For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெய்வீக மூலிகை மருதாணிக்கு சீதை கொடுத்த வரம் என்ன தெரியுமா?

மகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்து கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் அண்டாது

|

மருதாணி தெய்வீக மூலிகை வரிசையில் துளசியைப்போன்று மகாலட்சுமி வாசம் செய்யும் மருத்துவ குணம் கொண்ட செடியாகும். ஒரு பெண்ணின் கையில் இடும் மருதாணி விரைவில் சிவந்துவிட்டால் அவள் கணவன் அவள்மேல் அதிக காதலுடன் இருப்பான் என்றும் அதனால் தங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என பெற்றோர் பெருமை படுவர். கல்யாணத்திற்கு முதல் நாள் மருதாணி பூசிக்கொள்ளூம் பழக்கம் இப்படியாக ஏற்பட்டது.

Divine Herbal Maruthani Benefits And Purana Story

ஒரு பெண்ணிற்கு வரப்போகும் கணவனின் குணாதிசயங்களை இரண்டு விஷயங்களின் வாயிலாக அறிய முடியும் என நம் முன்னோர்கள் நம்பினார்கள். ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளின் வாயிலாக அறிவது. திருமணத்திற்கு இருக்கும் இளம் பெண்ணிற்க்கு மருதாணி இடுவதன் மூலம் அறிவது.

MOST READ: உங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா? அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...

மருதாணி சரியான நிறத்துடன் சிவந்தவர்களுக்கு குழந்தை பிறப்பு சரியான முறையில் இருக்கும் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது. சிலருக்கு ஆரஞ்சு நிறமாக பிடிக்கும். சிலருக்கு அடர் சிவப்பில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். சிலருக்கு கருத்தே போய்விடும். மருதாணி சிவக்காமல் மஞ்சள் குளித்தால் அது சீதள உடம்பை குறிப்பதாகும். அதிகம் கருத்துவிட்டால் அது பித்த உடம்பு என்கிறது. இரண்டு நிலைகளிலும் கருத்தரிப்பது தாமதமாகும் என்கிறது ஆயுர்வேதம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Divine Herbal Maruthani Benefits And Purana Story

The art of henna painting on the body has been practiced in India, Africa, and the Middle East, where the henna plant is believed to bring love and good fortune, and to protect against evil. If the henna on Friday in the mind of Lord Srimakalashmi and wearing his hand, no suffering will come close.
Story first published: Monday, January 20, 2020, 13:08 [IST]
Desktop Bottom Promotion