Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
உங்களை சுற்றியும் உங்கள் வீட்டை சுற்றியும் இருக்கும் கண்திருஷ்டியை எளிதில் எப்படி விரட்டலாம்?
கண்திருஷ்டி என்பது ஒருவரின் முன்னேற்றத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும். அனைவருக்குமே தங்கள் மீது மற்றவர்களின் திருஷ்டி இருக்குமென்ற சந்தேகம் இருக்கும்.
ஒருவர் வாழ்க்கையில் முன்னேற அவர்களின் உழைப்பைப் போலவே அதிர்ஷ்டமும் கொஞ்சம் அவசியமாகும். கண்திருஷ்டி என்பது ஒருவரின் முன்னேற்றத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும்.

அனைவருக்குமே தங்கள் மீது மற்றவர்களின் திருஷ்டி இருக்குமென்ற சந்தேகம் இருக்கும். இந்த சந்தேகமே நம்முடைய நிம்மதியை கெடுத்துவிடும். உங்கள் மீதும் உங்கள் வீட்டின் மீதும் இருக்கும் திருஷ்டியை சில பரிகாரம் மூலம் சரி செய்துவிடலாம்.

தேங்காய் சடங்கு:
உங்கள் வலது கையில் ஒரு தேங்காயை எடுத்து, அதை மூன்று முறை உங்கள் தலைக்கு மேல் வட்டமிட்டு, உங்களைப் பாதிக்கும் மோசமான சக்திகளைக் கற்பனை செய்து பாருங்கள். தேங்காயின் கண்களை தீய கண்கள் என்று கற்பனை செய்து, உங்கள் வீட்டிலிருந்து விலகிச் செல்லும் சாலையில் தேங்காயை நொறுக்குங்கள். இதை ஒரு கோவிலிலும் செய்யலாம். இதையே உங்கள் வீட்டிற்கும் செய்யலாம்.

ஆரா சுத்திகரிப்பு
உங்களை விட வயதான ஒருவரை வைத்து ஒரு கற்பூரத்தை கொழுத்தி அதனை உங்கள் தலை முதல் கால் வரை மூன்று வரை சுற்றவும். அதன்பின் இந்த கற்பூரத்தை வீட்டைத்தாண்டி வைத்து விட்டு நீரில் குளிக்கவும். இது உங்களுக்கு புதிய ஆற்றலை வழங்கும்.

எலுமிச்சை சடங்கு
ஒரு எலுமிச்சையை எடுத்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை உங்கள் உடலின் மேல் இருந்து உங்கள் பாதத்தின் மேல் வரை தேய்க்கவும். பின்னர் அந்த பழத்தை இரண்டாக வெட்டி அப்புறப்படுத்தவும்.

முட்டை சடங்கு
கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்ட நபரை குணப்படுத்த மந்திரங்கள் அல்லது பிரார்த்தனைகளை உச்சரிக்கும் போது ஒரு முட்டையை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சுற்றவும். இந்த முட்டையை கூட்டு ரோட்டில் உடைக்கவும்.

கண்திருஷ்டியை விரட்ட
உங்கள் சொத்துக்கள் மீது மற்றவர்களின் தேவையற்ற கவனம் அல்லது கண்திருஷ்டியை தவிர்க்க உங்கள் வீட்டின் கதவு அல்லது நுழைவாயிலில் நீல நிற மணிகள் அல்லது வெந்தயத்தை தொங்கவிடவும்.

காந்தம்
ஒரு காந்தத்தை எடுத்து உங்கள் உடலுக்கு மேல் நகர்த்தவும், இறுதியாக உங்கள் காலில் முடித்து அந்த காந்தத்தை நெருப்பில் தூக்கி எறியவும். பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து கண்திருஷ்டியை இழுக்கும் சக்தி காந்தங்களுக்கு உண்டு.

கருப்பு சீரகம்
சில கருப்பு சீரக விதைகளை காகிதத்தில் அல்லது துணியில் போர்த்தி, பாதிக்கப்பட்ட நபரின் கண்களுக்கு முன்பாக பல முறை ஆட்டுங்கள். இந்த மூட்டையை நெருப்பில் எறியவும், விதைகள் வெடிக்கும்போது ஏற்படும் சத்தம் கண்திருஷ்டி விலகியதற்கான அர்த்தமாகும். எந்த சத்தமும் கேட்கவில்லை என்றால் கண்திருஷ்டி விலகவில்லை என்றால் மீண்டும் செய்யவும்.

கண்ணாடி சடங்கு
கண்திருஷ்டி எங்கிருந்து வந்ததோ அதை நேராக அதே இடத்திற்கு பிரதிபலிக்கும் சக்தி கண்ணாடிகளுக்கு உண்டு. வீட்டின் வாசலில் கண்ணாடி வைப்பது அல்லது உங்கள் ஆடையில் சிறிய கண்ணாடி இருப்பது உங்கள் மீது விழும் தேவையற்ற கண்திருஷ்டியை விலக்கும்.

பனை ஓலைகள்
21 பனை ஓலைகளை சேகரித்து ஒரு மாலை வடிவத்தில் கட்டவும், அதன்பின் பாதிக்கப்பட்ட நபரை சுற்றி அசைக்கவும்.பின்னர் ஒரு பானையில் மாலை, பழைய செருப்பு மற்றும் ஒரு விளக்கமாறை வத்து மூடி வைக்கவும். இந்த பானையை பாதிக்கப்பட்டவரின் அறையில் வைக்கவும். அடுத்தநாள் காலையில் பானையில் இருக்கும் பொருட்களை குறுக்குப்பாதையில் அப்புறப்படுத்திவிட்டு வீட்டிற்கு வெளியில் மாலையை கொளுத்தவும்.



Click it and Unblock the Notifications