Latest Updates
-
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்..
தாந்திரீகம் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகள்... உங்களுக்கு செய்வினை இருக்கானு எப்படி தெரிஞ்சிக்கறது?
இந்தியாவில் பில்லி, செய்வினை, ஏவல், சூனியம் போன்றவற்றின் மீது மக்களுக்கும் இன்றும் பயமும், நம்பிக்கையும் உள்ளது. இது ஒரு வகை மாந்திரீகம் ஆகும், இந்த மாந்திரீகம் என்பது ஒரு வகையான எதிர்மறை ஆற்றல் ஆகும்
Recommended Video
இந்தியாவில் பில்லி, செய்வினை, ஏவல், சூனியம் போன்றவற்றின் மீது மக்களுக்கும் இன்றும் பயமும், நம்பிக்கையும் உள்ளது. இது ஒரு வகை மாந்திரீகம் ஆகும், இந்த மாந்திரீகம் என்பது ஒரு வகையான எதிர்மறை ஆற்றல் ஆகும். இது ஒருவரின் வீட்டிற்குள்ளோ அல்லது உடலுக்குள்ளோ நுழைந்தோ அவர்களது ஆன்மாவின் செயல்பாட்டில் குறுக்கிட்டு பல இன்னல்களுக்கு அவர்களை ஆளாக்குகிறது.

இந்த தாந்திரீக செயல்பாட்டிற்கு பாதிக்கப்படுபவரின் அனுமதி என்பது தேவையில்லை. இது பாதிக்கப்படுபவரின் வாழ்க்கையில் மட்டுமின்றி இதனை செய்பவரின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. தார்மீகரீதியாக இது நீதிக்கு எதிரானது ஆனால் தனிப்பட்ட பேராசை மற்றும் பொறாமை காரணமாக மக்கள் இந்த செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த பதிவில் தாந்திரீகம் பற்றி தெரியாத பல தகவல்களைப் பார்க்கலாம்.

தாந்திரீகர்கள்
தாந்திரீக செயல்பாடுகளை அனைவராலும் எளிதில் செய்து விடமுடியாது. இவர்கள் எதிர்மறை ஆற்றல் மற்றும் ஆவிகளை இவர்களின் துர்செயல்களுக்காக பயன்படுத்திக் கொள்வார்கள். தாந்திரீகர்கள் என்பவர்கள் உலகிற்கு பயனளிக்காத செயல்களைச் செய்பவர் ஆவார். இவர்கள் உண்மையில் எதிர்மறை சக்தியைக் குவித்து, மனிதாபிமானமற்ற செயல்களுக்குப் பயன்படுத்துவார்கள்.

தாந்திரீகத்தின் அறிகுறிகள்
பேய்களையும், ஆத்மாக்களையும் காணக்கூடிய ஒரே நபர் தாந்த்ரீகர்கள் மட்டுமே. இவர்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்பவர்கள். இவர்கள் வாழ்க்கையில் அமைதி என்பதே இருக்காது, இவர்கள் இந்த ஆற்றலை பணத்துக்காகவும் செய்வார்கள்.

எப்படி செய்கிறார்கள்?
தாந்த்ரீகர்கள் எதிர்மறை சக்தியுள்ள ஆத்மாக்களை வேலை செய்யத் தயாராக வைத்திருப்பார்கள், அவை ஏற்கனவே அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கும். இவர்கள் குறிப்பிட்ட ஆன்மாவை அழைத்து அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி அதன்பின்னர் தாக்க வேண்டிய நபருடன் தொடர்புடைய சில பொருட்களை கொடுப்பார்கள். அவை அவர்களின் உடலுடன் தொடர்புடைய எந்த பொருளாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

ஆன்மாவின் சத்தியம்
தாந்திரீகர்கள் அழைக்கும் ஆன்மாக்களிடம் தங்களைப் பற்றிய எந்த தகவலையும் யாரிடமும் கூறக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொள்வார்கள். இந்த சத்தியத்தை செய்துவிட்டால் அவர் என்ன கூறினாலும் அந்த ஆன்மா அதனை செய்ய வேண்டும். இது பாதிக்கப்பட்டவரை பைத்தியக்காரத்தனமாக்குவது அல்லது கொலை செய்வது அல்லது அவரை கடுமையாக நோய்வாய்ப்படுத்துவது போன்றதாகக் கூட இருக்கலாம். தான் சென்ற வேலை முடிந்த பிறகு அந்த ஆன்மா திரும்பி வந்துவிடும்.

பாதிக்கப்படுபவர்கள்
செய்வினை, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் தனிமையில் இருக்க விரும்புவார்கள். எப்போதும் கோபமாகவும், எரிச்சலாகவும் காணப்படுவார்கள். தோள்பட்டை மற்றும் தலையில் எப்போதும் வலி இருக்கும், குளிப்பதை வெறுப்பார்கள்.

பாதிக்கப்பட்டதன் அறிகுறிகள்
ஏவல் என்று அழைக்கப்படும் ஆன்மாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனக்குதானே பேசிக்கொள்வார்கள், அவர்களின் கண்கள் சிவப்பாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பசி இருக்காது, கை மற்றும் கால்களை தொடர்ந்து இயக்கத்திலேயே வைத்திருப்பார்கள். வீட்டில் இருக்கும் துளசி செடி கருகும், அதற்குப்பிறகு மீண்டும் வளராது. இதில் குறைந்தது நான்கு அறிகுறிகள் இருந்தாலும் உங்களுக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது உறுதியாகிவிடுகிறது.

பரிகாரங்கள்
திங்கள் கிழமையில் வில்வ இலைகளை எடுத்து சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்யவும், இதனை செய்யும்போது மஹாமிருத்ஞ்சய மந்திரத்தை 9 முறை கூறவும், முடிந்தால் 108 முறை கூறவும். இதனை தொடர்ந்து 7 நாட்கள் செய்தால் உங்கள் மேல் இருக்கும் செய்வினை தானாக விலகிவிடும். இதிலிருந்து தப்பிக்க அனுமனை வழிபடுவது அவசியமானது.

காலக்கட்டம்
செய்வினை அல்லது ஏவல் நிரந்தரமானது அல்ல, குறிப்பிட்ட காலக்கட்டம்தான் இந்த பாதிப்பு இருக்கும். இந்த குறிப்பிட்ட காலக்கட்டம் முடிந்தவுடன் இதன் பாதிப்பு தானாக விலகிவிடும், ஆனால் அதற்குள் நீங்கள் எல்லையற்ற இன்னல்களை அனுபவித்து விடுவீர்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் முடிந்தவரை தைரியமாகவும், கடவுள் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications