Latest Updates
-
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம்
இந்த ரெண்டு ராசிக்காரங்கள எப்ப பார்த்தாலும் உங்களுக்குப் பஞ்சாயத்து தான்... அதுயார் தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
கடன்களைத் திருப்பி செலுத்துதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நினைத்த செயலை பல தடைகளையும் கடந்து வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல்கள் உண்டானாலும் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உங்களுடைய உடைமைகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் பெரியவர்களிடம் தகுந்த ஆலோசனைகளைக் கேட்கவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
பணியில் சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு உண்டாகும். பணியில் முக்கிய பிரபலங்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுப செய்திகள் வந்து சேரும். பணியில் நிம்மதியான சூழல்கள் உருவாகும். போட்டித் தேர்வுகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் செய்கின்ற தொழிலில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் இருந்து வந்த தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கூடும். சாமர்த்தியமாக நீங்கள் பேச நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கடகம்
மேலதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். எந்த முக்கிய முடிவுகளையும் பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யுங்கள். உடன் பணிபுரியும் சக பணியாளர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். பயணங்கள் மேற்கொள்ளும்போது கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கருநீல நிறமும் இருக்கும்.

சிம்மம்
வியாபாரத்தில் கொஞ்சம் விடாப்பிடியாகச் செயல்பட்டு சில பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். வாகன வசதிகள் பெருக வாய்ப்புண்டு. குடும்ப உறுப்பினர்களால் கொஞ்சம் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும்.

கன்னி
எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பணிபுரியும் இடங்களில் உங்களுக்கான பொறுப்புகளும் பணியில் மாற்றமும் தான் உண்டாகும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளினால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். காது தொடர்புடைய பிரச்னைகள் வரலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்
உறவினர்களிடம் கோபமாக நடந்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல்கள் உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் முடிவதில் கொஞ்சம் காலதாமதம் உண்டாகலாம். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாக நேரிடும். மற்றவர்களுடைய செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மை உண்டாகும். தாய்வழியிலான உறவுகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளின் மூலம் அனுகூலமான சூழல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

தனுசு
வேலை நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதன்மூலம் அனுதாபங்கள் உண்டாகும். தடைபட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் முனைவோருக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும். பெற்றோரின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய பலம், பலவீனம் இரண்டையும் உணர்ந்து கொள்ளும் நாள் இது. பயணங்களினால் உங்களுக்கு மனம் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல்கள் உருவாகும். செய்யும் தொழிலில் நீங்கள் செய்யும் புதிய மாற்றங்களால் லாபங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கும்பம்
வியாபாரத்தில் உங்களுடைய வாடிக்கையாளர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். உடன் பிறந்தவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களின் பணிகளையெல்லாம் சேர்த்து செய்ய வேண்டிய சூழல் உருவாகும். திருமண முயற்சிகள் கைகூடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மீனம்
சுப முயற்சிகள் கைகூடி வரும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்களில் உங்களுக்கு சாதகமான உதவிகள் உங்களுக்கு வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் எதிர்பாராத வருகையினால் கலகலப்பான சூழல்கள் உருவாகும். தன வரவு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications