Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
துர்கா தேவியின் சிலையை வடிவமைக்க ஏன் விபச்சார விடுதிகளில் இருந்து மண் கொண்டு வருகிறார்கள் தெரியுமா?
இந்து பாரம்பரியத்தின் படி, துர்கா தேவியின் சிலை உருவாக்கும் போது, கங்கையின் கரையில் உள்ள மண், மாட்டு சாணம், மாட்டு சிறுநீர் மற்றும் விபச்சார விடுதிகளிலிருந்து கொண்டு வரும் மண் ஆகியவை முக்கியமானவை.
துர்கா பூஜை அல்லது நவராத்திரி, இந்து மக்களால் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகை பார்வதி தேவியின் துர்கை வடிவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி என்பது ஒன்பது நாள் கொண்டாட்டமாகும். இது துர்கா தேவியின் ஒன்பது வெவ்வேறு வடிவங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியம் மற்றும் சடங்குகளின் படி, துர்கா தேவியின் சிலைகளை வணங்கி இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தெய்வங்களிலேயே துர்கா தேவியின் சிலைகள் பக்தர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று சொன்னால் தவறேதும் இல்லை. இத்தகைய துர்கா தேவியை நவராத்திரி பண்டிகையின் போது காண மக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்கிறார்கள். ஆனால் இப்படியான துர்கா தேவியின் சிலைகளை உருவாக்கும் போது, விபச்சார விடுதிகளில் இருந்து மண்ணைக் கொண்டு வந்து சிலைகள் தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா? ஆம், இது உண்மை தான்.

நான்கு முக்கிய விஷயங்கள்
இந்து பாரம்பரியத்தின் படி, துர்கா தேவியின் சிலை உருவாக்கும் போது, நான்கு விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. இவற்றில் கங்கையின் கரையில் உள்ள மண், மாட்டு சாணம், மாட்டு சிறுநீர் மற்றும் விபச்சார விடுதிகளிலிருந்து கொண்டு வரும் மண் ஆகியவை அடங்கும். இது இல்லாமல் சிலை முழுமையற்றதாக கருதப்படுகிறது.

ஏன் விபச்சார விடுதி மண்?
பாலியல் தொழிலாளர்களாக வேலை செய்து வாழ்ந்து வரும் விபச்சார விடுதிகளில் வாழும் பெண்களை மக்கள் அடிக்கடி பார்த்து வந்தாலும், சக்தி வாய்ந்த துர்கா தேவியின் சிலையை உருவாக்கும் போது, விபச்சார விடுதிகளில் இருந்து மண் எடுக்க வேண்டுமென கூறுவார்கள். ஏன் பூசாரிகள் மற்றும் சிலை வடிவமைப்பாளர்கள் கூட விபச்சார விடுதிகளுக்கு சென்று சிலைகளை உருவாக்க சிறிது மண்ணை பிச்சையாக கேட்பார்கள்.
இந்த நடைமுறையை பற்றி நீங்கள் ஆச்சரியப்பட்டால், அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

காரணம் #1
மக்கள் பாலியல் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நுழையும் போது, அவர்கள் தங்கள் பக்தியையும், சிக்கனத்தையும் தங்கள் வீட்டு வாசலில் விட்டுவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. அதே வேளையில் விபச்சார விடுதிகளின் வாசலைத் தாண்டியதும், அவர்கள் பாவம் மற்றும் தவறான பழக்கத்தைக் கொண்ட உலகிற்குள் நுழைகிறார்கள். எனவே தான் ஒரு விபச்சார விடுதியின் மண் மிகவும் உகந்ததாக கருதுகின்றனர்.

காரணம் #2
துர்கா தேவியின் சிலைகளை விபச்சார விடுதியின் மண்ணைக் கொண்டு செய்வதற்கு மற்றொரு காரணம், துர்கா தேவி மகிஷாசுரனுக்கு எதிராக சண்டையிட்ட போது, மகிஷாசுரன் துர்கா தேவியைத் தொட்டு துன்புறுத்த முயன்றார். இது துர்கா தேவியைக் கோப்படுத்தியது மற்றும் தீய நோக்கத்துடன் பெண்களைப் பார்க்கும் அல்லது பெண்களை இழிப்படுத்தும் அனைவரிடமும் உள்ள அரக்கனை அழிக்க துர்கா தேவி தனது முழு சக்தியையும் திறமையையும் பயன்படுத்தினார். இதனால் தான் சமுதாயத்தில் அவமதிக்கப்பட்ட பெண்களுக்கு கண்ணியத்தையும், மரியாதையையும் வழங்குவதற்காக துர்கா சிலையை உருவாக்க மக்கள் விபச்சார விடுதிகளிலிருந்து மண்ணை எடுத்துக் கொள்கிறார்கள்.

காரணம் #3
துர்கா தேவி பெண் சக்தியையும், வலிமையையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால், சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்கள், விபச்சார விடுதிகளில் வாழும் பெண்கள் கௌரவமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுகிறார்கள் என்பதை உணர்த்த துர்கா தேவியின் சிலையை வடிவமைக்க விபச்சார விடுதிகளில் இருந்து மண்ணை கொண்டு வருகிறார்கள். இது எந்தவொரு பெண்ணும் அவமானத்திற்கு ஆளாகக்கூடாது என்பதை காட்டுகிறது.

காரணம் #4
சொன்னால் நம்புவீர்களோ, இல்லையோ, துர்கா தேவியின் சிலைகளை செய்ய மண் கொண்டு வர விபச்சார விடுதிகளுக்கு செல்லும் போது, அங்கு வாழும் பெண்கள் மண் கொடுக்க ஒப்புக் கொள்ளும் வரை, மண் வாங்க சென்றவர்கள் பாலியல் தொழிலாளர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும். பாலியல் தொழிலாளர்கள் பூசாரிக்கு அல்லது மண்ணை வாங்க வருபவர்களுக்கு மண்ணைக் கொடுக்கும் போது, சிறப்பு மந்திரங்கள் சொல்லி கொடுப்பார்கள்.
இப்போது உங்களுக்கு எதனால் துர்கா தேவியின் சிலையை வடிவமைக்க விபச்சார விடுதிகளில் இருந்து மண்ணைக் கொண்டு வருகிறார்கள் என்பது தெரியும். இனிமேல் நீங்கள் இந்த பெண்களுக்கு அதிக மரியாதை கொடுப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.



Click it and Unblock the Notifications
