Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
தீபாவளி அன்று இவற்றில் ஒன்றை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகுமாம்... ட்ரை பண்ணி தான் பாருங்களேன்..
தீபாவளி பண்டிகை நாளில் ஒருசில பொருட்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் விலை குறைவான பொருட்களை வீட்டிற்கு வாங்கி வருவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புள்ளது.
இந்தியாவில் தீபாவளி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த தீபாவளி பண்டிகையின் போது செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி மற்றும் விநாயக பெருமானை மகிழ்விக்க மக்கள் பூஜைகளை செய்வார்கள். இப்படி செய்யும் பூஜையால் லட்சுமி தேவி மகிழ்ச்சியடைந்து தங்கள் வீட்டில் குடிபுகுவாள் என்பது நம்பிக்கை. பொதுவாக பண்டிகை என்றால் புதிய ஆடைகளை வாங்குவோம். சிலர் தீபாவளி பண்டிகையன்று தங்கம், வெள்ளி மற்றும் பிற பொருட்களை வாங்குவார்கள்.

ஆனால் தீபாவளி பண்டிகை நாளில் ஒருசில பொருட்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் விலை குறைவான பொருட்களை வீட்டிற்கு வாங்கி வருவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்போது தீபாவளி அன்று எந்த பொருட்களை வாங்குவது செல்வ நிலையை அதிகரிக்கும் என்பதைக் காண்போம். அவற்றை இந்த தீபாவளியில் நீங்களும் வாங்கி நன்மையைப் பெறுங்கள்.

மயில் இறகு
மயில் இறகு மங்களகரமான பொருளாக கருதப்படுகிறது. தீபாவளி நாளன்று இந்த மயில் இறகை வீட்டிற்கு கொண்டு வருவது அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. பொதுவாக மயில் இறகு வீட்டில் இருந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மேலும் வீட்டில் இருந்து கொண்டே பணிபுரிபவர்கள் வேலை செய்யும் இடத்தின் தென்கிழக்கு திசையில் மயிலிறகை வைத்திருந்தால், பணத்தட்டுப்பாடு நீங்கி, கையில் பணம் அதிகம் புரளும்.

லட்சுமி குபேரர் சிலை
தீபாவளி நாளில் லட்சுமியின் அருளைப் பெற லட்சுமி பூஜை செய்வது வழக்கம். இப்படி லட்சுமி பூஜை செய்வதாக இருந்தால், தீபாவளி நாளில் லட்சுமி குபேரரின் சிலையை வாங்கி செய்யுங்கள். அதுவும் தீபாவளி நாளன்று லட்சுமி குபேரர் போட்டோவை வீட்டின் பிரதான கதவில் வைப்பது நல்லது. இதனால் வீட்டில் லட்சுமியும், குபேரரும் குடிபுகுந்து வீட்டின் செல்வ நிலையை உயர வழிகாட்டுவார்கள்.

ஆமை சிலை
ஃபெங் சூயி படி, வீட்டில் ஆமை சிலையை வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் தீபாவளி நாளன்று உலோகத்தால் ஆன ஆமை சிலையை வீட்டிற்கு வாங்குவது மிகவும் நல்லது. இதனால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிப்பதோடு, செல்வ நிலையும் பெருகும்.

மண்பானை
தீபாவளி நாளில் வீட்டிற்கு மண்பானையை வாங்கி வருவது நல்லது. அதுவும் மண்பானையில் நீரை நிரப்பி, அதை வீட்டின் வடக்கு பகுதியில் வைத்திருந்தால், வீட்டில் உள்ள பண பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும்.

செம்பு அல்லது பித்தளை பிரமீடு
தீபாவளி நாளன்று ஒரு செம்பு அல்லது பித்தளை பிரமீடு வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த பிரமீடை வீட்டின் ஹால் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அதிகம் செலவிடும் பகுதியில் வையுங்கள். இது வீட்டில் உள்ளோரின் வருமானத்தை அதிகரிக்க உதவுவதாக கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications