Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
இந்த விஷயங்களை புதன்கிழமைகளில் செய்தால் கையில் பணம் அதிகம் சேருமாம்... ட்ரை பண்ணி பாருங்க...
ஒருவருக்கு விநாயகரின் அருள் கிடைத்தால், அவருக்கு இருக்கும் பணப் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெரும். இப்போது புதன்கிழமைகளில் எந்த விஷயங்களை செய்தால் விநாயகரை மகிழ்வித்து அவரது அருளைப் பெறலாம் என்பதைக் காணலாம்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வழிபடுவதற்கான சிறந்த நாளாக கூறப்படுகிறது. அந்த வகையில் புதன் கிழமை விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் விநாயகரை முறையாக வழிபடுவதன் மூலம், அவரின் சிறப்பான அருளால் மகிழ்ச்சியும் செழிப்பும் வந்து சேரும். முதன்மை கடவுளான விநாயக பெருமானை எந்த ஒரு சுப காரியத்தை தொடங்கும் போதும் வழிபடுவது வழக்கம். விநாயகரின் அருள் கிடைத்தால், வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி, அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

இது தவிர ஒருவருக்கு விநாயகரின் அருள் கிடைத்தால், அவருக்கு இருக்கும் பணப் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெரும். இப்போது விநாயகருக்கு உரிய புதன்கிழமைகளில் எந்த விஷயங்களை செய்தால் விநாயகரை மகிழ்வித்து அவரது அருளைப் பெறலாம் என்பதைக் காண்போம்.

அருகம்புல்லை கொடுங்கள்
விநாயகருக்கு அருகம்புல் மிகவும் பிடிக்கும். விநாயகரை மகிழ்விக்க வேண்டுமானால், அவருக்கு பிடித்த அருகம்புல்லை வாங்கி கொடுங்கள். விநாயகருக்கு அருகம்புல்லை வழங்கி அர்ச்சனை செய்யும் பக்தர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். எனவே தினமும் விநாயகருக்கு அருகம்புல்லை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். இதனால் உங்கள் வேலையில் உள்ள தடைகளை விநாயகர் நிச்சயம் நீக்குவார்.

குங்குமத்தை பூசுங்கள்
விநாயக பெருமானை மகிழ்விக்க, புதன்கிழமைகளில் மறவாமல் அவருக்கு குங்குமத்தை பூசுங்கள். விநாயகருக்கு குங்குமத்தை பூசினால், அவர் மகிழ்ந்து, நல்ல ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் வழங்குவார். விநாயகருக்கு குங்குமத்தை பூசிய பின்னர், நீங்களும் உங்கள் நெற்றியில் குங்குமத்தை பூசிக் கொள்ளுங்கள். இப்படி தினமும் கூட செய்யலாம்.

பிரசாதம் செய்து படையுங்கள்
விநாயகருக்கு லட்டு மற்றும் மோதகம் என்றால் ரொம்ப பிடிக்கும். எனவே புதன்கிழமைகளில் இவற்றில் ஒன்றை விநாயகருக்கு படைத்து வணங்கினால், அவர் மகிழ்ச்சியடைந்து, உங்கள் வாழ்வில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி செல்வம் பெருக வழிவகை செய்வார்.

வன்னி மர இலைகளால் பூஜை செய்யுங்கள்
வன்னி ஒரு புனிதமான தாவரமாகும். இதன் இலைகள் சிவன், சனி மற்றும் விநாயருக்கு சிறப்பாக அர்ப்பணிக்கப்படுகின்றன. அதுவும் விநாயகருக்கு வன்னி மர இலைகளால் பூஜை செய்தால், எல்லையற்ற புண்ணியமும், விநாயகரின் அருளும் என்றென்றும் நிலைத்திருக்கும். வன்னி மர இலைகளால் விநாயகரை வழிபடுபவர் வாழ்வில் தோல்வியை சந்திக்கமாட்டாராம். ராமர் ராவணனை வெல்வதற்கு விநாயகரை வன்னி மர இலைகளால் வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

அட்சதை பயன்படுத்தவும்
நீங்கள் விநாயகரை விரைவில் மகிழ்ச்சியடைய செய்ய வேண்டுமானால், அவரை வழிபடும் போது பூஜையில் அட்சதையை பயன்படுத்துங்கள். அட்சதை என்பது உடைக்கப்படாத புனித அரிசி. அட்சதை இல்லாமல் கணபதி வழிபாடு முழுமையடையாது என்பது நம்பிக்கை. எனவே புதன்கிழமைகளில் விநாயகருக்கு பூஜை செய்யும் போது தவறாமல் அட்சதையைப் பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications