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இப்படி மீனத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையும் போது ஹம்ச பஞ்ச மகா புருஷ யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் ஒரு சுப யோகம் மற்றும் ஒருவரை செல்வந்தராக்கும் யோகம். இத்தகைய யோகம் பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
குரு உருவாக்கும் யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் ஊதிய உயர்வைப் பெறுவதோடு, பதவி உயர்வை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அதே வேளையில் வேலை தேடுவோருக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் இக்காலம் சுப காரியங்களை செய்ய சிறந்ததாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குரு உருவாக்கும் ஹம்ச பஞ்ச மகா புருஷ யோகத்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். இந்த யோகத்தால் உங்களால் அதிக பணத்தை உங்களால் சேமிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். இக்காலத்தில் முதலீடு செய்வது நல்லது. இதனால் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நிதி ரீதியாக இக்காலம் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு மற்றும் புரிதல் அதிகரிக்கும்.

விருச்சிகம்
குரு உருவாக்கும் ஹம்ச பஞ்ச மகா புருஷ யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களின் வீட்டில் மகிழ்ச்சியும், இனிமையும் அதிகரிக்கும். நிதியைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும். வணிகர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும் மற்றும் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. தொழிலிலும் முன்னேற்றம் ஏற்படலாம்.

கும்பம்
குரு உருவாக்கும் ஹம்ச பஞ்ச மகா புருஷ யோகத்தால் வியாபாரம் செய்யும் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல திருமண வரன் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு வெளிநாட்டில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications