Latest Updates
-
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க! -
சத்தான உளுந்தோரை ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க - எலும்பு இரும்பு மாதிரி இருக்கும் -
Kandha Sashti Viradham 2026: கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை! -
Hair Care: முடி நரைப்பதை தாமதப்படுத்தணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க -
ஆபீஸில் பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப உங்க ஆபீஸ் டேபிளில் இந்த பொருளை வாங்கி வையுங்க.. -
சூடான உணவை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும்? அப்படி வைப்பது பாதுகாப்பானதா? -
2027 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன் இந்த 3 ராசிக்காரர்களின் பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் 25-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப்போகுது!
குருவின் ஆதிக்கம் இன்று எந்த ராசிக்கு இருக்கிறது? யாருக்கு எதிராக இருக்கிறது?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள்.

இன்றைக்கு அதனால் அதிர்ஷ்டம் யாருக்கு. நஷ்டத்தில் யார் இருப்பார் என்பது தான் மிக முக்கியம். அப்படி எந்தெந்த ராசிக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் என்று பார்ப்போம்.

மேஷம்
உங்களிடம் நெருக்கமாக இருந்தவர்களால் பல இன்னல்கள் அடைந்திருப்பீர்கள். அதன்மூலம் இருந்து வந்த துன்பங்கள் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் பிள்ளைகளின் மூலமாக மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். உடல் நிலையைப் பொறுத்தவரையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் பல புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். அரசு அதிகாரிகளுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

ரிஷபம்
மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, அதில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எதையும் செய்ய வேண்டும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட பணிகளில் கொஞ்சம் முன்னேற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மிதுனம்
ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு அலைச்சல்கள் இருக்கும். ஆனாலும் உங்களுடைய பணிகளுக்கான ஆதரவுகள் பெருகும். தொழில் சம்பந்தமாக புதிய முதலீடுக்ள போடுவதில் கொஞ்சம் கவனமாக இருங்கள். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பணி சம்பந்தப்பட்ட விவகாரங்களைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கடகம்
போட்டித் தேர்வுகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதிகாரம் சார்ந்த பதவிகளில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பெற்றோருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுக்கான புதிய இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். தொழிலில் புதிய புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

சிம்மம்
தொழில் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் பெற்றாவது தொழிலை அபிவிருத்தி செய்கின்ற பொழுது, சிந்தித்து முடிவு எடுங்கள். நிர்வாகம் சம்பந்தப்பட்ட செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். அடுத்தவர்களைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம்அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
நீண்ட நாட்களாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்த செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வெளியூருக்குப் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். நீங்கள் விரும்பிய இட மாற்றங்களால் பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்
எந்த செயல்களைச் செய்தாலும் பதட்டம் ஏதும் இல்லாமல் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்கவும். பயணங்களின் போது, உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தாய்வழியிலான உளவினர்களிடம் உங்களுக்கு உதவி கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். நெருங்கிய நபர்களின் மூலமாக தேவையற்ற வீண் அலைச்சல்கள் உண்டாகும். இணையதளங்கள் சம்பந்தப்பட்ட முதலீடுகளில் லாபங்கள் உண்டாகும். எதிர்பாலின மக்கள் இனத்தவர்களால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் அமையும். எடுத்த காரியத்தை நீங்கள் தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருகின்ற எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
தொழிலில் தொடர்நது இருந்து வருகின்ற சில இன்னல்களைக் கடந்து வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள். பணிபுரியும் இடத்தில் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அலைச்சல்கள் இருந்தாலும் இறுதியில் நல்ல லாபமே கிடைக்கும். மனதுக்குள் வித்தியாசமான எண்ணங்கள் வந்து தோன்றும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறைந்தாலும் நிறைய பாராட்டுக்கள் வெளியிடங்களில் இருந்து வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்
இதுவரையில் நிலுவையில் இருந்து வந்த வழக்குகளில் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். புதிய வீடு கட்டுவதற்கோ அல்லது மனைகள் வாங்குவதற்கான முயற்சிகள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளரின் அறிமுகத்தினால் லாபங்கள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.

கும்பம்
நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகள் உங்கள் கைக்குக் கிடைக்க கொஞ்சம் காலதாமதம் ஆகும். பெற்றோர்களுடைய விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் பணிகளை விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

மீனம்
எந்த காரியமாக இருந்தாலும் அதை செய்வதற்கு முன் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றியை நோக்கிச் செல்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பாராத பண உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் லாபம் உண்டாகும். வாடிக்கையாளர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
