Latest Updates
-
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா?
இந்த 2 ராசிக்காரங்க கிட்ட எந்த வம்பும் வச்சிக்காதீங்க...
சந்திரன் இன்றைய தினம் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்றைய தினம் யாருக்க பணவரவு அதிகமாக இருக்கும், யாருக்கு செலவு வரும், வேலை வாய்ப்பு நன்றாக இருக்கும
சந்திரன் இன்றைய தினம் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்றைய தினம் யாருக்க பணவரவு அதிகமாக இருக்கும், யாருக்கு செலவு வரும், வேலை வாய்ப்பு நன்றாக இருக்கும் புது வேலை கிடைக்கும் என்று இன்றைய ராசி பலனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
சந்திரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்னைக்கு நீங்க நினைச்ச காரியம் நிறைவேற சில தடைகள் வரலாம், பூர்வீக சொத்துக்களால் வீண் விரையங்கள் வரலாம் கவனமாக இருங்க. உறவினர்கள் கூடப்பிறந்தவர்களால் நன்மைகள் நடக்கும். வேலை விசயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். இன்னைக்கு நீங்க வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சொந்தக்காரங்க வீட்டிற்கு வருவார்கள். உங்க உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 10:00 மணிவரை

ரிஷபம்
சந்திரன் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. இன்றைக்கு உங்களுக்கு வீண் விரையங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் வரும். திடீர் உதவிகள் தேடி வரும். உடன் இருப்பவர்களை அனுசரித்து போங்க. செலவுகள் அதிகமாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். தொழில் வளர்ச்சிக்கு பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். இன்றைக்கு குடும்ப செலவுகள் அதிகமாகும். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்து போங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : நண்பகல் 12:55 முதல் இரவு 7:00 மணிவரை

மிதுனம்
சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்றைக்கு வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். கொடுத்த கடன் திரும்ப வரும். பிள்ளைகளால் சுப செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சுப காரியங்கள் கைகூடும். மன அமைதி ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 30
சாதகமான நேரம் : விடிகாலை 4:10 முதல் பிற்பகல் 3:50 மணிவரை

கடகம்
சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பணவரவு அதிகமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் கிட்டும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும், உறவினர்கள் மூலம் மனதில் சங்கடங்கள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : மாலை 6:15 முதல் இரவு 11:00 மணிவரை

சிம்மம்
சந்திரன் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். இன்று பணவரவு அமோகமாக இருக்கும். சேமிப்பும் அதிகமாகும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நேரம் : காலை 9:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கன்னி
சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வேலையில் இன்று எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். நண்பர்களின் உதவியால் சிக்கல்கள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை. உங்களுக்கு இன்றைக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் விரைய செலவுகள் வரலாம் சிக்கனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : விடிகாலை 5:20 முதல் மாலை 5:00 மணிவரை

துலாம்
சந்திரன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். வேலையில் நீங்கள் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் நன்மைகள் நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 38
சாதகமான நேரம் : காலை 8:25 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

விருச்சிகம்
சந்திரன் இன்றைக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். உங்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 6:05 முதல் இரவு 9:30 மணிவரை

தனுசு
சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வேலைகளை முடிப்பதில் தாமதங்கள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். உத்தயோக ரீதியான வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். அலுவலகத்தில் இன்று மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்லுங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 31
சாதகமான நேரம் : மாலை 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

மகரம்
சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் இரவு 8:05 மணிவரை

கும்பம்
சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். உங்களுடைய செயல்கள் உற்சாகத்தை தரும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். வங்கி சேமிப்பு உயரும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : காலை 9:00 முதல் நண்பகல் 12:00 மணிவரை

மீனம்
உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். கடன்கள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்வீர்கள். தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : விடிகாலை 5:00 முதல் பிற்பகல் 2:00 மணிவரை



Click it and Unblock the Notifications











