Latest Updates
-
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்!
மகரத்தில் 5 கிரக சேர்க்கையால் இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையா இருக்கணுமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிடத்தில் கிரக சேர்க்கைகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரக சேர்க்கையால் நற்பலன்களும், தீய பலன்களும் கிடைக்கலாம். இப்போது மகர ராசியில் 5 கிரக சேர்க்கையால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் பெறும் பலன்களை காண்போம்.
பிப்ரவரி மாதத்தில் பல கிரக சேர்க்கைகள் நிகழ்ந்துள்ளன. பொதுவாக இரண்டு கிரகங்கள் ஒன்றிணைந்தாலே அது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் மகர ராசியில் ஒரு அற்புதமான கிரக சேர்க்கை ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது மகர ராசியில் செவ்வாய், சுக்கிரன், சனி, புதன் மற்றும் சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இணைந்துள்ளன. இந்த 5 கிரக சேர்க்கையின் போது பஞ்சகிரஹி யோகம் உருவாகிறது. ஜோதிடத்தில் கிரக சேர்க்கைகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரக சேர்க்கையால் நற்பலன்களும், தீய பலன்களும் கிடைக்கலாம். இப்போது மகர ராசியில் 5 கிரக சேர்க்கையால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் புதிய வீடு அல்லது வாகனம் வாங்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த காலத்தில் விவாதத்தில் இருந்து விலகி இருங்கள். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புத்திசாலித்தனமாக பணத்தை செலவிடுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். நிதி நிலைமை பலவீனமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களே! இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்கலாம். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலம் லாபகரமானதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காணலாம். கடுமையாக உழைத்தால், நிச்சயம் வெற்றியை பெறலாம். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நல்ல நிலையில் இருப்ர்கள். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவார்கள். நல்ல நிதி ஆதாயம் உண்டு. திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். மன அழுத்தம் இருக்கும். வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். புத்திசாலித்தனமாக இக்காலத்தில் பணத்தை செலவு செய்யுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்கள் மீது அதிக அக்கறை காட்ட வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். புத்திசாலித்தனமாக செலவுகளை செய்யுங்கள். நிதி நிலைமை பலவீனமாக இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இக்காலத்தில் ஒரு கலவையான பலன்களைப் பெறுவார்கள். வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் வேலையில் வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இக்காலத்தில் பண இழப்பு ஏற்படலாம். புத்திசாலித்தனமாக செலவுகளை செய்யுங்கள். வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். செல்வம் அதிகரிக்கவும், லாபம் கிடைக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
