For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவை வீணாக்காமல் இருக்க செய்ய வேண்டிய ஜோதிடப் பரிகாரங்கள்...

|

பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுக்கவே வள்ளலார் அணையாத அடுப்பு அமைத்து அன்ன சத்திரம் கட்டியுள்ளார். இந்த உலகத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச உணவு தினம் கொண்டாடப்படுகிறது. பசி என்பது ஒரு பிணி... பசி கொடுமையானது குழந்தை பருவத்திலும் முதுமையிலும் வரவே கூடாது. ஒருவரின் வயிறு நிறைய சோறு போட்டால் போதும் அவர்கள் மனதார வாழ்த்துவார்கள் எனவேதான் அன்னதானத்தின் அருமையைப் பற்றி முன்னோர்களும் ஞானியர்களும் வலியுறுத்தியுள்ளனர். புரட்டாசி மாதத்தில் மஹாளய பட்ச காலத்தில் அன்னதானம் கொடுக்க வேண்டும் என்றும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என்று சொல்வதும் கூட பசியோடு இருப்பவர்களின் வயிறை குளிர வைக்க வேண்டும் என்பதற்காகக்தான்.

உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு. அன்னையோடு அறுசுவை உண்டிருப்போம் என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் கூறியுள்ளார். உணவின் அருமையை உணர்த்தவும் உலகில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் உணவு கிடைக்கவும்தான் அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பவுர்ணமி நாளில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

Food Waste And Astrological Remedies

எப்போதும் வீட்டிலிருக்கும் வரை நமக்கு நம் அன்னையிடும் உணவின் அருமை தெரிவதில்லை. ஆனால் வேலைக்காகவோ படிப்பிற்காகவோ வெளியூர் சென்று தங்க நேர்ந்தால் வீட்டு சாப்பாட்டின் அருமையும் அம்மாவின் பெருமையும் தெரியும். தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. ஜோதிடத்தில் அன்னம் எனப்படும் உணவிற்கான காரக கிரகம் சந்திரன். அன்னை எனப்படும் மாத்ருகாரகனும் சந்திரனேதான். நமக்கெல்லாம் படியளக்கும் அன்னபூரணியான பார்வதியை வணங்கும் காரக கிரகமும் சந்திரனேதான். இன்னும் சொல்லப்போனால் ஸ்ரீ மகாலக்ஷமியை கூட சந்திர சகோதரிதான் காரணம் இருவரும் பாற்கடலில் இருந்து வந்தவர்தான். அன்பு போன்ற உணர்ச்சிகளைக் குறிக்கும் கிரகமும் சந்திரனேதான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அன்ன தோஷம் ஏன் ஏற்படுகிறது

அன்ன தோஷம் ஏன் ஏற்படுகிறது

வயதானவர்கள், கர்ப்பிணிகள் வந்து பசி என்று பிச்சை கேட்கும் போது அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களை அன்னதோஷம் பாதிக்கிறது. பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்குப் புசிப்பதற்கு எதுவும் கொடுக்காதவர்களையும், வீட்டிலோ, பந்தியிலோ சாப்பிட அமர்ந்தவர்களைக் கோபித்துக்கொண்டு அவர்களை எழுப்பி உணவை சாப்பிட விடாமல் விரட்டி அடிப்பவர்களையும் அன்னதோஷம் பாதிக்கும்.

MOST READ: இந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து - முஸ்லீம் ஓரினச்சேர்க்கை தம்பதி...

உணவு வீணாதல்

உணவு வீணாதல்

தன் தேவைக்கும் அதிகமாக உணவைத் தயார் செய்து வீணடிப்பவர்களை, தான் உண்டது போக ஏராளமான அன்னம் கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்களை, மற்றும் பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களுக்கும் அன்னதோஷம் ஏற்படும். சாப்பிடும் பந்தியில் நமக்கு வேண்டியவர்களுக்குத் தேவையான உணவை அளித்து மற்றவர்களைக் கவனிக்காமல் இருப்பதும் கூட அன்னதோஷம்தான். கறவை நின்ற பசு மாட்டிற்குத் தேவையான உணவு அளிக்காதவர்களை அன்னதோஷம் பீடிக்கும் என சாஸ்திரம் கூறுகிறது.

அன்னதோஷம் பீடித்தால் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும்.

உணவை கண்டால் வெறுப்பு

உணவை கண்டால் வெறுப்பு

அன்னதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதுவேஷம் எனும் உணவைக் கண்டாலே வெறுப்பு உண்டாகும் நோய் ஏற்படும். இப்படி அன்னதோஷத்தாலும் அன்னதுவேஷத்தலும் பீடிக்கப்பட்டவர்களும் அன்னாபிஷேக நாளில் அன்னாபிஷேக கோலத்தில் தரிசனம் செய்வது அன்னதோஷம் நீங்கும். மேலும் உணவின் மீது வெறுப்படைய செய்யும் நோயான அன்னதுவேஷம் நீங்கும்.

சந்திரன்

சந்திரன்

ஜோதிடத்தில் அடிப்படை உணவின் காரகர் சந்திர பகவான் ஆவார். சுவையான உணவு வகைகளின் காரகர் சுக்கிரன் ஆவார். உணவினை குறிக்கும் போஜன ஸ்தானம் எனப்படுவது காலபுருஷனுக்கு இரண்டாம் பாவமான ரிஷபம் மற்றும் ஜாதக இரண்டாம் பாவமாகும். ரிஷபத்தில் சந்திரன் உச்சம் அடைவதும் சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

MOST READ: சுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா? இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...

அரிசி உணவு வீணாகும்

அரிசி உணவு வீணாகும்

சந்திர பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆறாமிடம், எட்டாமிடம் 12ஆம் இடம் தொடர்புகள் பெற்றோ அல்லது பாதகாதிபதி தொடர்பு பெற்று அல்லது நீசமடைந்து நிற்க அவர்களுக்கு பால், தயிர், அரிசி சோறு போன்ற பொருட்களை அடிக்கடி வீணடிப்பதால் அன்னதோஷம் ஏற்படும். கால புருஷனுக்கு போஜன ஸ்தானமான ரிஷபத்திலும் உணவை குறிக்கும் சந்திரனின் ஆட்சி வீடான கடகத்திலும் அசுப கிரகங்கள் நிற்க அஞ்சாமல் உணவுப்பொருட்களை வீணடிப்பார்.

அன்னதோஷத்திற்கு பரிகாரங்கள்

அன்னதோஷத்திற்கு பரிகாரங்கள்

உணவுப்பொருட்களைக் குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருவரையும் குறிக்கும் ஸ்ரீ அன்னபூரணியை வணங்கிவர உணவு வீணாவது குறையும். மேலும் உணவு தட்டுப்பாடின்றி கிடைக்கும். அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்குத் தேவையான சந்திரனின் காரகம் பெற்ற பச்சரிசி வாங்கி கோயிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஐந்துபேருக்கு சாப்பிட உணவு கொடுப்பது பரிகாரமாகும்.

MOST READ: சொந்த வீடு வேணும் கடன் வாங்க கூடாது... - செவ்வாய்கிழமையில் இதை பண்ணுங்க

பித்ருக்களுக்கு உணவு

பித்ருக்களுக்கு உணவு

சுக்கிரனின் அதிதேவதை மற்றும் சந்திர சகோதரியான தான்யலக்ஷமியை வணங்கிவர உணவு வீணாவது குறையும்.உலகத்துக்கே படியளந்துவிட்டு படியை தலையில் வைத்துப் படுத்திருக்கும் சுக்கிர ஸ்தல மூர்த்தி ஸ்ரீரங்கநாதரை வணங்கிவர உணவு வீணாவது குறையும். முன்னோர்களின் திதி நாட்களில் பிராமணர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவு அளிப்பது அன்ன தோஷத்தோடு பித்ரு தோஷத்தையும் போக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Food Waste And Astrological Remedies

Food waste is a bigger problem than many people realize. This article how you can reduce your food waste and astrological remedies.
Story first published: Saturday, October 19, 2019, 15:46 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more