For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மறைக்கப்பட்ட வரலாறு... உண்மையிலேயே இந்தியாவின் கொடூரமான ஆட்சியாளர் யார் தெரியுமா?

|

இந்தியாவை ஆங்கிலேயர்களுக்கு முன் நீண்ட காலம் ஆண்டது முகலாயர்கள்தான். முகலாயர்களின் ஆட்சியில் இந்தியாவில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. முகலாய மன்னர்கள் பலரால் இந்தியாவின் வளமும், புகழும் அதிகரித்தது, அதேசமயம் சில முகலாய மன்னர்களால் பல தீமைகளும் நடந்தது. இறுதி காலங்களில் வந்த முகலாய மன்னர்களால் முகலாய சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியடைய தொடங்கியது.

Facts about Indias Most Brutal Emperor Aurngzeb

முகலாய சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியடையத் தொடங்கியது ஒளரங்கசீப் ஆட்சிக்காலத்தில் இருந்துதான். இந்தியா தொடர்பான எந்த வரலாற்று நிகழ்வை ஆராய்ந்தாலும் அதில் ஒளரங்கசீப்பின் பெயர் கட்டாயம் இருக்கும். அக்பர், ஷாஜஹான் போன்ற முகலாய அரசர்கள் அவர்களின் நல்லாட்சியின் மூலம் வரலாற்றில் இடம்பிடித்தனர். இந்தியாவின் மிகவும் மோசமான கொடுங்கோலர் என்று ஒளரங்கசீப்பை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை என்பதே எதார்த்தம். இவரைப் பற்றி தெரியாத சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்வியில் ஆர்வம்

கல்வியில் ஆர்வம்

தனது தந்தையை எதிர்த்து போரிட்டு அரியணையை பிடித்தது இவர் மட்டும் அல்ல, முகலாய இராஜ்ஜியத்தை ஆண்ட பலரும் இவ்வாறுதான் ஆட்சியைப் பிடித்தனர். ஒளரங்கசீப் கல்வியிலும், தன்னுடைய மதம் சார்ந்த கல்வியிலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவரது குழந்தைப் பருவத்தில் இவருக்கு தினமும் 500 ரூபாய் கொடுக்கப்பட்டது. இவர் அதை தனது கல்விக்காக மட்டுமே பயன்படுத்தினார்.

ஒழுக்கநெறி

ஒழுக்கநெறி

இவரது ஆட்சியின் கீழ், ஒழுக்கங்களை அமல்படுத்த தணிக்கையாளர்கள் நியமிக்கப்பட்டனர், மேலும் விபச்சாரம், சூதாட்டம், குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆளுமை

ஆளுமை

இவர் மற்றவர்களை கையாளுவதில் மிகவும் புத்திசாலித்தனமானவராக இருந்தார். போர்க்களத்திற்கு வெளியேயும் அதன் உத்திகளை எப்படி மக்கள் மீது பயன்படுத்துவது என்று இவர் நன்கு அறிந்து வைத்திருந்தார். தனிநபர் ஊழல் அல்லது தன்னுடைய ஈகோவை தூண்டுபவர்களுக்கு இவர் கொடுத்த தண்டனைகள் மிகவும் கொடூரமானதாக இருந்தது.

MOST READ: இந்திய வரலாறின் மிக அழகிய மகாராணிகள் இவர்கள் மட்டும்தானாம் தெரியுமா?

இந்தியாவின் முதல் ராக்கெட்

இந்தியாவின் முதல் ராக்கெட்

தன்னுடைய இராஜ்ஜியத்தை விரிவுபடுத்தவும், தன்னுடைய இராணுவத்தை பலப்படுத்தவும் பல புதிய தொழில்நுட்பங்களை இவர் கையாண்டார். அறிவியல் சோதனைகள் இவரின் ஆட்சிக்காலத்தில் உச்சத்தில் இருந்தது. இவரது இராணுவம் பிடாரை முற்றுகையிட்டபோது இவரின் படை ராக்கெட்டுகளை பயன்படுத்தியது. இந்தியாவில் ராக்கெட் பயன்படுத்தப்பட்ட முதல் போர் இதுதான். கடுமையான வரிவிதிப்புகள் மூலம் இவரது ஆட்சிக்காலத்தில் உலகிலேயே இந்தியா பணக்கார நாடாக விளங்கியது.

பலமான இராணுவம்

பலமான இராணுவம்

இவரது இராணுவம் உலகிலேயே பலமானதாகவும், கடுமையானதாகவும் இருந்தது. இந்தியாவுக்குள் நுழைந்து படையெடுப்பதற்கான பிரிட்டிஷ் இராணுவத்தின் அனைத்து திட்டங்களையும் அவர் அழித்தார், அவர்களின் முதல் முயற்சியில், அவர்களுக்கு ஒரு கடுமையான பாடம் கற்பித்தார்.

 கண்டிப்பான மத நடைமுறைகள்

கண்டிப்பான மத நடைமுறைகள்

ரமலான் நாட்களாக இருந்த அவரது ஆட்சியின் ஆரம்ப நாட்களில், ஒளரங்கசீப் கடுமையாக நோய்வாய்ப்பட்டார், ஆனால் தீவிர இஸ்லாமியராக இருந்ததால், அவர் தொடர்ந்து நோன்பு மற்றும் பிரார்த்தனை செய்தார். முகலாயப் பேரரசராக இருந்த அவர், தர்பார்ஸில் கலந்துகொண்டு தனது அரச கடமைகளை நிறைவேற்றினார்.

MOST READ: அலெக்ஸாண்டரை இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்த இந்தியாவின் மாவீரன் யார் தெரியுமா?

தேவையற்ற செலவுகள்

தேவையற்ற செலவுகள்

அற்பமான செலவினங்களுக்காக அரச பணத்தை செலவழிப்பதை அவர் ஒருபோதும் நம்பவில்லை, இதனால் எந்த நினைவுச்சின்னங்களையும் கட்டவில்லை. அவரது ஆட்சிக் காலத்தில், டெல்லியில் உள்ள செங்கோட்டையின் இரண்டு வெளிப்புற பாதுகாப்புச் சுவர்கள் மற்றும் அவுரங்காபாத்தில் உள்ள பிபி கா மக்பரா (அவரால் நியமிக்கப்பட்டு அவரது மகனால் கட்டப்பட்டது) மட்டுமே அவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.

 முதல் காதல்

முதல் காதல்

ஒளரங்கசீப்பின் முதல் காதல் அவரின் மாமாவின் மகளும் பேரழகியுமான ஹிரா பாய். ஆனால் பிரசவத்தின் பொது அவர் இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு சில காலம் ஒளரங்கசீப் அதிர்ச்சியிலும், மனசோர்விலும் இருந்தார்.

இந்து பணியாளர்கள்

இந்து பணியாளர்கள்

முகலாயர்களின் வரலாற்றில் பேரரசரின் நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கை, ஒளரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில்தான் மிக அதிகமாக இருந்தது. ஒளரங்கசீப்தான் இந்தியாவின் கொடூரமான ஆட்சியாளர் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அவரைவிட கொடூரமான சில ஆட்சியாளர்களை மேற்கொண்டு பார்க்கலாம்.

MOST READ: உங்க ராசிப்படி உங்க வாழ்க்கையில நீங்கள் எந்த விஷயத்துல அதிர்ஷ்டசாலின்னு தெரிஞ்சிக்கணுமா?

ஜஹாங்கீர்

ஜஹாங்கீர்

அக்பரின் மூத்த மகன் ஜஹாங்கிர் தனது தந்தையின் வாரிசாக மிக இளம் வயதிலேயே அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர் அதிகாரத்தில் அடுத்தவராக இருக்க பொறுமையற்றவராக இருந்தார், எனவே அவர் உரிமையைப் பெற பலவந்தமாக முயன்றார், ஆனால் அதில் அவர் தோற்கடிக்கப்பட்டார். இதனால் அக்பர் தனது பேரன் குஸ்ராவ் மிர்சாவிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டார். தனது சொந்த மகனால் அச்சுறுத்தப்பட்ட ஜஹாங்கிர் குஸ்ராவ் மிர்சாவை அரியணையில் ஏற்றிய பின் தனது சொந்த மகன் என்றும் பாராமல் சிறையில் தள்ளினார். மேலும் ஆத்திரம் அடங்காத அவர் தனது மகனை குருடனாக்கினார்.

ஷாஜஹான்

ஷாஜஹான்

ஷாஜகான் என்று பிரபலமாக அறியப்படும் இளவரசர் குர்ராம், தனது அன்பு மனைவி மும்தாஜ்க்கு கட்டிய தாஜ்மகாலுக்காக ஆத்மார்த்தமான காதலன் என்ற உருவத்தை அனுபவித்து வருகிறார். ஆனால் அவரது கடந்த காலத்திலிருந்து ஒரு மிருகத்தனமான உண்மை உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும். சிறையில் அடைக்கப்பட்ட பார்வையற்ற சகோதரர் குஸ்ராவ் மிர்சாவை அவர்தான் கொலை செய்தார். அரியணைக்கு யாரும் போட்டியாக வரக்கூடாது என்று இதை அவர் செய்தார்.

MOST READ: காமத்தைப் பற்றி நமது வேதங்கள் கூறியுள்ள சில அதிர்ச்சிகரமான ரகசியங்கள் என்ன தெரியுமா?

 ராச்சா வேமா ரெட்டி

ராச்சா வேமா ரெட்டி

அவர் ரெட்டி இராச்சியத்தின் கடைசி மன்னர் இவரும் கொடுமை செய்வதில் சாதாரணமானவர் அல்ல. ஒருமுறை தனது ஆணையை எழுதுவதற்காக உயிரோடு இருந்த ஒரு மனிதனின் தோலை இவர் உரித்தார். இவரது கொடுமைகள் எல்லைகள் அற்றதாக இருந்தது. இறுதியில் தன் மகனாலேயே இவர் கொல்லப்பட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts about India's Most Brutal Emperor Aurngzeb

Read to know some rare facts about India's most brutal emperor aurngzeb.
Story first published: Monday, January 6, 2020, 12:13 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more