Just In
- 1 hr ago
மட்டன் சுக்கா
- 1 hr ago
இந்த சைவ உணவுகளால் உங்கள் ஆயுள் குறையும் ஆபத்து அதிகரிக்கிறதாம்... ஜாக்கிரதையா சாப்பிடுங்க...!
- 1 hr ago
பெண்களே! உங்க கணவன் ரொம்ப சந்தோஷமா இருக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 2 hrs ago
இந்த உணவுகளை மாம்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லன்னா அது கோமாவுக்கே கொண்டு போயிடும்..
Don't Miss
- Automobiles
விரக்தியில் கோடி ரூபா பிஎம்டபிள்யூ காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்ட நபர்! உண்மை என்னனு தெரிஞ்சா கவலைப்படுவீங்க!
- Movies
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த அவதூறு கருத்து.. ரோஜா சீரியல் நடிகை நேரில் ஆஜராக உத்தரவு!
- News
எந்த மொழியையும் திணிக்க கூடாது.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கையா நாயுடு முழக்கம்
- Sports
"யாருப்பா நீ விநோதமா பண்ற" விராட் கோலிக்காக ரசிகர் செய்த விஷயம்.. இதை சரியா கவனிச்சீங்களா??
- Technology
பிளிப்கார்ட் எலக்ட்ரானிக் விற்பனை 2022: முக்கிய ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!
- Finance
இந்தியாவில் இ-காமர்ஸ் வணிகம்: பேச்சுவார்த்தையை தொடங்கியது கூகுள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிசம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரங்க காதலில் புயல் அடிக்கப்போகுதாம்... எப்படியாவது தப்பிச்சிருங்க...!
ஒவ்வொரு மாதமும் நமக்கு ஒவ்வொரு விதமான ஆச்சரியத்தை வழங்க காத்திருக்கிறது. அந்த வகையில் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் உங்களுக்கு பல்வேறு விதமான ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் வழங்கப்போகிறது. குறிப்பாக உங்கள் காதல் வாழ்க்கையில் இந்த மாதம் பல திருப்பங்கள் ஏற்படலாம்.
உங்கள் ராசியின்படி இந்த மாதத்தில் உங்கள் காதல் வாழ்க்கையில் ஏற்படப்போகும் மாற்றம் உங்களுக்கு அதிர்ச்சி அல்லது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அதனை கிரக மாற்றங்களும், உங்களின் ராசியுமே நிர்ணயிக்கிறது. ஜோதிட நிபுணர்களின் கணிப்பின்படி, இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே உங்கள் காதல் வாழ்க்கை இந்த மாதம் உங்களுக்கு மிகுந்த கவலையைத் தரக்கூடும். உங்கள் துணையுடன் அல்லது நீங்கள் விரும்புபவருடன் சண்டைகள் ஏற்படலாம். இந்த மாதம் நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் அல்லது உங்கள் அமைதியை நீங்கள் பராமரிக்கவில்லை என்றால், நீங்கள் முற்றிலுமாக உங்கள் காதலை இழக்கலாம்.

ரிஷபம்
இந்த மாதம் உங்கள் துணையிடம் பல விஷயங்களை மறைப்பீர்கள். அந்த ரகசியங்கள் உங்கள் வேலை, நிதி அல்லது உங்கள் உணர்ச்சிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால் இது எதிர்காலத்தில் உங்களுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தும், ஏனென்றால் நீங்கள் அவர்களை நம்பவில்லை என்று உங்கள் துணை உணருவார்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே டிசம்பர் உண்மையில் உங்களுக்கான மாதமாக இருக்காது. உங்கள் காதல் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சில தடைகளை நீங்கள் பெரும்பாலும் சந்திப்பீர்கள். இதனால் உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியே கேள்விக்குறியாகிவிடும்.
MOST READ: இந்த 5 ராசிக்காரங்க எதிர்காலத்தில் சீக்கிரம் பணக்காரராகும் அதிர்ஷ்டம் உள்ளவங்களாம்...உங்க ராசி என்ன?

கடகம்
இந்த மாதம் உங்கள் துணையுடன் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து முடிவெடுப்பீர்கள். கடந்த காலத்தில் உங்கள் உறவை ஒரு படி மேலே கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை நீங்கள் அரிதாகவே உணர்ந்திருந்தாலும், அடுத்த கட்டத்தை எடுக்க வேண்டிய நேரம் இது என்பதை இந்த மாதம் உணர்வீர்கள்.

சிம்மம்
டிசம்பர் மாதம் உங்கள் காதல் வாழ்க்கையில் நிறைய மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் கொண்டு வரும். உங்கள் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம், இது உங்கள் உறவில் கசப்பை ஏற்படுத்தும். எனவே சூழ்நிலைகளை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி
2021 இன் கடைசி மாதம் உங்கள் காதல் உறவில் ஓரளவு வளர்ச்சியைக் கொண்டுவரும். உங்கள் உறவில் நீங்கள் உணர்ச்சிரீதியாக நிறைய முதலீடு செய்யப் போகிறீர்கள், அது நிச்சயமாக பாராட்டப்படும்.

துலாம்
இந்த மாதம் உங்கள் உறவில் பல மாற்றங்களைக் காணலாம், ஆனால் அந்த மாற்றங்கள் உங்களுக்கு சாதகமானதாக இருக்காது. பல எதிர்மறை சம்பவங்கள் உங்கள் காதலை சிதைக்கப் போகிறது, அது நல்லதாக இருக்காது.
MOST READ: ஓமிக்ரான் பிறழ்வு யாருக்கெல்லாம் விரைவில் வர வாய்ப்புள்ளது தெரியுமா? தடுப்பூசி நம்மை பாதுகாக்குமா?

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவோ அல்லது உங்கள் துணையிடம் திருமணத்தை முன்மொழிவதற்கோ நீங்கள் இறுதியாக தைரியத்தைக் காண்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியாயும் வழங்கும்.

தனுசு
திருமணமானவர்கள் அல்லது ஏற்கனவே உறவில் இருப்பவர்கள் டிசம்பர் மாதத்தில் தங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடுவதைக் காண்பார்கள். உங்கள் உறவைக் கொண்டாட உங்கள் துணையுடன் விடுமுறையைத் திட்டமிடுவீர்கள்.

மகரம்
உங்கள் காதல் வாழ்க்கை தொடர்பாக கடந்த காலத்தில் நீங்கள் எடுத்த சில முடிவுகள் உங்களுக்கு இந்த மாதம் விளைவுகளை ஏற்படுத்தும். கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட அந்த முடிவுகளால் சண்டைகள் இருக்கலாம் அல்லது உங்கள் துணை உங்களை விட்டு வெளியேறலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே இந்த மாதம் உங்கள் விதி உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் துணையுடன் கொண்டாட உங்களுக்கு பல காரணங்கள் இருக்கும். நீங்கள் ஒரு புதிய உறவில் ஈடுபடலாம் அல்லது உங்கள் உறவை வேறு நிலைக்கு கொண்டு செல்லலாம்.
MOST READ: இரத்தம் குடிக்கும் மூட்டைப்பூச்சிகளை ஒரேடியாக விரட்ட இந்த சமையலறை பொருட்களே போதுமாம் தெரியுமா?

மீனம்
மாதம் முழுவதும் உங்கள் வாழ்க்கையில் பலர் வருவார்கள், அவர்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் செய்ய அல்லது சொல்ல உங்களைப் பாதிக்க முயற்சிப்பார்கள். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் மற்றவர்களின் வார்த்தைகள் உங்களை பாதிக்க அனுமதித்தால் அது உங்கள் காதல் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.