Latest Updates
-
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்
சூரிய பகவான் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் அற்புதம்...
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்னு சொல்வாங்க. இப்ப இருக்கிற சூழ்நிலையில பணத்தை விட ஆரோக்கியமான வாழ்க்கைதான் முக்கியம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்னு சொல்வாங்க. இப்ப இருக்கிற சூழ்நிலையில பணத்தை விட ஆரோக்கியமான வாழ்க்கைதான் முக்கியம். ஞாயிறு கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ஆரோக்கியம் எப்படி இருக்கும் யாருக்கெல்லாம் மருத்துவ செலவு வரும் என்று பார்க்கலாம்.

மேஷம்
இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க நல்ல ஒத்துமையா வேலை செய்வாங்க. சொந்தக்காரங்க உதவியால உங்க கடன் பிரச்சனையும் காணாம போகும். பிள்ளைங்களும் ரொம்ப பொறுப்போட நடந்துக்குவாங்க. வீட்டுக்கு தேவையான புது பொருட்களையும் வாங்குவீங்க. கடந்த ரெண்டு நாளா இருந்து வந்த பிரச்சனை இன்னிக்கு முடிவுக்கு வந்துடும். அதனால எந்த வேலையையும் நீங்க ரொம்ப சுறுசுறுப்பா செய்வீங்க. குடும்பத்துலயும் சந்தோஷம் திளைக்கும். வியாபாரிகளுக்கு சிக்கல்கள் தீரும். லாபம் வரும். செல்வம் செல்வாக்கு உயரும். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : இரவு 7:55 முதல் இரவு 9:40 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, மனசுல புதுசா குழப்பமும், கவலையும் வந்து உக்காந்துடும். கூடுமானவரை வெளியூர் பிரயாணத்தை அவாய்ட் பண்றது நல்லது. செய்யுற வேலையில இடைஞ்சல், தடங்கல்னு வந்து முட்டுக்கட்டை விழும். உத்தியோகத்துல சீனியர் அதிகாரிங்க கிட்ட பக்குவமா நடந்துக்குறது நல்லது. ஆரோக்கியத்தில கவனமாக இருங்க மருத்துவ செலவுகள் வந்து விடும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு கல்யாணம், சுபகாரிய பேச்சுவார்த்தையில இருந்து வந்து முட்டுக்கட்டைகள் விலகி வழிவிடும். ஆடம்பர பொருட்களை வாங்குவீங்க. சொந்தக்காரங்க கூட இருந்து வந்த மனஸ்தாபம் மறையும். உத்தியோகத்துல சில பேத்துககு எதிர்பாத்த இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும். பிசினஸ்ல முக்கிய பிரமுகர்களோட அறிமுகம் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பத்தில் இன்றைக்கு குதூகலமாக இருப்பீர்கள். இன்றைக்கு வெற்றிகரமான நாள். எதிர்களின் தொல்லை நீங்கும். உடல் ஆரோக்கியம் உற்சாகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : நண்பகல் 12:55 முதல் மாலை 6:30 மணிவரை

கடகம்
இன்னிக்கு எதிர்பாத்த பேங்க் லோன் சுலபமா கிடைக்கும். ரொம்ப நாளா இழுபறியா இருந்து வந்த பழைய பாக்கி தொகையும் கைக்கு வந்துடும். பண வரத்து கூடுதல இருக்குறதுனால, பேங்க் பேலன்ஸும் கூடும். புதுசா எடுக்குற முயற்சிகள் வெற்றியை கொடுத்துடும். பிசினஸ், வியாபாரத்துல போட்டு வச்ச முதலீட்டுக்கு லாபம் கிடைக்கும். சிலருக்கு வேலை விஷயமா வெளியூர் பிரயாணம் போறதுக்கு வாய்ப்பு கிடைக்கும். சொந்தக்காரங்களால குடும்பத்துலயும் மகிழ்ச்சி பொங்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 37
தகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு உத்தியோகத்துல இருக்குறவங்க ரொம்ப சுறுசுறுப்பா இருப்பீங்க. கூடப்பொறந்தவங்க உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க. சொந்தக்காரங்க மூலமா இனிப்பான செய்திகள் உங்களை குஷிப்படுத்தும். கவர்மெண்ட் வழியில எதிர்பாத்த உதவியும் கிடைக்கும். குடும்பத்துல பிள்ளைங்க மூலமா மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்துடும். பூர்வீக சொத்து பத்து மூலமா லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 22
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:30 மணிவரை

கன்னி
இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா எடுக்குற புதிய முயற்சிகளுக்கு கூட்டாளிங்களோட சப்போர்ட் கிடைக்கும். இன்னிக்கு எந்த விஷயத்துலயும் நீங்க ரொம்ப எச்சரிக்கையோடவும், பொறுப்போடவும் நடந்துக்குறது நல்லது. மத்தவங்க கூட இருந்து வந்த மனஸ்தாபங்கள் இன்னிக்கு படிப்படியா குறையும். ஹெல்த் கண்டிஷன்லயும் சின்னச்சின்னதா பிரச்சனைகள் வரலாம் கவனமாக இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : நண்பகல் 12:55 முதல் மாலை 6:30 மணிவரை

துலாம்
இன்னிக்கு பிசினஸ் ரீதியா இருந்து வந்த நெருக்கடிங்க குறையும். அதனால உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் அற்புதமா இருக்கும். கூடவே கடன் பிரச்சனையும் குறையும். பிள்ளைங்களோட படிப்புலயும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஃப்ரண்ட்ஸுங்க உதவியால உத்தியோகத்துல இருந்து வந்த சிக்கல் காணாம போகும். குடும்பத்துலயும் சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். ஆரோக்கியமான நாளாக இன்றைக்கு அமையும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு எந்த விஷயத்துலயும் ஒரு தடவைக்கு நாலு தடவை நிதானமா யோசிச்சி செய்யுறது நல்லது. அதே மாதிரி உங்க பேச்சுவார்த்தையிலும் நிதானத்தோட நடந்துக்குறது அவசியம். குடும்பத்துல நீங்க விட்டுக்கொடுத்து தன்மையா நடந்துகிட்டா பிரச்சனை பெருசாகாம தப்பிக்கலாம். பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் வர்றதுல தடங்கல் வரும். இன்னிக்கு பண வரத்தும் சுமார் ரகம் தான்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 12:20 முதல் மாலை 5:00 மணிவரை

தனுசு
இன்னிக்கு பிசினஸ்ல புதுசா சேர்ற கூட்டாளிங்களால நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்து பத்துனால வருமானம் வரும். இன்னிக்கு மத்தவங்க கூட பேசும்போது எச்சரிக்கையோட இருக்க வேண்டியது அவசியம். எதையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சி பேசுறது நல்லது. சுபகாரிய முயற்சிகள்ல நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சொந்தக்காரங்க வர்றதுனால குடும்பத்துலயும் மகிழ்ச்சி திளைக்கும். உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : முற்பகல் 10:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மகரம்
இன்னிக்கு உத்தியோகத்துல சீனியர் அதிகாரிங்களோட கெடுபிடிகள் அதிகமா இருக்கும். கூட வேலை பாக்குறவங்களை அனுசரிச்சி நடந்துக்குறது நல்லது. இன்னிக்கு பண வரத்து இருந்தாலும், எதிர்பாக்காம திடீர் செலவு வந்துடும். பிசினஸ்ல திடீர்னு தண்டச்செலவுங்க வந்துடலாம். குடும்பத்துல எல்லோரையும் அனுசரிச்சி போனீங்கன்னா தேவையில்லாத பிரச்சனைகள் வராம தவிர்த்துடலாம்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : அதிகாலை 5:30 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

கும்பம்
இன்னிக்கு சுபகாரிய நிகழ்ச்சிக்காக போற வெளியுர் பிரயாணம் வெற்றிகரமா முடியும். புதுசா நகை நட்டு வாங்குற யோகம் கிடைக்கும். பழைய பாக்கிகளும் இன்னிக்கு வசூலாகிடும். பிசினஸ்லயும் வியாபாரம் அமோகமா நடந்து தாராள பண வரத்து இருக்கும். குடும்பத்துலயும் பிரச்சனை தீந்து சந்தோஷம் பொங்கிடும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : அதிகாலை 4:15 முதல் நண்பகல் 12:00 மணிவரை

மீனம்
இன்னிக்கு பிசினஸ்ல எதிர்பாத்த மாதிரி வியாபாரம் பெருகி லாபம் அமோகமா இருக்கும். உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் அற்புதமா இருக்கும். வீட்டோட தேவைகளும் இன்னிக்கு பூர்த்தியாகிடும். வருமானமும் கூடுதலா இருக்கும். அதனால உங்க பேங்க் பேலன்ஸும் கணிசமா கூடும். குடும்பத்துக்குள்ளாற பாசம் கூடும். உத்தியோகத்துல வேலைச்சுமை இருந்தாலும், டென்ஸன் இல்லாம ரொம்ப ரிலாக்ஸா வேலைய பாருங்க. கணவன் மனைவிக்கு நடுவுல அந்நியோன்யம் கூடும். சந்தோஷமான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 3
தகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை



Click it and Unblock the Notifications