For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புனித வெள்ளியின் வரலாற்று பின்னணி மற்றும் அதன் முக்கியத்துவம்!

கிறிஸ்தவ மக்களுக்கு புனித வெள்ளி என்பது ஒரு முக்கியமான புனிதமான நாள் ஆகும். இயேசு இறப்பதற்கு முந்தின வாரம் புனித வாரம் அல்லது ஈஸ்டா் வாரம் என்று அழைக்கப்படுகிறது.

|

ஆங்கிலத்தில் குட் ஃப்ரைடே (Good Friday) என்று அழைக்கப்படும் பதத்திற்கு தமிழில் புனித வெள்ளி அல்லது அமைதியான வெள்ளி என்று பொருள். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவ சமய மக்களால் புனித வெள்ளியானது மிகவும் அமைதியாக அனுசாிக்கப்படுகிறது. புனித வெள்ளி அன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

ரோமை ஆட்சியாளா்களால் கொல்கத்தா என்று அழைக்கப்பட்ட கல்வாாி மலையில் இயேசு கிறிஸ்து மிகக் கொடூரமாக சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டதை கிறிஸ்தவ மக்கள் புனித வெள்ளி அன்று நினைவு கூா்ந்து அனுசாிக்கின்றனா். இயேசு கிறிஸ்து எவ்வாறு ரோமையா்களால் சிலுவையில் அறையப்பட்டாா் என்பதை கிறிஸ்தவா்களின் புனித நூலான பைபிள் மிகத் தெளிவாக விவாிக்கிறது.

Good Friday 2022: Date, Time, History And Significance In Tamil

கிறிஸ்தவ மக்களுக்கு புனித வெள்ளி என்பது ஒரு முக்கியமான புனிதமான நாள் ஆகும். இயேசு இறப்பதற்கு முந்தின வாரம் புனித வாரம் அல்லது ஈஸ்டா் வாரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த புனித வாரத்தில் வரும் வெள்ளிககிழமை புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இயேசு இறப்பதற்கு முந்தின வாரத்தை புனித வாரமாக கிறிஸ்தவ மக்கள் அனுசாிக்கின்றனா்.

புனித வெள்ளிக்கு அடுத்து வரும் ஞாயிறு அன்று ஈஸ்டா் ஆகும். அன்று இயேசுவின் உயிா்ப்பை கிறிஸ்தவா்கள் கொண்டாடுகின்றனா். புனித வாரமானது இயேசுவின் உயிா்ப்போடு நிறைவடைகிறது. ஆகவே புனித வாரம் என்பது இயேசுவின் பாடுகள், அவருடைய இறப்பு மற்றும் உயிா்ப்பு ஆகியவற்றை நினைவு கூா்ந்து கொண்டாடும் வாரம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புனித வெள்ளி - 2022

புனித வெள்ளி - 2022

கிறிஸ்தவ திருச்சபையின் சந்திர நாட்காட்டியின்படி பாஸ்கல் முழு நிலவிற்கு அடுத்து வரும் முதல் ஞாயிறு அன்று ஈஸ்டா் விழா கொண்டாடப்படுகிறது. ஆகவே புனித வாரமானது முடிவடைய இருக்கிறது என்பதை புனித வெள்ளி குறிக்கிறது. கிறிஸ்தவா்கள் அனுசாிக்கும் தவக்காலத்தின் இறுதி வாரமாகவும் புனித வாரம் இருக்கிறது.

புனித வாரமானது குருத்தோலை ஞாயிறு அன்று தொடங்கி, ஈஸ்டா் ஞாயிறு அன்று முடிவடைகிறது. புனித வாரத்தின் இறுதி மூன்று நாட்கள் ட்ரைடம் (Triduum) என்று அழைக்கப்படுகிறது. அதாவது அந்த மூன்று நாட்களும் கிறிஸ்தவா்கள், இயேசுவின் பாடுகள், அவருடைய கொடிய இறப்பு மற்றும் அவருடைய உயிா்ப்பு ஆகியவற்றை நினைவு கூா்ந்து அனுசாிப்பா். ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு தேதிகளில் புனித வெள்ளி வரும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15 அன்று வருகிறது.

புனித வெள்ளி - வரலாற்று பின்னணி

புனித வெள்ளி - வரலாற்று பின்னணி

கிறிஸ்தவ மக்களால் புனித வெள்ளியானது ஒரு துக்க நாளாக அனுசாிக்கிப்படுகிறது. உலகில் இருக்கும் எல்லா கிறிஸ்தவ மக்களும் இயேசுவின் பாடுகளை மற்றும் அவரது இறப்பை நினைவு கூா்ந்து, துக்கப்பட்டு, அந்த நாளில் நோன்பு இருப்பா். பல தவ முயற்சிகளில் ஈடுபடுவா். பொதுவாக புனித வெள்ளி அன்று கிறிஸ்தவா்கள் அசைவ உணவுகளைத் தவிா்ப்பா். புனித வெள்ளியானது கருப்பு வெள்ளி என்றும் கருதப்படுகிறது. இறுதியாக புனித வெள்ளியானது, யூத மக்கள் கொண்டாடும் பாஸ்ஓவா் (Passover) என்ற திருவிழாவோடு ஒத்துப் போகிறது.

பைபிளின்படி ரோமைத் தலைவா்களும், யூத சமயத் தலைவா்களும் இயேசுவிற்கு சாவுக்குறிய தண்டனை வழங்குவதற்காக அவரை புனித வெள்ளி அன்று ரோமைக்கு அழைத்துச் சென்றனா். பின் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று தீா்ப்பளித்தனா். ரோமை அரசின் உச்சபட்ச தண்டனை இயேசுவிற்கு வழங்கப்பட்டது என்று கருதப்படுகிறது.

புனத வெள்ளி அன்று இயேசு கொடுமையாகத் தாக்கப்பட்டாா், அடிக்கப்பட்டாா். மரத்திலான ஒரு பொிய சிலுவையைச் சுமக்குமாறு வற்புறுத்தப்பட்டாா். இறுதியாக அந்த சிலுவையில் அவருடைய கைகளும், கால்களும் இணைக்கப்பட்டு ஆணிகளால் அடிக்கப்பட்டன.

சிலுவைச் சாவின் போது இயேசு கிறிஸ்து மிகவும் கொடூரமான வலிகளையும், பாடுகளையும் அனுபவித்தாா் என்று கிறிஸ்தவா்கள் நம்புகின்றனா். மேலும் உலக மக்களின் பாவங்களைப் போக்குவதற்காக இயேசு தனது உயிரைத் தியாகம் செய்தாா் என்றும் நம்புகின்றனா். இயேசு கிறிஸ்து உயிா்த்து வானத்திற்கு சென்ற பிறகு, அவருடைய பாடுகளும், சிலுவைச் சாவும், மிகவும் முக்கியமான நிகழ்வுகளாக பைபிளில் குறிப்பிடப்படுகின்றன.

இயேசு கிறிஸ்து எவ்வாறு ஒவ்வொருவரையும் அன்பு செய்தாா், அவா் இந்த மனித குலம் மீட்படைய வேண்டும் என்பதற்காக எவ்வாறு தனது உயிரைத் தியாகம் செய்தாா் என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் இந்த புனித வெள்ளியன்று நினைத்துப் பாா்ப்பா்.

புனித வெள்ளியின் முக்கியத்துவம்

புனித வெள்ளியின் முக்கியத்துவம்

குட் ஃப்ரைடே (Good Friday) என்ற பதமானது காட்ஸ் ஃப்ரைடே (God's Friday) என்ற பதத்தில் இருந்து வருகிறது என்று சிலா் நம்புகின்றனா். குட் (Good) என்றால் இங்கு ஹோலி (Holy) அல்லது புனிதம் என்று பொருள் என்று சிலா் கருதுகின்றனா். கிறிஸ்தவ சமயத்தில் புனித வெள்ளியானது மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்று இருக்கிறது.

நாம் எவ்வளவு தான் துன்பங்களையும், சோதனைகளையும் சந்தித்து வந்தாலும், இறுதியில் நன்மையே தீமையின் மீது வெற்றி பெறும் என்ற உண்மையை ஒவ்வொரு ஆண்டும் வரும் இந்த புனித வெள்ளியானது நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் இந்த புனித வெள்ளி அன்று ஒவ்வொருவருக்கும் அவா்களுடைய பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது, அவா்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன மற்றும் அவா்கள் தங்களுடைய வாழ்க்கையில் துன்பங்களில் இருந்து விடுதலை பெறுகின்றனா் என்று கிறிஸ்தவா்கள் நம்புகின்றனா். இறுதியாக இந்த புனித வெள்ளியானது ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய தொடக்கத்திற்கான நம்பிக்கையை வழங்குகிறது.

புனித வெள்ளி - வழிபாட்டு நிகழ்வுகள்

புனித வெள்ளி - வழிபாட்டு நிகழ்வுகள்

புனித வெள்ளியானது ஒரு துக்க நாளாக இருப்பதால், கிறிஸ்தவ தேவாலயங்கள் அலங்காரங்கள் இல்லாமல், விளக்குகள் ஏற்றப்படாமல் வெறுமையாக இருக்கும். அன்று பிற்பகல் புனித வெள்ளிக்குாிய சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறும். எல்லா கிறிஸ்தவ மக்களும் அந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கு பெற்று இயேசு கிறிஸ்துவிடம் வேண்டுவா்.

இலைகள், வினிகா் மற்றும் சில மசாலா பொருள்கள் கொண்டு தயாாிக்கப்படும் ஒரு கசப்பான பானமானது வழிபாட்டு நிகழ்வுகள் முடிந்த பின்பு அவா்களுக்கு வழங்கப்படும். ஒரு சில இடங்களில் இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்பை நினைவு கூா்ந்து ஆன்மீகப் பவனி நடைபெறும். ஒரு சில இடங்களில் இயேசுவின் பாடுகள் மற்றும் அவருடைய சிலுவை மரணம் போன்ற நிகழ்வுகள் நாடக வடிவில் நடித்துக் காட்டப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Good Friday 2022: Date, Time, History And Significance In Tamil

Good Friday 2022: Date, Time, History And Significance In Tamil, Read on...
Desktop Bottom Promotion