Latest Updates
-
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்...
தங்கம் அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது எப்படி தெரியுமா?
தங்கத்தின் விலை ஒருசவரன் 30 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஏழைகளுக்கு தங்கம் எட்டாக்கனியாகி வரும் நிலையில் தங்கத்தை முதலீட்டிற்காக வாங்கி சேமிப்பவர்கள் சேமித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். குரு அருள் இருந்தால்
தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் என்று பொருளாதார வல்லுநர்களே கூறுவதால் தங்க முதலீடு அதிகரித்து வருகிறது. தங்க நகை வாங்க இல்லத்தரசிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தங்க நகை விலை நாளுக்கு நாள் உயர்ந்து ஒரு சவரன் 30 ஆயிரத்தை எட்டியுள்ளது. குருவின் நேரடி சஞ்சாரம் தங்கம் விலையை உயர வைத்துள்ளது. நகை உயர்விற்கு ஜோதிடத்திற்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது. ஏழைகள் தங்கம் என்ற வார்த்தை எழுதி மட்டுமே பார்க்கும் காலம் வந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் தங்கம் வாங்கும் யோகம் இருந்தால் நிச்சயமாக தங்கம் வாங்கலாம் என்று ஜோதிடர்கள் சொல்லியுள்ளனர். தங்கம் அழகுக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது என்று கூறும் ஜோதிடர்கள் சிறுக சிறுக தங்கத்தை சேமித்து உடம்பில் படுமாறு தங்கத்தை அணியுங்கள் என்கின்றனர்.
தங்கத்தை இடுப்புக்கு கீழே அணிவதில்லை. காது, மூக்கு, கழுத்து என நகைகளை அணிவதன் மூலம் அது உடம்பில் உள்ள முக்கிய புள்ளிகளை தொடுவதன் மூலம் உடம்பில் தேஜஸ் அதிகரிக்கிறது. இதன் மூலம் தங்கம் அழகை தருவதோடு ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது என்பதை நமது முன்னோர்கள் உணர்ந்து ஆபரணங்களை அணியத் தொடங்கியுள்ளனர்.

தங்கம் எல்லோருக்கும் சேர்ந்து விடாது தங்கம் வாங்கவும் ஜாதகத்தில் கிரக அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். பொன்னவன் எனப்படும் குரு கிரகம் நன்றாக இருந்தால் மட்டுமே தங்கத்தை வாங்கவோ சேமிக்கவோ முடியும்.

குரு அருள்
தங்கத்தை விரும்பாக பெண்கள் இருக்கமாட்டார்கள். தங்கத்தின் மீதான ஆசையும் மோகமும் நாளுக்கு நாள் அதிகரிப்பதனால்தான் தினம் ஒரு நகைகக்கடைகள் நாடு முழுவதும் திறக்கப்படுகின்றன. தங்கத்தின் மீதான நமது ஆர்வம், 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தின்போது தொடங்கியதாக கூறப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் லக்னத்திலும் 4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் இருக்க வேண்டும். அதே போல 1,5,9 ஆகிய திரிகோண வீடுகளிலும் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவர்களின் வீடுகளில் தங்கம் நிரந்தரமாக இருக்கும். மறைவு ஸ்தானங்களில் இருக்கக் கூடாது.

தங்கத்தை விற்காதீங்க
இன்றைக்கு தங்கத்தை திரி புஷ்கர யோகங்கள் அமையும் நாட்களில் வாங்கினால் அடகு கடைக்கு போகாமல் தங்கும். திரி புஷ்கர யோக அமைப்பு ஞாயிறு செவ்வாய் சனி கிழமைகளில் துவிதியை சப்தமி துவாதசி திதிகளில் விசாகம், உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம்,கார்த்திகை, உத்திராடம், நட்சத்திரங்களில் அதாவது மேற்கண்ட கிழமைகள் திதிகள் நட்சத்திரங்கள் மூன்றும் சேர்ந்து அமையும் நாட்கள் திரிபுஷ்கர யோகம் உள்ள நாட்கள் ஆகும். இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் அடகு கடைக்குப் போகாமல் வீட்டில் தங்கம் தங்கும்.

நகை வாங்கும் யோகம்
ஜாதகத்தில் குரு கிரகம் புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களின் சாரம் பெற்று இருந்தாலும் அடிக்கடி தங்கம் வாங்கும் யோகம் அந்த ஜாதகருக்கு உண்டு என பண்டைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஜென்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும், லக்னத்திற்கு 5ஆம் வீட்டில் உள்ள கிரகம் லக்னத்திற்கு 2ஆம் வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது 2ஆம் வீட்டில் இருந்தாலோ அந்த ஜாதகர் தங்கம் அதிகம் வாங்குபவர்கவும், அந்த தங்கத்தால் அவருக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும் எனவும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

தங்கம் வாங்க நட்சத்திரம்
சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம், ஹஸ்தம், அசுவினி,பூசம், அபிஜித், ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி.
ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் மேஷம் விருச்சிகம் சிம்மம் லக்கினங்களில் மேலே சொல்லப்பட்ட நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும் மிருகசிரீடம் ரேவதி சித்திரை அனுஷம் நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும் வாங்க அதிர்ஷ்டம் தரும்.

எப்போது வாங்கலாம் விற்கலாம்
சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம்,மிருகசிரீடம், ரேவதி, சித்திரை,அனுஷம்,ஹஸ்தம், அசுவினி,பூசம்,அபிஜித் நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திங்கள் வெள்ளி வியாழன் புதன் கிழமைகளில் சுப லக்கினங்களில் வாங்க நன்மை உண்டாகும். ஒருவேளை முதலீட்டிற்காக தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்தால் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது.

பொன் பொருள் சேர்க்கை
ஒரு நபரின் ஜாதகத்தில் பாப கிரகமான ராகு, சுபகிரகமான சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களுக்கும் நட்பு பெற்ற வீட்டில் ராகு, சுக்கிரன் இணைந்து இருந்தாலோ அந்த ஜாதகருக்கு கூடுதல் வருமானம் மூலம் செல்வம், நகை சேமிப்பு பெருகும். ஒருவேளை முதலீட்டிற்காக தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்தால் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது.

அழகோடு ஆரோக்கியம்
தங்கம் அழகை விட உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது. காதில், மூக்கில், கழுத்தில், கைகளில் அணியும் தங்க நகைகள் நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது என்கின்றனர் அக்குப்பஞ்சர் மருத்துவர்கள். நோயின்றி வாழவும் அதிக செல்வம் வேண்டுமென்று விரும்பினால் அவர்கள் மோதிர விரலில் மோதிரம் அணிய வேண்டியது அவசியம். செல்வத்திற்கும், பணப்புழக்கத்திற்கும் மோதிர விரல்தான் பொறுப்பாகும்.

தங்கம் முதலீடு
பணக்காரர்களுக்கு தங்கம் ஆடம்பர பொருளாக இருந்தாலும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு தங்கம் சிறந்த முதலீடாக திகழ்கிறது. தங்கத்தை நினைத்த நேரத்தில் அடகு வைத்து பணமாக்கிவிட முடியும் எனவேதான் தங்கம் வாங்க பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்தஸ்து மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. எனவே நோயை தடுக்கும் தங்கம் நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பதால் அதில் முதலீடு செய்வதில் தவறேதும் இல்லையே.

வெள்ளியும் நல்லதே
வெள்ளி சுக்கிரன் சந்திரனை குறிக்கிறது. வெள்ளி மோதிரம் அணிவதால் கொலுசு அணிவதால் மனம் திடமாக இருக்கும் கை கால் நோய்கள் குணமடையும். வலது கையில் ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரத்தை அணிவது நல்லது. அனைத்து ஐஸ்வர்யமும் வந்து சேரும்.அதிக பண புழக்கம் இருக்கும்.வாழ்வில் மென்மேலும் உயர முடியும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கால்களில் போடப்படும் வெள்ளிக்கொலுசு பெண்களின் கால்நோவுகளை நீக்குகிறதாம். மாதவிலக்கு சமயத்தில் அதிகஅளவில் சிரமத்திற்கு ஆளாவதில் இருந்து பாதுகாக்கிறதாம்.



Click it and Unblock the Notifications











